• Home  /  
  • Learn  /  
  • பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட சூப்பர் டிப்ஸ்
பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட சூப்பர் டிப்ஸ்

பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்ட சூப்பர் டிப்ஸ்

25 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகளுக்கு உணர்வையும், ஆக்கப்பூர்வமான சிந்தனையை தருவது கல்வி தான். பிள்ளைகளின் இப்போதைய படிக்கும் ஆர்வம் தான் பிற்காலத்தையே முடிவு செய்கிறது. இப்போது எந்தளவுக்கு படிப்பதில் ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறதோ, அதை பொறுத்தே வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் கற்றல் அறிவு காணப்பட தொடங்குகிறது. ஒருவேளை அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் குறைவாக இருந்தால் என்ன செய்வது என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

என்னவெல்லாம் செய்து நம் பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தை தூண்டலாம்?

1. தினமும் படிக்கும் வழக்கம்

அவர்கள் தினமும் கொஞ்ச நேரமாவது புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கும்போது, தானாகவே படிக்கும் ஆர்வம் அவர்களுக்குள் தொற்றிக்கொள்ள தொடங்குகிறது.

அதேபோல தினமும் இரவில் ஒரு கதையை சொல்லவும் நாம் அவர்களை பழக்கலாம். அவர்கள் ஒழுங்காக படித்தால், இரவில் கதை சொல்லும் பழக்கத்தின் மூலமாகவும் அவர்கள் ஆர்வத்தை நாம் தூண்டலாம்.

 

2. தினமும் படிக்க ஊக்கப்படுத்துதல்

வீடுகளில் அவர்கள் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகத்தை வைக்கலாம். அதேபோல கதைகள் உள்ள புத்தகத்தையும் நாம் ஆங்காங்கே வைக்கலாம். அதாவது கார், பாத்ரூம், படுக்கை அருகே, டிவி அருகில் போன்ற இடங்களில் சுவாரஸ்யமான கதை புத்தகங்களை நம்முடைய பிள்ளைகளுக்காக வைக்கலாம்.

நம்மை பார்த்தும் அவர்கள் படிக்க செய்வார்கள். ஓர் உதாரணத்திற்கு, நாம் ஒரு நாவல் புத்தகம் எடுத்து வைத்துக்கொண்டு படிக்க அமர்ந்தால், நமக்கு போட்டியாக அவர்கள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து அமர்வார்கள். இரவில் தூங்க செல்வதற்கு முன், நாம் ஏதாவது படித்தால், அவர்களும் அதையே செய்வார்கள்.

 

3. விருப்பமான புத்தகங்கள்

சில சமயம் நம் பிள்ளைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்பட முக்கிய காரணம், அந்த புத்தகம் அவர்களுக்கு பிடிக்காமல் இருப்பதாலே. அப்போது வேறு புத்தகங்களை வைத்து அவர்கள் படிக்கும் ஆர்வத்தை நாம் தூண்டலாம்.

விதவிதமான கதைகளை அவர்களுக்கு நாம் சொல்லி, அதன் மூலமாகவும் படிக்கும் ஆர்வத்தை தூண்டலாம்.

பெரும்பாலும், படங்கள் நிறைய உள்ள புத்தகங்களை அவர்களிடம் நாம் கொடுக்கலாம். அதிலும் பிளாக் & வொயிட்டுக்கு பதிலாக கலர் படங்கள் உள்ள புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது இன்னும் நல்லது.

இந்த சமயங்களில் அறிவியல் கற்பனைக்கதைகள் போன்றவை அவர்களுக்கு புரிந்துக்கொள்ள சிரமமாக இருக்கலாம். சாகச கதைகளை கூற நாம் முயற்சிக்கலாம்.

 

4. வேறு உதாரணங்கள்

அவர்களுக்கு கதைகள் சொல்லும்போதும், புத்தகங்களை வாசித்து காட்டும்போதும், அவற்றில் உள்ளவற்றை மட்டுமே கூறாதீர்கள். இன்னும் பல உதாரணங்களை கூறும்போது தான் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பதற்கு ஆசையும் கொள்கின்றனர்.

சமையல் புத்தகத்தை படித்தால், அவற்றில் உள்ள ஸ்டெப்புகளை அவர்களுக்கு வாசித்து காட்டலாம். இதனால் அவர்களின் படிக்கும் ஆர்வம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 

5. கற்றல் நிலைகள்

அவர்களுக்கு எடுத்ததுமே கடினமான கற்றல் நிலைகளை காண்பிக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம், படிப்பின் மீதான ஆர்வம் அவர்களுக்கு சீக்கிரமே போய்விடும். ஒவ்வொரு படியாக முன்னெடுத்து வைக்க அவர்களுக்கு உதவுங்கள். மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களை திட்டுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.

 

6. அவசரம் வேண்டாம்

அவர்களிடம் நீங்கள் வாசித்து காட்டும்போதோ, அல்லது அவர்கள் உங்களிடம் வாசித்து காட்டும்போதோ எந்த காரணத்துக்காகவும் அவசரம் வேண்டாம். அவர்களுக்கு உரிய நேரத்தை நாம் தர வேண்டும். பிள்ளைகள் நேரம் எடுத்து படிக்கும்போது தான் அந்த படிப்பிற்கே அழகு என்பதை நாம் உணர வேண்டும்.

 

7. வேறுபட்டு காணப்படுவார்கள்

பிள்ளைகள் எப்போதுமே ஒவ்வொரும் வேறுபட்டு காணப்படுவார்கள். உங்களின் பிள்ளைகள் படிக்க தாமதம் செய்யும்போது, நீங்கள் கவலைப்பட்டால், அவர்களும் மிகுந்த அவநம்பிக்கையுடன் இருப்பார்கள். அந்த மாதிரி சமயங்களில் அவர்களால் நிம்மதியாக கற்றுக்கொள்ள முடியாது. அதனால், எதுவாக இருந்தாலும் பொறுமையாக அவர்களிடம் பேசி, அவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காணவும்.

இப்போது நாம் பிள்ளைகளின் கற்றல் நிலையில் கூடுதல் அக்கறையுடன் ஒவ்வொரு விஷயங்களையும் மிகுந்த பொறுமையோடு செய்ய வேண்டும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் எல்லோரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#parentinggyaan

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.