நம் பிள்ளைகளின் டிஃபன் பாக்ஸில் எதெல்லாம் இருக்க வேண்டும்?

cover-image
நம் பிள்ளைகளின் டிஃபன் பாக்ஸில் எதெல்லாம் இருக்க வேண்டும்?

நம்முடைய பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவை எல்லாம் டிஃபன் பாக்ஸில் வைத்துக்கொடுப்பது என்ற குழப்பம் எல்லா அம்மாக்களுக்குமே இருக்கும். நம்முடைய பிள்ளைகள் ஸ்கூல் போகும் ஒவ்வொரு பருவத்திலும், வித்தியாச வித்தியாசமான உணவு டிஃபன் பாக்ஸில் இருக்க வேண்டுமெனவே எதிர்பார்ப்பார்கள். என் பிள்ளைக்கு கூட ஒரே மாதிரியான உணவை டிஃபன் பாக்ஸில் அடிக்கடி வைத்துக்கொடுத்தால் பிடிக்காது. சில சமயம், சாப்பிடாமல் அப்படியே கொண்டு வரவும் செய்தாள். அப்போது நான் முயன்ற ஒரு சில யோசனைகளை தான் இந்த பதிவில் பகிர்கிறேன். அவை என்னவென இப்போது நாம் பார்ப்போமா!

 

பிள்ளைகளின் டிஃபன் பாக்ஸை நிரப்ப என்ன மாதிரியான ஐடியாவை பின்பற்றலாம்?

1. பிள்ளைகளுடன் அமர்ந்து திட்டமிடுதல்

இது சற்று நீளமான பணி என்றாலும், இதனால் நம்மையும், நம் சமையல் வேலையின் கடினங்களையும் நம்முடைய பிள்ளைகளும் புரிந்துக்கொள்வார்கள். அவர்களுடன் சேர்ந்து என்ன உணவு கொண்டு செல்வது என்பது குறித்து கலந்துரையாடும்போது நிச்சயம் அவர்கள் அதனை விரும்பி ஏற்றுக்கொள்வார்கள்.

15 நாட்களுக்கு அவர்கள் என்னவெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை அவர்களுடனே அமர்ந்து கலந்துரையாடலாம். அப்படி செய்யும்போது, அவர்களுக்கு பிடிக்காத உணவுகளை நம்மால் அறிந்து கொள்ளவும் முடியும்.

அவ்வாறு நீங்கள் திட்டமிடும்போது, முடிந்தவரை அதனில் பருப்பு வகைகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்ளவும். ஒருவேளை அவர்கள் பழமாக சாப்பிட பிடிக்கவில்லை என்று சொன்னாலும், பழத்தை வைத்து ஒரு டிஃபனை நாம் அவர்களுக்கு செய்து கொடுக்கலாம். பழங்களை எக்காரணம் கொண்டு பட்டியலில் இருந்து நீக்க வேண்டாம். இவை, அவர்களுக்கு தேவையான கார்போஹைட்ரேட், வைட்டமின் போன்றவற்றை வழங்குகிறது. பருவக்கால பழங்களையும், அவை ஒரு பருவத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் சொல்லி பயனுள்ள பழங்களை நாம் அவர்கள் டிஃபன் பாக்ஸில் சேர்க்கலாம்.

 

2. அடிக்கடி ஆயில் உணவை கொடுக்காதீர்கள்

அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஸ்கூலுக்கு அடிக்கடி ஆயிலில் செய்த உணவை கொடுத்து விடாதீர்கள். இது அவர்களை ஸ்கூலில் மந்தமாக இருக்க செய்துவிடும். முடிந்தளவு, ஃபிரைட் ரைஸ், நூடுல்ஸ், சாஸ் இதெல்லாம் அவர்களுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்க்கவும். சீஸ் மற்றும் ஜாமை குறைந்தளவு கொடுக்கலாம், தவறொன்றுமில்லை.

