நம் பிள்ளைகளுக்கு இனிப்பு வேண்டாம்! ஹெல்தியாக இருக்க இதுவே போதும்!

cover-image
நம் பிள்ளைகளுக்கு இனிப்பு வேண்டாம்! ஹெல்தியாக இருக்க இதுவே போதும்!

செயற்கை இனிப்புக்கள் நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியத்தை ஒருபோதும் தருவதல்ல. இதனால் பாக்டீரியாக்கள் போன்றவை அவர்கள் உடலில் உற்பத்தி ஆக வாய்ப்புள்ளது. இதனால் சர்க்கரை அளவு உடலில் அதிகரித்தல், உடல் பருமன், கல்லீரல் பாதித்தல் போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.

பிள்ளைகள் எப்போதும் இனிப்பை விரும்பி சாப்பிட ஆசைக்கொள்வார்கள். ஆனால், செயற்கை இனிப்புக்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு ஆரோக்கியமானதல்ல. இது அவர்களின் எதிர்ப்பாற்றலை குறைக்க கூடியது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து, உடல் பருமன், கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளை உண்டாக்க கூடும்.

எவற்றை நம் பிள்ளைகளுக்கு மாற்றாக கொடுக்கலாம்?

1. பேரிட்சை பழம்

சர்க்கரைக்கு பதிலாக பேரிட்சை பழத்தை அரைத்து நாம் அவர்களுக்கு சேர்த்து கொடுக்கலாம்.

 

2. தென்னை சர்க்கரை

தென்னை சர்க்கரையும் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்லது. இதனில் மினெரல்கள், துத்தநாகம், இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை உள்ளது. டேபிள் சுகரை காட்டிலும் இது சிறந்ததே.

 

3. தேன்

தேனையும் நாம் செயற்கை சர்க்கரைக்கு பதிலாக உபயோகிக்கலாம். தேனில் ஃபிரக்ட்டோஸ், ஷுகர், ஆக்சிஜனேற்ற பண்பு உள்ளது. தேன், நம்முடைய பிள்ளைகளுக்கு வரும் இருமலுக்கு நல்லது. ஒரு வருடத்திற்கு முன்பாக தேன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

 

4. மசித்த ஆர்கானிக் பழம்

பிள்ளைகளுக்கு செயற்கை இனிப்புக்கு பதிலாக இதனையும் நாம் கொடுக்கலாம். பழங்களில் பெரும்பாலும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உள்ளது. குறிப்பாக செயற்கை இனிப்புக்கு பதிலாக நாம் வாழைப்பழம், ஆப்பிள், பெர்ரி பழங்களை பயன்படுத்தலாம்.

 

5. உலர்ந்த திராட்சை பழ சிரப்

இன்னொரு இயற்கை இனிப்பூட்டி இதுவாகும். பொதுவாக ஒரு வருடம் கழித்து இதனை நாம் நம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். ஆனாலும் மிக குறைந்த அளவே இதனை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது செயற்கை இனிப்பை காட்டிலும் அதிக சுவையுடன் உள்ளது. இதனை நம்மால் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். சில மணி நேரங்கள் இந்த உலர் திராட்சையை ஊறவைத்து மசித்துக்கொள்ளவும். இதனை 2 முதல் 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து நம் பிள்ளைகளின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

6. வெல்லப்பாகு

இதையும் நாம் பயன்படுத்தலாம். இது, சர்க்கரைக்கிழங்கு அல்லது கரும்பு சாறிலிருந்து பெறப்படுவதாகும். இது தேனுக்கு மாற்று உணவு பொருளும் கூட.

 

7. கருப்பட்டி வெல்லம்

ஜீனியில் எந்த சத்துமே இல்லை என்பதால் உங்கள் வீட்டிலும் ஜீனியின் பயன்பாட்டை கணிசமாக குறைப்பது நல்லது. அதற்கு பதிலாக கருப்பட்டி வெல்லம் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, ஜீனியில் டீ போட்டு குடிப்பதற்கு பதிலாக கருப்பட்டி வெல்லத்தில் எல்லோருக்கும் போட்டுக்கொடுத்து பழக்கலாம். இது ஆரோக்கியமானதே.

 

சர்க்கரை இல்லாமல் கேக் செய்ய முடியுமா?

ஆம், செய்ய முடியும். இதற்கு சர்க்கரைக்கு பதிலாக நாம் தேனை தேர்ந்தெடுத்து செய்யலாம்.

 

எப்படி சர்க்கரையை நாம் தவிர்ப்பது?

1. சோடா, பாக்கெட்டில் உள்ள ஜூஸ், எனெர்ஜி டிரிங்க்ஸ் போன்றவற்றிற்கு பதிலாக தண்ணீர், பிரெஷ்ஷான பழ ஜூஸ் போன்றவற்றை அவர்களுக்கு நாம் கொடுக்கலாம்.

2. சர்க்கரையில் செய்த உணவுக்கு பின்னான இனிப்புக்கு (டெசர்ட்) பதிலாக, பிரெஷ்ஷான பழங்கள், பேரிட்சை, டார்க் சாக்லேட் போன்றவை நாம் கொடுக்கலாம்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுக்கு பதிலாக முழு உணவை கொடுக்கலாம். உதாரணத்துக்கு, தானிய பிஸ்கட் போன்றவை.

4. பெரும்பாலும் காலை உணவில் சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்கவும்.

5. எந்தவொரு பொருளை வாங்கும் முன்பும், அதனில் உள்ள சர்க்கரை அளவை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 

நம்முடைய பிள்ளைகளுக்கு இனிமேலாவது சர்க்கரை சேர்ப்பதை குறைத்து, இயற்கை இனிப்புக்களான வெல்லம், தேன், பேரிட்சை சாறு போன்றவற்றை சேர்ப்போம் வாருங்கள். நன்றி, வணக்கம்.

#childhealth #childnutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!