நம் பிள்ளைகளின் ரூமை அழகாக்க அற்புதமான யோசனைகள்

cover-image
நம் பிள்ளைகளின் ரூமை அழகாக்க அற்புதமான யோசனைகள்

நம் பிள்ளைகளின் ரூமை அழகாக வைத்துக்கொள்வது சற்று கடினமான விஷயமே. இவ்வளவு ஏன், பிள்ளைகள் இருக்கும் வீட்டை கூட அழகாக வைத்துக்கொள்வது கடினம் தான் என்பது நம்மை போன்ற எல்லா அம்மாக்களுக்குமே தெரியும் தான். ஒருவேளை அவர்கள் ரூமை அழகாக மாற்றியமைக்க நாம் நினைத்தால், அதனை நிச்சயம் அவர்கள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிக்கவும் செய்வார்கள்.

நம்முடைய பிள்ளைகளின் ரூமை எப்படி அழகாக வைத்துக்கொள்வது?

1. உயரத்தில் வைக்காதீர்

அவர்களுக்கு எட்டும் உயரத்தில் பொருட்களை வைக்கவும். எட்டாத தூரத்தில் எவையேனும் இருந்தால், அவற்றை எடுத்து தர சொல்லிவிட்டு அதன்பிறகு, அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.

 

2. சுவரை அலங்கரித்தல்

நம்முடைய பிள்ளைகளின் தூக்கத்தை இனிமையாக்க இதனை செய்யலாம். ஆம், நிலா நட்சத்திரம் போன்றவற்றை மினுமினுக்கும் ஸ்டிக்கர்களாக ஒட்டலாம். இது அவர்கள் தூக்கத்தை இனிமையாக்கி அறையை மினுமினுக்க செய்கிறது.

அவர்கள் ரூம் சுவற்றில் மலர்கள் அதன் மீது வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருப்பது போன்ற ஸ்டிக்கர்களையும் ஒட்டி வைக்கலாம். இது அவர்கள் மனதை மகிழ்ச்சி பொங்க வைத்துக்கொள்ள உதவுகிறது.

அதேபோல இயற்கை காட்சிகளையும் சுவற்றில் போட்டோவாக ஒட்டி வைக்கலாம்.

 

3. பிளாக் போர்டு

நம்முடைய பிள்ளைகள் சுவற்றில் கிறுக்க அதிகமாக ஆசைப்படுவார்கள். பிள்ளைகள் இருக்கும் வீட்டுச் சுவற்றில் சித்திரங்கள் இல்லாமல் இருப்பதை நம்மால் காணவும் முடியாது. அதனால் பிளாக்போர்டு ஒன்றை உங்கள் பிள்ளைகள் ரூமில் கட்டாயம் பொருத்தவும். அவர்களுக்கு ஏதாவது வரைய வேண்டுமென ஆசை வந்தால், அதனில் மட்டுமே அவர்கள் வரைய நாம் ஊக்குவிக்க வேண்டும்.

 

4. தற்காலிக டாட்டூ

இந்த வகை ஸ்டிக்கர்கள் எளிதில் நீக்க முடியக்கூடியவை. அதோடு, இவை சுவற்றை எந்த விதத்திலும் சேதப்படுத்துவதும் இல்லை. அவர்கள் வளர்ச்சிக்கு ஏற்ப இதனை நம்மால் மாற்றிக்கொண்டே இருக்கவும் முடியும்.

 

5. போட்டோக்கள்

அவர்களை நாம் சிறுவயதில் பல போட்டோக்கள் எடுத்திருப்போம். அவற்றை ஒரு கனமான நூலில் இடைவெளி விட்டு ஒவ்வொரு போட்டைவையும் சுவற்றில் ஒட்டி தொங்கவிடலாம்.

 

6. வாட்டர் பெயிண்ட்

பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, வாட்டர் பெயிண்டுகள் உதவியுடன் அவர்களின் கை ரேகையை சுவற்றில் சேகரிக்கலாம். இது ஒரு அற்புதமான ஞாபக பரிசாக அவர்களுக்கு அமையும்.

 

7. லைட்

அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் கட்டாயம் லைட் இருக்க வேண்டும். இதுவும் அவர்கள் ரூமை ஒளிமயமாக மாற்றி பாசிட்டிவான மனதையும் தர உதவுகிறது.

 

8. வரைதல்

உங்கள் பிள்ளைகள் வரைந்தவற்றை ரூமில் காட்சிப்படுத்துங்கள். இதனால் அவர்களின் தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்து அவர்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

 

9. மேப்

அவர்களின் ரூமில் இருக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் மேப். இதனை சுவற்றில் கவரும் வண்ணம் பொறுத்திடுங்கள். இது அவர்களின் பார்வையில் எப்போதும் இருக்கும் வண்ணம் பொருத்துவது நல்லது.

 

10. பார்க்கும் வித ஜன்னல்

அவர்கள் வெளியில் பார்க்கும் விதத்தில் ஜன்னலை அமைத்திடவும். அந்த பக்கம் மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவற்றை வளர்க்க முயல்வதும் அவர்களின் மனதை ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

 

11. கலர் கலராக சுவர்

சுவற்றில் பல வண்ணங்களை கொண்டு வரையலாம். இது அவர்களின் மனதை பாசிட்டிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

12. டஸ்ட்பின்

அவர்கள் ரூமில் குறைந்தது 2 அல்லது 3 குப்பைத்தொட்டிகள் இருப்பது நல்லது. அவர்கள் ரூமை குப்பையாக்க நினைக்கும் போதெல்லாம், அவர்கள் கண்ணில் படும்படி குப்பைத்தொட்டியை வைத்து அதனில் குப்பையை போட நாம் ஊக்குவிக்கவும்.

 

13. அறிவியல் சார்ந்தவை

அவர்கள் ரூமில் அறிவியல் சார்ந்த விஷயங்களையும் அழகாக புகுத்துங்கள். இது, அவர்களின் அறிவியல் சிந்தனையை பல மடங்கு பெருக்க உதவுகிறது.

எப்போதும் நம்முடைய பிள்ளைகளின் அறையை, அவர்களுக்கு பிடித்தவாறு வடிவமைக்க பார்க்கவும். அவர்கள் என்ன ஆக விரும்புகிறார்கள் என்பதை அறையே சொல்லும் வகையில் வடிவமைத்து தருவது, எப்போதும் அவர்களை பாசிட்டிவான மனதுடன் வைத்துக்கொள்ள உதவும். நன்றி, வணக்கம்.

#babycare #childsafety
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!