அறிவியல் ஆர்வம் நம் பிள்ளைகளுக்கு வர அருமையான டிப்ஸ்

cover-image
அறிவியல் ஆர்வம் நம் பிள்ளைகளுக்கு வர அருமையான டிப்ஸ்

இந்த உலகிலேயே ஆர்வத்துடன் அதிகமாக கேள்விகளை கேட்பவர்கள் நம்முடைய பிள்ளைகள் தான். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மில் யாராலும் பதில் சொல்ல முடியாது. காரணம், ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் முன்பே அடுத்த கேள்வியை அவர்கள் தயாராக வைத்திருப்பார்கள். ஆனாலும், அவர்களின் எதிர்காலத்தில் இவை எங்கு தான் செல்கிறது. நாம் சரியான ஆதரவை தந்தால், அவர்களும் ஒரு நாள் நிச்சயம் சிறந்த விஞ்ஞானி ஆகலாம். அதற்கு நாம் என்னவெல்லாம் செய்வது? இப்போது பார்ப்போம் வாருங்கள்.

 

அறிவியல் ஆர்வம் பிள்ளைகளுக்கு வர என்ன செய்ய வேண்டும்?

1. கேள்விக்கு மதிப்பளியுங்கள்

ஒருவேளை நம்முடைய பிள்ளைகள், ‘அம்மா, நிலா ஏன் நம்முடன் பின்தொடர்ந்து வருகிறது.’ என்று கேட்டால், உலகம் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடனும் அவர்கள் இருக்கலாம் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது போன்ற கேள்விகளை உங்களிடம் அவர்கள் கேட்கும்போது எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாதீர். உங்களுக்கு பதில் தெரியாவிட்டாலும், இதனை வேடிக்கையாக கையாள்வதே புத்திசாலித்தனம்.

 

2. பதிலை கண்டறியுங்கள்

நம்முடைய பிள்ளைகள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் கூட பதில் இருக்காது என்பதே உண்மை. ஒரு சில கேள்விகளை அவர்கள் கேட்கும்போது நாம் ஆச்சரியப்படவும் செய்வோம். அவர்கள் கேட்கும் கேள்விகளை நாம் இன்டர்நெட்டில் ஆராய்ந்து பார்த்தால் ஒருவேளை பதில் கிடைக்கலாம். இதனால் அவர்கள் மூலமாக நாமும் ஒரு சில விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்பதே உண்மை. அவர்களுடன் சேர்ந்து நாமும் பதில் தேடும்போது, நம்மை அவர்கள் நம்பி பல விஷயங்களை எப்போதும் பகிர்ந்துக்கொள்ளவும் தொடங்குகின்றனர்.

 

3. பிள்ளைகளுக்கு நேரம் கொடுத்தல்

அவர்கள் எப்போதும் பிழைகளை செய்து தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்கள் பிழை செய்யும்போது நாம் ஊக்குவிக்கனுமே ஒழிய, திட்ட கூடாது. அதேபோல அவர்கள் தவறு செய்யும்போது மற்றவர்கள் உடன் அவர்களை ஒப்பிட்டு எதுவும் சொல்லவும் கூடாது. இது அவர்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்க வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

 

4. சகித்துக்கொள்ளுதல்

அவர்கள் களி மண்ணில் விளையாடி அழுக்காக வந்தாலும், அவர்கள் செய்த விஷயங்களை நாம் கவனித்து பாராட்ட வேண்டும். டிரெஸ்ஸை அழுக்காக்கி விட்டார்கள் என பேச தொடங்கினால், மீண்டும் வெளியில் சென்று விளையாட பயந்துக்கொண்டு டிவி பார்க்கவோ அல்லது மொபைல் பார்க்கவோ தொடங்கி விடுவார்கள்.

