கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய, செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

cover-image
கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய, செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், பிரசவத்தை நோக்கி சிரமம் இல்லாமல் செல்லவும் வழக்கமான உடற்பயிற்சிகள் நமக்கு உதவுகிறது. அதனோடு இது போன்ற உடற்பயிற்சிகளால் இப்போது வரக்கூடிய முதுகுவலி, உடல் சோர்வு போன்ற உபாதைகள் குறையும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் நமக்கு உடற்பயிற்சிகள் உதவுகிறது.

 

யாரெல்லாம் உடற்பயிற்சி இப்போது செய்யக்கூடாது?

 

1. ஆஸ்துமா, இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை இருந்தால் உடற்பயிற்சி செய்வது சிறந்த தேர்வல்ல.

2. இரத்தப்போக்கு இருந்தாலும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது.

3. கர்ப்பப்பை பலவீனமாக இருந்தாலும் மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க சொல்வர்.

 

கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி ஏன் அவசியம்?

 

 • முதுகுவலி, மலச்சிக்கல், வீக்கம் போன்றவற்றை குறைக்க உதவும்
 • மனநிலை மற்றும் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவும்
 • போதிய தூக்கத்திற்கு வழிவகுக்கும்
 • சரியான எடையை கொண்டிருக்க உதவும்
 • தசை பலத்தை உறுதிசெய்ய உதவும்
 • எவற்றை எல்லாம் நாம் கருத்தில் கொள்வது?
 • முதல் மூன்று மாதங்களுக்கு மேல் அண்ணாந்து பார்த்து படுத்தபடி செய்யும் எந்த பயிற்சியும் தேவையில்லை
 • ஸ்கூபா டைவிங் எனப்படும் மூச்சு பயிற்சி இப்போது நம்முடைய பிள்ளைகளை ரிஸ்கில் தள்ள வாய்ப்புள்ளது
 • குனிந்து தொடுவது போன்ற உடற்பயிற்சிகளையும் இப்போது நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்
 • ஏதேனும் உயரமான பொருள் மீது ஏறி நிற்பது போன்ற பயிற்சிகளையும் கட்டாயம் தவிர்க்கவும்
 • உங்களுடைய வயிற்றுக்கு அசவுகரியத்தை தரும் எவ்வித உடற்பயிற்சியையும் இப்போது முயல வேண்டாம்

 

உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் எடுக்க வேண்டும்?

 

1. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு உடற்பயிற்சியும் நாம் செய்யவே கூடாது.

2. உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்யும்போதும், பிறகும் தேவையான அளவு தண்ணீர் கட்டாயம் குடிக்கவும்.

3. சப்போர்ட் தரக்கூடிய ஆடைகளை அணிந்துக்கொள்ளவும். ஸ்போர்ட்ஸ் பிரா, பெல்லி பேண்ட் போன்றவை நமக்கு கூடுதல் சவுகரியம் தரும்.

4. அளவுக்கதிகமான உடற்பயிற்சி செய்வதை எப்போதும் தவிர்க்கவும். குறிப்பாக முதல் மூன்று மாதம் கூடுதல் கவனத்தோடு நாம் இருக்க வேண்டும்.

5. முதுகை கீழ் வைத்து நீண்ட நேரம் படுப்பது போன்ற உடற்பயிற்சிகளை தவிர்க்கவும். குறிப்பாக மூன்றாவது மூன்று மாதம் இதுபோன்ற உடற்பயிற்சிகள் கூடவே கூடாது.

6. யோகாசனங்களை தவிர்க்கவும். இது நம்முடைய உடலை வருத்திக்கொண்டு செய்யும் ஒரு செயலாகும்.

 

எந்த மாதிரியான உடற்பயிற்சி எல்லாம் இப்போது நல்லது?

 

1. வாக்கிங் செல்லலாம். இதனால் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆனால், ஆரம்பத்தில் குறைவான நேரம், தூரம் மட்டுமே செல்லவும். உங்கள் உடல் நிலையை பொறுத்தே கொஞ்ச நேரம் கூடுதலாக செய்வது குறித்து யோசிக்கவும்.

2. நீச்சல் தெரிந்தால் இது சூப்பர் பயிற்சியாக அமைகிறது. சுகப்பிரசவம் ஆவதற்கு உதவுவதில் முக்கியமான பங்கு வகிப்பது இந்த நீச்சல் பயிற்சி தான். ஆனாலும், மருத்துவர் பரிந்துரை இருந்தால் மட்டுமே இதனை செய்யவும்.

3. ஜாக்கிங் செல்லலாம், ஆனாலும் குறைவான தூரம் செல்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கு அதிகமாக மூச்சு வாங்குவதை போல உணர்ந்தால் மருத்துவரின் பரிந்துரை பெற்றே இதனை முயலவும்.

4. சைக்கிள் ஓட்டுவது கர்ப்பமாக இருக்கும்போது நல்லதென்றாலும், டாக்டர் பரிந்துரை அவசியம். அதோடு, வாந்தி, மயக்கம், உடல் எடை அழுத்துவது போன்ற காரணங்களால் நீங்களாகவே எக்காரணம் கொண்டு இதனை செய்யக்கூடாது.

 

கர்ப்பிணிகளுக்கு உடற்பயிற்சி கூடுதல் சவுகரியத்தை வழங்குகிறது என்பது உண்மை தான். ஆனாலும், கருவில் வளரும் நம் பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் நலன் மீது அக்கறை கொண்டு இது குறித்து எப்போதும் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று அவர்கள் சொல்படி கேட்பது நல்லது. நன்றி, வணக்கம்.

#pregnancyexcercise
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!