• Home  /  
  • Learn  /  
  • பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு
பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு

பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு

19 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பெரியவர்களை விட பிள்ளைகளுக்கு ஏன் அடிக்கடி வயிற்றுப்போக்கு உண்டாகிறது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்குமே உண்டு. இந்த அவுகரியத்திலிருந்து அவர்களை எப்படி விடுவிப்பது என்பதும் அம்மாக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வியே. ஆனாலும், இந்த வயிற்றுப்போக்குக்கு நம்முள் பலர் வீட்டு வைத்தியங்களை மட்டுமே செய்கின்றோம். இது குறித்த விரிவான அலசல் தான் இந்த பதிவு.

 

எதனால் வயிற்றுப்போக்கு உண்டாகிறது?

1. தொற்று

பெரும்பாலும் பிள்ளைகளுக்கு வரும் வயிற்றுப்போக்குக்கு முக்கியமான காரணம் வைரஸ், பாக்டீரியா போன்ற ஒட்டுண்ணிகள் தான். ஒருவேளை நம்முடைய பிள்ளைகள் தண்ணியாக வயிற்றுப்போக்கு போனால், இரைப்பை குடல் அழற்சியாக கூட இருக்கலாம். இதோடு வாந்தி எடுத்தல், வயிற்றுவலி, தலைவலி, காய்ச்சல் போன்றவையும் அவர்களுக்கு இருக்கலாம்.

 

2. உணவு நஞ்சாதல்

பிள்ளைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாக இதுவும் ஒரு காரணம் தான். வாந்தி உடன் கூடிய அறிகுறிகள் வந்து, அதன்பின்னர் 24 மணி நேரத்தில் சரியாக வாய்ப்புள்ளது. இதற்கு நாம், நம் பிள்ளைகளின் உடலை நீர்சத்து நிறைந்ததாக வைத்திருப்பது நல்லது.

 

வயிற்றுப்போக்கு இருந்தால் என்ன செய்வது?

1. வாழைப்பழம்

வயிற்றுப்போக்குக்கு காரணம், நம்முடைய பிள்ளைகளின் உடலில் உள்ள பொட்டாசியச்சத்து குறைவதே. வாழைப்பழத்தில் பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் B6 போன்றவை உள்ளது. அதனால், வயிற்றுப்போக்கு இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் வாழைப்பழம் தரலாம்.

 

2. ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் உள்ளதால் பிள்ளைகளின் வயிற்று இயக்கத்தை சரிசெய்ய உதவுகிறது. ஆப்பிளை சுத்தம் செய்துக்கொள்ளவும். பின்னர், தண்ணீரில் வேக வைக்கவும். அதனை நன்றாக கூழ் போல ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களால் ஜீரணிக்க முடியும். இது அவர்களின் வயிற்றுப்போக்கை சரி செய்வதோடு, இழந்த ஆற்றலையும் திரும்ப பெற உதவுகிறது.

 

3. மோர்

மோர், கிருமிகள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடும் குணம் கொண்டது. இது நம்முடைய பிள்ளைகளின் செரிமான மண்டலத்தை எளிதில் சரி செய்கிறது. கொஞ்சமாக உப்பு மற்றும் மிளகு சேர்த்து நம்முடைய பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். 8 மாதங்களுக்கு மேலுள்ள பிள்ளைகளுக்கு மட்டுமே நாம் இதனை கொடுக்க வேண்டும்.

 

4. தேங்காய் தண்ணீர்

வயிற்றுப்போக்கு உள்ள நம்முடைய பிள்ளைகளுக்கு தேங்காய் தண்ணீர் நாம் கொடுக்கலாம். இது சுவையானது மட்டுமல்ல, அவர்கள் இழந்த நீர் ஆற்றலை மீண்டும் பெறவும் இது உதவுகிறது. தினமும், 2-3 முறை தேங்காய் தண்ணீரை நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.

 

5. தயிர்

வீட்டில் செய்த தயிரை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். இதனில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருக்கிறது. இது நம்முடைய பிள்ளைகளுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது உதவும் பாக்டீரியாவும் கூட. வீட்டில் செய்த லெஸியும் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

 

6. கேரட் ஜூஸ்

வயிற்றுப்போக்கு போகும் பிள்ளைகளுக்கு நீர்ச்சத்து அவசியம் வேண்டும். கேரட் இந்த நேரத்தில் ஆற்றலை வழங்க வல்லது. பகல் நேரத்தில் கேரட்டை ஜூஸாகவோ அல்லது கேரட்டை மசித்து கூழாகவோ நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். பிள்ளைகள் ஒரு வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே, கேரட் ஜூஸ் கொடுக்க வேண்டும்.

 

7. லெமன்

இது பெரும்பாலோனோர் வீட்டிலுள்ள ஒரு பொருளே. இது நம்முடைய பிள்ளைகளின் வயிற்றுப்போக்குக்கு அற்புதமான மருந்தும் கூட. ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை 4 முதல் 5 முறை கொடுக்கலாம். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பிரச்சனை குணமாகக்கூடும்.

 

8. தாய்ப்பால்

ஆம், இதையும் வயிற்றுப்போக்குள்ள நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கலாம். தாய்ப்பாலில் எதிர்ப்பு சக்தி இருப்பதால், நம்முடைய பிள்ளைகள் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் குணமாகிறார்கள். நீங்கள் தாய்ப்பால் மற்றும் பார்முலா பால் தருவதாக இருந்தால், வயிற்றுப்போக்கு சமயத்தில் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கலாம். பார்முலா பாலை அவர்களால் ஜீரணிக்க சிரமமாக இருக்கும்.

தோழிகளே, உங்களின் பிள்ளைக்கும் அடிக்கடி வயிற்றுப்போக்கு போகிறதா? நீங்கள் எந்த மாதிரியான வீட்டு வைத்தியத்தை எல்லாம் முயல்கிறீர்கள்? அது பலனளித்தால், நீங்களும் மற்ற அம்மாக்களுடன் அந்த அருமையான வைத்தியத்தை பகிர்ந்துக்கொள்ளலாமே.

#childhealth

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.