5 முதல் 8 வயது பிள்ளைக்கான பொம்மைகள்

5 முதல் 8 வயது பிள்ளைக்கான பொம்மைகள்

20 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த விஷயம் பொம்மைகள் தான். அவர்கள் எப்போதுமே விதவிதமான பொம்மைகளை வைத்து விளையாடவே ஆசைப்படுவார்கள். நம்முடைய பிள்ளைகளின் அறிவாற்றல் திறனை வளர்க்கும் பொம்மைகளை நாம் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு வாங்கி தருவது நல்லது. அவை என்னவெல்லாம் என்பதை நாம் இப்போது பார்ப்போம் வாருங்கள்.

 

1. வுடன் பிளாக்குகள்

இந்த மரத்தால் ஆன பிளாக்குகளை வைத்து நம்முடைய பிள்ளைகள் கட்டிடங்கள் கட்டி விளையாடுவார்கள். இவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது, அவை விழவும் வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் மனம் தளராமல் மீண்டும் அவற்றை அடுக்கி விளையாட செய்கிறார்கள்.

 

2. லெகோ பிரிக்ஸ்

இது நம்முடைய பிள்ளைகளின் கற்பனை ஆற்றலை வளர்க்க உதவும் ஒரு பொம்மையாகும். இதனில் சிறு சிறு துண்டுகளாக நிறைய இருக்கும். அவற்றைக்கொண்டு நம்முடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் உருவாக்குவார்கள். இது பல புதிய பொருட்களை அவர்கள் உருவாக்கி அதன் மூலமாக மகிழ்ச்சியடைய உதவுகிறது.

 

3. மேக்னெட்டிக் டைல்ஸ்

வடிவத்தை அறியவும், கிரியேட்டிவ் ஆற்றல் வளரவும், தசைகளின் இயக்கத்துக்கும் இந்த பொம்மை உதவும். இதனை கொண்டு நம் பிள்ளைகள் கியூப்கள், பிரமிட்கள் என பல வடிவத்தை உருவாக்குகின்றனர். முப்பரிமாண தோற்றமுடைய வடிவங்களையும் நம்முடைய பிள்ளைகள் உருவாக்க முயல்கின்றனர். இது பல வண்ணங்களில் வருகிறது.

 

4. பேன்சி டிரெஸ்

டாக்டர் டிரெஸ், போலீஸ் டிரெஸ் என பல விதமான பேன்சி டிரெஸ்ஸுகளை நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் வாங்கி கொடுக்கலாம். இதனால், அந்த டிரெஸ்ஸின் பயன்பாடுகளை அவர்கள் புரிந்துக்கொள்ள உதவியாக உள்ளது.

 

5. வாகன பொம்மைகள்

நம்முடைய பிள்ளைகளுக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் வேன் போன்றவற்றை நாம் வாங்கி கொடுக்கலாம். இதன் மூலமாக ஆம்புலன்ஸ் வரும்போது மற்ற வாகனங்கள் அதற்கு வழிவிட வேண்டும், டிராபிக் சிக்னல்களை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

இன்னொரு உதாரணம் என்னவென்றால், ஒரு பேருந்து பொம்மையையும், அதற்குள் அமரும் பயணிகள் போன்றவற்றை வாங்கி ஆண்கள், பெண்கள் எந்த வழியில் ஏற வேண்டும், எப்படி வரிசையாக ஏற வேண்டும் போன்ற விஷயங்களை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தரலாம்.

 

6. விலங்கு பொம்மைகள்

இதனை கொண்டு ஒரு குட்டி அருங்காட்சியகத்தையே நாம் நம்முடைய பிள்ளைகளுக்காக உருவாக்கலாம். இதன் மூலமாக விலங்குகளை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வை இந்த வயதிலேயே நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்தலாம்.

 

7. பிக்கி பேங்க்

இதனை கொண்டு நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்க வழக்கத்தை உண்டாக்கலாம். இந்த பொம்மையில் ஒரு நாய், நாம் வைக்கும் நாணயத்தை உள்ளே கொண்டு சென்று சேமிக்கும். இதனை நம்முடைய பிள்ளைகள் நன்றாக என்ஜாய் செய்வார்கள்.

 

8. குட்டி துடைப்பங்கள்

இது நம்முடைய பிள்ளைகளுக்கு சுகாதாரத்தை கற்பிக்க உதவும் ஒரு பொருளாகும். அவர்களுக்கு குட்டி துடைப்பங்கள், பிரஷ் போன்றவற்றை வாங்கி தந்து வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்பதை சொல்லி கொடுக்கலாம்.

 

9. சிறிய மண் பாண்டங்கள்

இது நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். இதனை கொண்டு அவர்களால் ஒரு மினி சமையறையையே உருவாக்க முடிகிறது. இதனை கொண்டு நம்மை போலவே நம்முடைய பிள்ளைகளாலும் குட்டி குட்டி காய்கறிகளை கொண்டு சாம்பார் வைப்பது, பொரியல் செய்வது என பலவற்றை செய்து அசத்த முடியும். இது தான் அவர்களுக்கு சமையல் மீது ஆர்வம் வரவைக்கும் ஒரு விளையாட்டும் கூட.

 

10. டாக்டர் செட் பொம்மைகள்

இதனில் பொம்மை ஊசி, சிரஞ்சி, ஸ்டெதஸ்க்கோப் போன்றவை இருக்கும். இதனை நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது, அவர்கள் தன்னை ஒரு மருத்துவராகவே கற்பனை செய்துக்கொள்ள தொடங்குகின்றனர்.தல் 8 வயது பிள்ளைக்கு எந்த மாதிரியான பொம்மைகளை நாம் வாங்கி தந்து அழகுபார்க்கலாம் என்பதை இந்த பயனுள்ள பதிவின் மூலமாக நாம் அறிந்தோம். இன்னொரு நல்ல பதிவுடன் மீண்டும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babytoys

A

gallery
send-btn

Related Topics for you