• Home  /  
  • Learn  /  
  • பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்: ராகி பிஸ்கட்
பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்: ராகி பிஸ்கட்

பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க சூப்பர் ஸ்நாக்ஸ்: ராகி பிஸ்கட்

21 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகளின் செரிமான மண்டலம் மேம்பட்ட பிறகு ராகியை அறிமுகப்படுத்துவது நல்லது. ராகியில் பலவித ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நம்முடைய பிள்ளைகளின் உடல் எடைக்கும் உதவக்கூடிய ஒன்றாகும். இது நம் பிள்ளைகளின் எலும்பு, பல் என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவக்கூடிய ஒரு உணவும் கூட. இதிலுள்ள கால்சியம் நம்முடைய பிள்ளைகளின் எலும்பு வலுப்பெற உதவுகிறது. இப்போது இந்த ராகியை கொண்டு ஒரு பிஸ்கட் செய்து நம் பிள்ளைகளை எப்படி மகிழ்விப்பது என்பதை இப்பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு – 1 கப்
  • சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய் பவுடர் – ½ டேபிள்ஸ்பூன்
  • இஞ்சி பவுடர் – 2 சிட்டிகை
  • ரைஸ் பிரான் ஆயில் – ½ கப்
  • முட்டை – 1 (உடைத்தது)
  • உப்பு – ½ டேபிள்ஸ்பூன்

 

ராகி பிஸ்கட் செய்வது எப்படி?

1. கடாயில், ராகி மாவு மற்றும் ஏலக்காய் பவுடரை மிக்ஸ் செய்துக்கொள்ளவும்.

2. இதனை தவாவில் வைத்து லேசான டார்க் கலர் வரும் வரை வறுக்கவும். (ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வறுக்கலாம்)

3. ஒரு பாத்திரத்தில், உடைத்த முட்டையை ஊற்றிக்கொள்ளவும்.

4. அதனோடு, கலந்த ராகி மற்றும் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவும்.

5. நன்றாக கிண்டவும்.

6. இப்போது இஞ்சி பவுடர் மற்றும் உப்பை அதனுடன் சேர்க்கவும்.

7. அதன்பிறகு, ஆயில் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இது பார்ப்பதற்கு அடர் நிற மாவாக இருக்கும்.

8. அவற்றை பந்தாக உருட்டி, உள்ளங்கையால் தட்டி தட்டையாக ஆக்கி கொள்ளவும்.

9. ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அடுப்பில் சுட வைக்கவும். தேவைப்பட்டால் வெண்ணெய் தடவிக்கொள்ளலாம்.

10. பிறகு, வட்ட வடிவத்தில் பிஸ்கட் போல அதனை வெட்டிக்கொள்ளவும்.

11. 8 முதல் பத்து நிமிடங்களுக்கு சுட வைக்கவும்.

12. அவ்வளவு தான் சுவையான ராகி பிஸ்கட் இதோ ரெடி.

 

ராகியால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கால்சியம் கிடைக்கிறது:

இது நம்முடைய பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகும். அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும்போது தான் முறிவு போன்ற பிரச்சனைகள் எளிதில் வரும். அதோடு நம்முடைய உடலில் உள்ள இரத்தத்தையும் உற்பத்தி செய்ய ராகி உதவுகிறது.

 

செரிமானத்துக்கு நல்லது:

இது நம் பிள்ளைகளின் செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. அதோடு, நம் பிள்ளைகளின் உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்ளவும் செய்கிறது.

 

இரும்புச்சத்து:

ராகி நம்முடைய பிள்ளைகளுக்கு இரத்த சோகை வராமல் பார்த்துக்கொள்கிறது. இது நம் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.

 

ஓய்வை தருகிறது:

ராகியில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு, நம் பிள்ளைகளுக்கு வரும் பதட்டம், தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

 

சருமம் & கூந்தலை மேம்படுத்தும்:

ராகி, நம் பிள்ளைகளின் சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

ராகியில் வேறு என்னவெல்லாம் நாம் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கலாம்?

ராகி இட்லி

1. உளுத்தம் பருப்பை தண்ணீரில் சுத்தம் செய்து எட்டு முதல் ஒன்பது மணி நேரம் ஊற வைக்கவும்.

2. அவலை மூன்று முதல் நான்கு மணி நேரம் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.

3. ஊறவைத்த உளுத்தம் பருப்பை பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

4. அதேபோல, ஊறவைத்த அவலையும் பேஸ்ட்போல் அரைத்துக்கொள்ளவும்.

5. ஒரு தனி கிண்ணத்தில், ராகி மாவை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் ஆக்கிக்கொள்ளவும்.

6. இந்த அரைத்த உளுத்தம் பருப்பையும், அவலையும் அதனோடு கலந்துக்கொள்ளவும்.

7. இதனை இரவு முழுக்க வைத்துவிடவும்.

8. அடுத்த நாள் காலை, துருவிய கேரட்டை மிக்ஸ் செய்துக்கொள்ளவும்.

9. இட்லி மாவு பயன்படுத்த ரெடியாகிவிட்டது.

10. இதனோடு கொஞ்சமாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

11. இட்லி குக்கரில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்தால் சுவையான ராகி இட்லி ரெடி.

 

இன்னும் ஏன் வெயிட் பண்ணுறீங்க, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த அற்புதமான ராகி உணவை செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாமே.

#instantrecipes #childnutrition

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.