பிள்ளைகளுக்கு இயற்கையை பற்றி சொல்லிக் கொடுக்க எளிய வழிகள்

cover-image
பிள்ளைகளுக்கு இயற்கையை பற்றி சொல்லிக் கொடுக்க எளிய வழிகள்

பிள்ளைகளுக்கு இயற்கை குறித்து சொல்லித்தர வேண்டியது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகும். இது அவர்களின் சமூக திறனை வளர்த்துக்கொள்ளவும், திறம்பட செயல்படவும், பிரச்சனைகளை அமைதியாக கையாளவும் கற்றுக்கொடுக்கும். இயற்கையை குறித்த விழிப்புணர்வு நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்படுவதன் மூலமாக, அதனை எப்படி அழியாமல் பாதுகாப்பது என்பது குறித்தும் அறிகின்றனர்.

 

எதற்கெல்லாம் இயற்கை நம் பிள்ளைகளுக்கு அவசியம்?

1. கவனிக்கும் திறன் மேம்படுதல்

கற்றலின் மிகவும் முக்கியமான அம்சம் கவனிப்பதாகும். நம்முடைய பிள்ளைகள் பொறுமையாக ஒரு விஷயத்தை உற்றுநோக்கும்போது தான், அது குறித்த பல கேள்விகளை கேட்க தொடங்குகின்றனர். குறிப்பாக, ஸ்கூலில் கவனச்சிதறல் இல்லாமல் பாடத்தை கற்க, அவர்களுக்கு இயற்கை உதவுகிறது.

 

2. மன அழுத்தம் குறைதல்

நம் பிள்ளைகளுக்கு இப்போது வரும் தேவையற்ற கோபம், பதட்டம், பயம் போன்றவற்றை தவிர்க்க இயற்கை அன்னை உதவுகிறாள். இது அவர்கள் எதிர்காலத்தில், பொறுமையுடன் ஒவ்வொரு விஷயத்தை கற்கவும், பிரச்சனைகளுக்கான தீர்வை காணவும் பெரிதும் உதவுகிறது.

 

3. சுய ஒழுக்கம்

நம்முடைய பிள்ளைகள் வளரும் சூழலை பொறுத்தே சுயஒழுக்கம் எப்படி இருக்குமென்பது அமையும். நம்முடைய பிள்ளைகள் வாழ்க்கைக்கு உதவக்கூடிய விஷயங்கள் குறித்து நாம் பேசும்போது இயற்கையான சூழலை தேர்ந்தெடுத்து, அங்கே அமர்ந்து அவர்களுடன் மனம் விட்டு பேசலாம்.

 

4. மனிதநேயம்

நம் பிள்ளைகளின் மனிதநேயம் உயர முக்கியமான ஒரு விஷயம் இயற்கை தான். இயற்கையை எப்படி பாதுகாப்பது என அவர்கள் யோசிக்கும்போதே, மனித நேயத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.

 

5. உடல்நலம்

நம்மை பார்த்தும் பல விஷயங்களை நம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். இயற்கையை நாம் எந்தளவுக்கு நேசிக்கிறோமோ, அதே அளவுக்கு நம்முடைய பிள்ளைகளை இயற்கை அன்னை, ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் நன்றாகவே பார்த்துக்கொள்கிறாள்.

 

6. சமூக அக்கறை

இயற்கை அன்னையின் ஆசிர்வாதத்தால், அவர்களுக்கு சமூக அக்கறையும் அதிகம் காணப்பட தொடங்குகிறது. இதனால், இயற்கை குறித்த சிறந்த பேச்சாற்றல் போன்றவற்றை அவர்கள் ஆர்வத்துடன் கொண்டிருக்கின்றனர்.

 

இயற்கையை பற்றி சொல்லிக்கொடுக்க என்ன தான் வழிகள்?

1. பூங்கா செல்லுதல்

அவர்களை தினமும் 1 மணி நேரமாவது நாம் பூங்காவிற்கு அழைத்து செல்ல வேண்டும். இதனால் சுற்றியுள்ள விஷயங்களை விளையாடிக்கொண்டே கற்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 

2. படித்தல்

நம்முடைய பிள்ளைகளுக்கு படிப்பதற்கான காற்றோட்டமான இடத்தை நாம் அமைத்து தர வேண்டும். இருள் சூழ்ந்த காற்று புகாத இடங்களில் படிக்க வைப்பது ஒரு தவறான பழக்கமாகும். உங்கள் வீட்டருகில் இயற்கை சூழல் நன்றாக இருந்தால், அந்த மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்து நாம் அவர்களின் படிப்பிற்கு உதவலாம். இதன் மூலமாக இயற்கையை அரவணைத்து நடந்துக்கொள்வது எப்படியென நம் பிள்ளைகள் கற்கின்றனர்.

மரங்கள், விலங்குகள், செடிகள் ஆகியவற்றின் பங்குகள் என்னவென்பதையும், அவற்றின் அறிவியல் பெயர் என பல விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக இதுவே காரணமாக அவர்கள் வாழ்வில் அமைகிறது.

 

3. வனவிலங்கு பூங்கா

அவர்களை மாதம் இருமுறையாவது வனவிலங்கு பூங்காவிற்கு அழைத்து செல்ல பார்க்கலாம். இதனால் அவர்களின் மனம் மகிழ்வதோடு, விலங்குகளை பராமரிப்பது குறித்தவற்றையும் கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர். அதனோடு, செல்ல பிராணிகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வது, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எப்படி நடப்பது போன்றவற்றையும் அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.

 

4. காற்றோட்டமாக வாக்கிங்

நாம் கொஞ்ச தூரம் வாக்கிங் சென்றால், அவர்களும் உடன் வர ஆசைப்படுவார்கள். அதனால், வீட்டில் இருக்கும் சமயங்களில், அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டை சுற்றியுள்ள கொல்லைப்புறங்களை நாம் சுற்றி வரலாம். அப்போது சற்று ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்து, இயற்கையை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களையும் நாம் அவர்களுடன் பேசலாம்.

 

பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டிய இயற்கை செயல்பாடுகள் எவை?

  • சேற்றில் விளையாட ஊக்குவித்தல்
  • மண்ணில் செல்லும் மண்புழுவை காண்பித்தல்
  • மேகங்கள் நகர்வதை ஆர்வத்துடன் காண்பித்தல்
  • தேங்கிய நீரில் குதித்து விளையாடுதல்
  • பறவைகள் பாடும் பாடலை கேட்க ஆர்வத்தை தூண்டுதல்
  • புற்களில் காணப்படும் பனித்துளியை காண்பித்தல்
  • பல வித விதைகளை சேகரித்தல்
  • மண்ணில் கோட்டை கட்டி விளையாட செய்தல்

 

நம் பிள்ளைகளின் ஆரோக்கியம் பல மடங்கு பெருக இயற்கையை தவிர ஒரு அற்புதமான வரம் வேறெதுவும் இருக்காது. இயற்கையை தினந்தோறும் ரசிக்க பழகும் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் குறைந்து, எப்போதும் மகிழ்ச்சியாக பாசிட்டிவாக மட்டுமே யோசிக்கவும் செய்கின்றனர். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#boostingchilddevelopment #parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!