உங்கள் பிள்ளைகளுக்காக உருவாக்க வேண்டிய குட்டி சமையலறை

cover-image
உங்கள் பிள்ளைகளுக்காக உருவாக்க வேண்டிய குட்டி சமையலறை

கிட் டாய்ஸ் கிட்சன் என்பது பல வழிகளில் நம்முடைய பிள்ளைகளுக்கு சவுகரியத்தை தரும் ஒன்றாகும். ஆனாலும், இந்த மினி கிட்சன் எதெற்கெல்லாம் அவசியம் என்பதை தெரிந்துக்கொள்ளும்போது, நாம் உடனடியாக கூட நம் வீட்டிலுள்ள பிள்ளைகளுக்காக இதனை செய்துக்கொடுக்க தயாராக இருப்போம். அவை என்னெவென்பதை இந்த பதிவின் மூலம் நாம் காணலாம் வாருங்கள்.

 

எதெற்காகவெல்லாம் நம்முடைய பிள்ளைகளுக்கு இந்த மினி கிட்சன் தேவைப்படுகிறது?

இதனை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு இரண்டு வயதில் கூட அறிமுகப்படுத்தலாம். என் பிள்ளைக்கு இன்று 11 வயதாகிறது. ஆனால், இன்றும் அவள் இதனை வைத்து விளையாட ஆசை கொள்கிறாள். அதோடு, எனக்கு சமையலுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அவள் தான் செய்து தருகிறாள். இந்த மினி கிட்சன் தான் அவளுக்கு சமையல் குறித்த ஆர்வத்தை அதிகமாக தூண்டியுள்ளது என்று கூட சொல்லலாம்.

 

மினி கிட்சன் வாங்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?

  • இது பலவிதமான சைஸ்களில் வருகிறது
  • இதற்காக நாம் வீட்டில் அதிக இடைவெளியையும் ஒதுக்க வேண்டிய அவசியமும் இருப்பதில்லை
  • நம்முடைய பிள்ளைகளுக்கு ‘ஸ்டார்ட்டர் கிட்சன்’ செட்டுகளை கூட வாங்கி தரலாம். இது அதிக இடத்தை ஆக்கிரமிக்காது
  • நான் சிறிய அளவிலான மினி கிட்சன் டாய் செட்டை தான் அவர்களுக்கு இப்போது பரிந்துரைப்பேன்

 

இதன் பயன்பாடுகள் என்னென்ன?

இதனால் அவர்களின் கற்பனை திறன் வளர்கிறது. இதனை இவர்களால் கிட்சன் செட்டாக மட்டுமே பயன்படுத்துவது கிடையாது. அவர்களின் கற்பனை திறனுக்கு ஏற்ப கேக் ஷாப்பாகவோ, ஸ்கூலாவோ என பல வித வடிவங்களில் மாற்றியும் பயன்படுத்த செய்கிறார்கள். இவற்றில் அமர்வதற்கு ஏற்ற குட்டி நாற்காலிகளும் வருவதால், அவர்கள் இதனை அளவுக்கதிகமாகவே விரும்புகின்றனர்.

 

பிள்ளைகளுக்கு எதற்கெல்லாம் உதவுகிறது?

1. சொல்லாற்றல் அதிகரித்தல்

அவர்கள் இதனை பயன்படுத்தும்போது, பிளேட், கப், ஃபோர்க், க்னைஃப், ஆப்பிள், பிரெட், சிக்கன் என பல வார்த்தைகளை உச்சரிக்க கற்றுக்கொள்கின்றனர்.

அதேபோல கட் செய்யுங்கள் மம்மி, அதை பவுர் பண்ணுங்க, வாஷ் பண்ணிட்டு தான் சாப்பிடனும், துணி ட்ரையா இருக்கும்மா, கேக்க பேக் பண்ணனும் போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்க பழகுகின்றனர்.