 

3. பிரேக்கில் சாப்பிட கொடுக்கலாம்

பழங்களை வெட்டி கொடுப்பது, வறுத்த வேர்க்கடலை, வீட்டிலேயே செய்த சிப்ஸ் போன்றவற்றை நாம் அவர்களின் ஸ்கூல் இடைவேளைக்கு கொடுத்து அனுப்பலாம். ஆனால், சிப்ஸ் போன்றவை கொடுக்கும்போது குறைந்தளவில் கொடுத்தனுப்புவது நல்லது.

 

4. ஊட்டச்சத்து அவசியம்

அவர்களுடைய டிஃபன் பாக்ஸை ரெடி செய்யும்போது, ஒவ்வொரு வேளையும் அவற்றுள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இருப்பதை நாம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். பருவ கால பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் என அவர்களுக்கு அலெர்ஜி ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்து நாம் கொடுக்க வேண்டும். அதோடு அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீரையும், வாட்டர் பாட்டிலில் வைத்துவிட வேண்டும். அவர்கள் அசைவ பிரியராக இருந்தால், அதனையும் அவர்கள் டிஃபன் பாக்ஸில் நாம் சேர்க்கலாம்.

 

ஸ்நாக்ஸ் ஆக நாம் கொடுக்க வேண்டியவை எவை?

 • பழங்கள்
 • கலப்பான பருப்பு வகைகள்
 • பட்டர் பிரெட்
 • முழு தானிய பிரெட்
 • மினி இட்லி
 • தானிய கப் கேக்
 • கோதுமை பிஸ்கட்
 • வேகவைத்த சோளம்
 • ரவா லட்டு
 • உலர்ந்த திராட்சை
 • பீட்ரூட் வடை
 • கீரை வடை
 • பன்னீர் டிக்கா

 

லன்ஞ் ஆக நாம் கொடுக்க வேண்டியவை?

 • அவல்
 • உப்புமா
 • வெஜ் ரைஸ்
 • பீட்ரூட் ரைஸ்
 • வெஜிடபிள் புலாவ்
 • லெமன் ரைஸ் + சாலட்
 • தோசை
 • ஊத்தப்பம்
 • சோயா கபாப்
 • தக்காளி சாதம் + வேர்க்கடலை
 • ஆப்பிள் சாதம்
 • புதினா ரைஸ்

 

இதோ சில சூப்பர் டிப்ஸ்,

1. பிள்ளைகள், எப்போதுமே உணவகங்களில் கொடுக்கப்படும் மெனுவில் காணும் புதிய பெயர்களை ரசித்து அந்த உணவை வாங்கி ருசிக்க விரும்புவார்கள். அதே ஐடியாவை நாம் வீட்டிலும் பின்பற்றலாம். உதாரணத்திற்கு, ஒரே வகையான உணவை சாப்பிட்டு அவர்கள் அலுத்துப்போய் இருந்தால், அப்போது அந்த உணவில் சிறு மாறுதல்கள் செய்து அதற்கு ஒரு பெயரையும் நாம் வைக்கலாம். உடனே அது ஏதோ புதிய உணவென்று நம்பி, அவர்களும் ஆர்வத்துடன் சாப்பிட செய்வார்கள்.

2. நம் பிள்ளைகளுக்கு கொடுத்தனுப்பும் டிஃபன் பாக்ஸ், பேக் செய்த போது எப்படி இருந்ததோ, அப்படியே இருப்பதை உறுதி செய்யவும். ஆம், அதன் நிறம் மாறினாலோ, வாசனை மாறினாலோ நம்முடைய பிள்ளைகளுக்கு அதனை முழு மனதோடு சாப்பிட மனம் வராது. கிச்சடி செய்துக்கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இதனை அவர்களால் நிச்சயம் நிம்மதியோடு சாப்பிட முடியாது.

3. தானிய பிஸ்கட்டுகளை கொடுக்கும்போது ஒரே வடிவத்தில் கொடுக்காமல், வித்தியாச வித்தியாசமாக அதனை வெட்டி கொடுக்கலாம். தோசை போன்றவை கொடுக்கும்போதும் இதே முறையை நாம் பின்பற்றலாம்.

உங்களுடைய பிள்ளைகளின் டிஃபன் பாக்ஸில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமென்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tiffinrecipes
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!