 

5. தவறை ஏற்றுக்கொள்ளுதல்

அவர்கள் ஏதாவது தவறாக செய்யும்போது, அதனை மென்மையாக புரியவைக்கவும். ‘நானும் இதனை செய்தேன், எனக்கும் இதுபோல தவறு நேர்ந்தது’, என சொல்லி, அதன்பிறகு அதற்கான தீர்வை காண்பது அவர்கள் நம்பிக்கையை மென்மேலும் வளர்க்க உதவும். இது அவர்களுடன் உண்டான புரிதலை அதிகரிக்கவும் செய்கிறது.

 

6. ஆர்வத்தை அதிகரிக்க செய்தல்

அறிவியல் தான் நம்முடைய பிள்ளைகளின் ஆர்வத்தை அதிகரிக்க செய்வதற்கான அஸ்திவாரம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அவர்கள் ஆராய்ந்து, கேள்விகளை கேட்க தொடங்கும்போது, ஆக்கப்பூர்வமான சிந்தனை பல மடங்கு வளர தொடங்குகிறது. அவர்கள் இந்த மாதிரியான கேள்விகளை கேட்கும்போது அதிலிருந்து இன்னொரு விஷயத்தை கற்றுக்கொள்ள நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். உதாரணத்திற்கு, இரப்பர் டியூப் தண்ணீரில் மிதக்கும்போது, ‘இதேபோல தான் சோப்பும் தண்ணீரில் மிதக்கிறதே, ஏன்?’ என கேட்டு அவர்கள் ஆர்வத்தை தூண்டலாம்.

 

7. அடுத்தக்கட்ட ஆராய்ச்சி

அவர்கள் ஏதாவது செய்முறைகளை நம்மிடம் காண்பித்தால், ‘இது எதெற்கெல்லாம் பயன்படுகிறது என்று என்னிடம் சொல்லலாமே’ போன்ற கேள்விகளை கேட்டு அவர்களை பல மடங்கு நாம் ஊக்குவிக்கலாம். நீங்களும் ஆராய்ந்த விஷயங்களை அவர்களிடம் பகிரலாம். இதனால், அவர்கள் பல கேள்விகளை உங்களிடம் கேட்டு அதற்கான பதிலையும் பெற்று மகிழ்கின்றனர்.

 

8. செயல்பாட்டை கவனித்தல்

அவர்கள் ஏதாவது எழுதினால், வரைந்தால், அல்லது போட்டோ காண்பித்தால் அதிலிருந்து நாம் கேள்விகளை கேட்டு அவர்கள் ஆர்வத்தை தூண்டலாம். ஒருவேளை நம்முடைய பிள்ளைகள், நிலா, இலைகள், மரங்கள், செடியின் வளர்ச்சி போன்றவற்றை கண்டால், ‘இதனை எனக்கு வரைந்து காட்ட முடியுமா?’, என நாம் கேட்கலாம் அல்லது ‘நீ பார்ப்பதை பற்றி ஏதாவது எழுத முடியுமா?’ என்று கூட கேட்கலாம்.

 

9. எலெக்ட்ரானிக் டிவைஸ் பயன்பாடு

எலெக்ட்ரானிக்கை பயன்படுத்தி பட்டாம் பூச்சி பறப்பது போல, தவளை சத்தம் போன்றவற்றை நாம் உருவாக்கி அவர்களை ஊக்குவிக்கலாம்.

 

10. வீட்டில் உள்ள பொருட்கள்

அவர்களுக்கு ஸ்கூலில் பிராஜக்ட் ஏதாவது செய்ய சொல்லி இருந்தால், உடனே கடினமான பொருட்களை கொண்டு செய்யாதீர்கள். வீட்டிலுள்ள எளிய பொருட்களை கொண்டே நாம் அற்புதமான புராஜெக்டுகளை செய்யலாம்.

நம் பிள்ளைகள் ஆர்வமாக கேட்கும்போது அதனை புறக்கணிக்காமல் நீங்களும் ஆர்வத்துடன் பதிலளிக்க பாருங்கள். இது எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வையே பிரகாசமாக மாற்றும் என்பதில் எள்ளளவு சந்தேகம் வேண்டாம்.

#earlylearning #boostingchilddevelopment
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!