நம் பிள்ளைகளுக்கு கடல் வாழ் உயிரினங்களை காகிதத்தில் செய்து காட்டி அசத்தலாமே

cover-image
நம் பிள்ளைகளுக்கு கடல் வாழ் உயிரினங்களை காகிதத்தில் செய்து காட்டி அசத்தலாமே

நம்முடைய பிள்ளைகள், நேரத்தை செலவிட ஒரு வேடிக்கையான வழி கடல்வாழ் உயிரினங்களை காட்டுவதாகும். சிலர் வீட்டிலேயே மீன் தொட்டிகளை தனது பிள்ளைகளுக்காக வாங்கி, வண்ணமயமான மீன்களை அதனில் வளர்ப்பார்கள். ஆனால், மீன் வளர்ப்பு என்பது பராமரிக்க சற்று கடினமான காரியமே. அவற்றை பாதுகாக்க நீரை மாற்றுவது, உணவளிப்பது என அதே வேலையாகவே இருக்கவும் நேரிடும். இப்போது வீட்டிலேயே காகிதத்தில் மீன் செய்து நம்முடைய பிள்ளைகளை மகிழ்விப்பது எப்படி என்பதை பார்ப்போமா.

 

1. ஆக்டபஸ்

எப்படி செய்வது?

1. ஒரு சிறிய பேப்பர் ஷீட்டை உருட்டிக்கொள்ளவும். அதன் ஒரு முனையை கம் கொண்டு மூடும் விதத்தில் ஒட்டிக்கொள்ளவும். இப்போது இது பார்ப்பதற்கு ஒரு டியூப் போல காட்சியளிக்கும்.

2. இதன் ஒட்டாத ஒரு முனையை குறிப்பிட்ட நீளத்தில் இடைவெளி விட்டு பல இடங்களில் தொங்குமாறு வெட்டிக்கொள்ளவும்.

3. இப்போது பென்சிலை வைத்து அந்த தொங்கும் முனைகளை சுற்றவும். இது ஆக்டொபஸ் வால் போல பார்ப்பதற்கு இருக்கும்.

4. இப்போது டியூப் போல ஒட்டப்பட்ட மேல் பக்கத்தில் சிறிய வெள்ளை தாளை வட்ட வடிவத்தில் இரண்டு பக்கமும் ஒட்டிக்கொண்டு நடுவில் கருவிழிக்கு வட்டமாக வரைந்துக்கொள்ளவும்.

5. அவ்வளவு தான் அழகான ஆக்டபஸ் இதோ ரெடி.

 

2. நண்டு

எப்படி செய்வது?

1. டம்ளர், மூடி போன்றவை கொண்டு வட்ட வடிவத்தில் காகிதத்தை வெட்டிக்கொள்ளவும்.

2. அதாவது நமக்கு 1 பெரிய வட்டமும், 4 சிறிய வட்டமும் சிவப்பு நிறத்தில் தேவைப்படும்.

3. அந்த வட்டங்களை இரண்டாக மடித்துக்கொள்ளவும்.

4. ஒரு நீல நிற பேப்பரை சதுரமாக எடுத்துக்கொள்ளவும்.

5. அந்த பெரிய வட்டத்தை நீல பேப்பரின் மையத்தில் மடித்தபடியே (நண்டின் உடல்) ஒட்டவும்.

6. நண்டின் கூர் நகத்திற்காக, மடிக்கப்பட்ட இரண்டு சிறிய வட்டங்களை, பெரிய வட்டத்திற்கு மேலே, V-வடிவத்தில் வலதுப்பக்கம் பக்கம் ஒட்டவும்.

7. அதேபோல மற்ற இரண்டு சிறிய வட்டங்களையும், இடதுப் பக்கமும் ஒட்டிக்கொள்ளவும்.

8. கருப்பு கலர் மார்க்கர் கொண்டு நண்டுடைய கால்களை பெரிய வட்டத்தின் கீழ் வரையவும்.

9. இப்போது சிறிய வட்டங்களையும், நேர் கோடாக பெரிய வட்டத்தின் மேலே கருப்பு கலர் மார்க்கர் கொண்டு வரைந்து இணைக்கவும்.

10. பெரிய வட்டத்துக்கு மேலே, சிறிய வட்டங்களுக்கு நடுவே நண்டின் கண்களை நாம் வரைந்துக்கொள்ளவும்.

11. இப்போது கண்களையும் இணைக்க, கருப்பு மார்க்கர் கொண்டு கண்களிலிருந்து பெரிய வட்டத்துக்கு 2 நேர்கோடுகளை வரைந்துக்கொள்ளவும்.

12. அவ்வளவு தான் பேப்பரில் செய்த நண்டு இதோ ஊர்ந்து செல்ல தயாராக உள்ளது.

 

3. மீன்

எப்படி செய்வது?

1. செவ்வக வடிவ பேப்பரை இரண்டு பக்கமும் மடக்கிக்கொள்ளவும். அதேபோல மூலைவிட்ட பக்கமும் மடக்கி கொள்ளவும்.

2. இப்போது வலதுப்பக்கத்தை லேசாக வளைத்து மடக்கிக்கொள்ளவும். இடதுபக்கத்தை நட்சத்திர வடிவத்தில், அதாவது V வடிவத்தில் மடக்கி கொள்ளவும்.

3. இப்போது முக்கோணமாக தெரியும் வடிவத்தின் கீழ் மூலையை பிடித்து, மையத்தை நோக்கி மடித்துக்கொள்ள வேண்டும்.

4. அதேபோல மற்ற மூலைகளிலும் நாம் செய்துக்கொள்ளவும்.

5. அவ்வளவு தான் மீன் ரெடியாகிவிட்டது.

 

இதுபோன்ற பல கடல்வாழ் உயிரினங்களை நம்மால் பேப்பரில் செய்ய முடியும். இதனை நம் பிள்ளைகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க செய்கிறார்கள்.

இதனை தவிர, அவர்களை நாம் அருகிலுள்ள ஆக்வரியம் போன்றவற்றிற்கும் அழைத்து செல்லலாம். அவர்கள் இந்த வயதில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த பல விஷயங்களை அறிந்துக்கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். மீண்டும் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

#mindfulparenting #diy #earlylearning #boostingchilddevelopment
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!