இது அவர்களுக்கு ஒரு வார்த்தைக்கு உண்டான எதிர்ச்சொல்லை அறியவும் அவர்களுக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, ஹாட்/கோல்டு, வெட்/டிரை, பிக்/லிட்டில், ஃபுல்/எம்ப்டி போன்ற வார்த்தைகளையும் அதற்கான அர்த்தங்களையும் புரிந்துக்கொள்கின்றனர்.

என் மகளை ஒரு முறை சிறுவயதில் ரெஸ்டாரண்ட் அழைத்து சென்றேன், அவள் வெயிட்டர் வந்துட்டார்மா, செஃப் ஃபுட்ட நல்லா குக் பண்ணி இருக்காங்கல்ல, கஸ்டமர் நிறையா பேர் இருக்காங்களே போன்ற சொற்களை பயன்படுத்திய போது அங்கிருந்தவர்கள் எல்லாம் அவளை தான் ஆச்சரியமாக பார்த்தார்கள் தெரியுமா.

 

2. சமூக திறனை வளர்த்தல்

இந்த மினி கிட்சனை விளையாட நிறைய பிள்ளைகள் தேவைப்படுவதால், அவர்களின் சமூக திறனை வளர்க்க இது பெரிதும் உதவுகிறது. ஏனென்றால், ஒருவர் சமைப்பார், ஒருவர் சாப்பிடுவார், ஒருவர் பரிமாறுவார் என இந்த விளையாட்டுக்கு நிறைய நபர்கள் இருக்கும்போது கேம் கலை கட்டும். ஆனாலும், அனைவரையுமே உணவு தயாரிக்க யோசனைகளை வழங்க சொல்லவும்.

 

3. உடல் அசைவு திறன் மேம்படுதல்

நம்முடைய பிள்ளைகள் மினி கிட்சன் டாய் செட்டில் உள்ள ஃபோர்க், ஸ்பூன் கொண்டு உணவை எடுத்து வாயில் வைக்கும்போது அவர்களுடைய உடல் அசைவு திறன் மேம்படும். அதேபோல காய்கறிகளை அவர்கள் கட் செய்யும்போது கை தசைகளுக்கு வேலை கொடுக்கின்றனர். இதுவும் நல்லது தான். இவை பிளாஸ்டிக் கத்தி என்பதால் காயப்படுத்திக்கொள்ளக்கூடும் என்ற பயம் நமக்கு வேண்டியதில்லை.

 

4. சிக்கலை தீர்க்கும் ஆற்றல்

இதனை கொண்டு விளையாடும்போது பல பிரச்சனைகள் வரலாம். உதாரணத்திற்கு, காய்கறிகளை அடுக்க தேவையான இடம், கஸ்டமர் கேட்கும் உணவை தயாரித்தல் என பல யோசனைகள் அவர் மனதில் இருப்பதால், அதற்கான தீர்வையும் காண ஆசைக்கொள்கின்றனர்.

 

5. வகைப்படுத்தும் ஆற்றல்

எவை எல்லாம் சாப்பிடக்கூடியவை, எவற்றை எல்லாம் சாப்பிட முடியாது போன்றவற்றை அவர்கள் வகைப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, ஸ்பூன், ஃபோர்க், பிளேட் போன்றவற்றை எல்லாம் ஓரிடத்தில் வைக்க வேண்டும், காய்கறிகளை ஓரிடத்தில் வைக்க வேண்டும் என வகைப்படுத்துவது எப்படி என கற்றுக்கொள்கின்றனர். அதேபோல, காய்கறிகளை பச்சை பேக்கில் வைக்க வேண்டும், பழங்களை சிவப்பு கூடையில் வைக்க வேண்டும் எனவும் வகைப்படுத்த கற்கின்றனர்.

இதுபோல அவர்களின் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவது தான் இந்த மினி கிட்சன் செட். நான் என் மகளுக்கு வாங்கி கொடுத்ததை போல நீங்களும் வாங்கி தந்து உங்களின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே. மீண்டும் சந்திப்போம், நன்றி, வணக்கம்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!