பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய மசாஜ்

பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய மசாஜ்

19 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிள்ளைகளுக்கு செய்யப்படும் மசாஜ் வெறும் ஆரோக்கியத்துக்கானது மட்டுமல்ல. இது தாய்க்கும், பிள்ளைக்கும் உண்டான உறவை பலப்படுத்தும் ஒரு விஷயமும் கூட. நாம், நம்முடைய பிள்ளைக்கு மசாஜ் செய்வதால், அவர்கள் போதிய ஓய்வில் இருக்கக்கூடும். அதோடு சிறந்த தூக்கத்துக்கும் இது உதவுகிறது. ஆய்வுகள், இது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் கூறுகிறது. இப்போது பேபி மசாஜ் பற்றிய கூடுதல் தகவல்களை நாம் காணலாம் வாருங்கள்.

 

உறவை பலப்படுத்தும்

நம்மையும், நம்முடைய பிள்ளைகளையும் அருகில் வரவழைத்து பாசத்தை பரிமாறிக்கொண்டு அழகுபார்க்க மசாஜ் உதவுகிறது. நாம் அவர்களை தொடும்போது, அதனில் ஒரு அக்கறையை அவர்கள் உணர்வார்கள்.

பேபி மசாஜால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய பயன்கள்

  • அவர்களின் வாயு தொல்லைக்கு நல்லது
  • வயிற்று பிடிப்புக்கு நல்லது
  • கோலிக் பிரச்சனையை சரிசெய்யும்
  • மலச்சிக்கலை குணப்படுத்தும்

 

அவர்களுக்கு உடலில் வலி இருந்தால், பல் முளைக்கும்போது உண்டாகும் வலி போன்றவற்றிற்கு மசாஜ் மிகவும் நல்லது. அதேபோல நம்முடைய பிள்ளைகளுக்கு மசாஜை தொடங்குவதற்கு முன்பு, டாக்டர் ஆலோசனை பெறுவது அவசியம்.

 

பேபி மசாஜை எப்போது தொடங்குவது?

அவர்கள் பிறந்து சில வாரங்களில் நாம் மசாஜை ஆரம்பிக்கலாம். அவர்களுக்கு மசாஜ் செய்வதற்கு முன்பாக, அவர்கள் அமைதியாக தான் இருக்கிறார்களா? இது மசாஜ் செய்ய ஏற்ற நேரமா? என்பதை முதலில் நாம் முடிவு செய்ய வேண்டும். அதேபோல பாலூட்டிய பிறகு குறைந்தது 45 நிமிடங்களில் நிச்சயம் மசாஜ் செய்ய கூடாது என்கிறது ஆய்வுகள். அவர்களுக்கு சாப்பிட்டவுடனே மசாஜ் தருவதால் வாந்தி எடுக்க வாய்ப்புள்ளது.

 

பேபி மசாஜை எப்போது செய்வது?

ஒரு சில அம்மாக்கள் தினமும் தன் பிள்ளைகளுக்கு பேபி மசாஜ் செய்வார்கள். சில அம்மாக்கள், ஒரு நாள் விட்டு ஒரு நாளும் பேபி மசாஜ் செய்வார்கள். நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு காலை வேளையிலோ, அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன்போ பேபி மசாஜ் செய்யலாம். அவர்களுக்கு விருப்பம் இல்லாத போது நாம் மசாஜ் செய்ய முயல கூடாது.

 

பேபி மசாஜ் செய்ய சில வழிகள்

1. சூழல் அவசியம்

அமைதியான இடமாக இருக்க வேண்டும், அதோடு வெதுவெதுப்பான இடமாகவும் இருத்தல் நல்லது. அவர்கள் முதுகில் டவலை வைக்கவும், அப்போது தான் நம்முடைய கண்களை அவர்கள் பார்க்க தொடங்குவார்கள். அவர்களின் டிரெஸ்ஸை நாம் கழட்டும்போது, போக போக இது மசாஜ் செய்வதற்கான நேரம் என்பதை புரிந்துக்கொள்ளவும் தொடங்குகிறார்கள்.

 

2. மெதுவாக தொடங்கவும்

அவர்களை குப்புற படுக்க வைத்து, ஒவ்வொரு உடல் பாகமாக மெல்ல மசாஜ் செய்ய தொடங்கவும். நீங்கள் தொடுவது மிகவும் மென்மையாக இருப்பதை உறுதிசெய்யவும்.

ஒவ்வொரு உடல் பாகத்தையும் கொஞ்ச நேரமாவது மசாஜ் செய்யவும். அவர்கள் தலையிலிருந்து மெல்ல தொடங்கி, கால் பாதம் வரை மெல்ல மசாஜ் செய்யவும். அவர்கள் என்ஜாய் செய்யும்போது கூடுதலாக கொஞ்சம் மசாஜ் செய்யலாம் நாம். அவர்கள் வயிற்று பகுதியில் அதிகமாக மசாஜ் செய்வதை தவிர்க்கவும். இதனை அவர்கள் விரும்பாமல் போகலாம்.

 

3. மீண்டும் செய்யவும்

அவர்கள் நன்றாக என்ஜாய் செய்யும்போது, தலை முதல் கால் வரை மீண்டும் நாம் அதேபோல செய்ய தொடங்கலாம்.

 

4. அவர்களிடம் பேசவும்

மசாஜ் செய்யும்போது, அமைதியாக இல்லாமல் ஏதாவது பேசியபடி இருக்கவும். அவர்கள் பெயரை உச்சரிப்பது, ‘ரிலாக்ஸ்’ போன்ற வார்த்தைகளை சொல்வதென நாம் செய்யலாம்.

நாம் கதை கூட கூறலாம் அல்லது ரைம்ஸ் கூட பாடலாம்.

 

5. விருப்பப்பட்டால் ஆயில் பயன்படுத்தலாம்

பல அம்மாக்கள் எந்த மாதிரியான ஆயிலை பிள்ளைகளுக்கு பயன்படுத்துவது என தெரியாமல், தவிர்க்க செய்வார்கள். ஒருவேளை ஆயில் தடவ நீங்கள் நினைத்தால், வாசனை அல்லாத, சாப்பிடக்கூடிய வகையில் இல்லாத ஆயிலை டாக்டர் பரிந்துரையுடன் வாங்கி பயன்படுத்தலாம். முதலில், நம்முடைய பிள்ளைகளின் சருமத்தின் ஒரு சின்ன பகுதியில் இந்த ஆயிலை தடவி அது அலெர்ஜி ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை பார்த்து அதன்பிறகு முடிவு செய்யவும்.

நாம் பிள்ளைகளின் மேல் வைக்கும் பாசத்தை பல மடங்காக பெருக்குவது தான் பேபி மசாஜ் என்பது. அவற்றை குறித்த பல தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை நாங்கள் சந்திக்கிறோம்

#babymassage

A

gallery
send-btn

Related Topics for you