பிள்ளைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் - 2021

cover-image
பிள்ளைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள் - 2021

பிள்ளைகளுக்கு வரக்கூடிய பலவிதமான நோய்களை வர விடாமல் தடுப்பது தடுப்பூசிகள் தான். இன்று வரை கூட போலியோ, வெறிநாய்கடி போன்ற பல பிரச்சனைகளுக்கு தடுப்பூசி போடுவதனால், வரும் முன் நம்மால் காக்க முடிகிறது.

 

தடுப்பூசி பற்றிய தகவல்

இந்த தடுப்பூசியில் ஒவ்வொரு நோய்க்கும் எதிரான எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை ஒரு நோய் வருவதற்கு முன்பே எதிர்ப்பு சக்தியை வழங்கி, அதிலிருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றுகிறது. பிள்ளைகளுக்கு தாய்ப்பால் தரும்போது அவர்களுக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைப்பது உண்மை என்றாலும், ஒரு சில ஊசிகள் வரவிருக்கும் நோயை தடுத்து நம்முடைய பிள்ளைகளை பாதுகாக்கிறது.

 

இந்தியாவில் பிள்ளைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் எவை?

அரசாங்கம் ஒப்புதல் அளித்த பின்னரே, ஒவ்வொரு தடுப்பூசியும் பிள்ளைகளுக்கு போடப்படுகிறது. அவை என்னெவன்பதை இப்பதிவில் நாம் பார்ப்போம்

 

பிறந்தவுடன் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • BCG எனப்படும் காசநோய்த் தடுப்பூசி
 • இளம்பிள்ளை வாதத்துக்கு எதிரான சொட்டு மருந்து - OPV 0
 • ஹெபடைடிஸ் B முதல் தடுப்பூசி - HB 1

 

ஆறு வாரங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • DTP முதல் தடுப்பூசி - DTP 1
 • இன்-ஆக்டிவேட்டட் போலியோ முதலாவது தடுப்பூசி - IPV 1
 • ஹெபடைடிஸ் B இரண்டாவது தடுப்பூசி - HB 2
 • இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான HiB முதல் தடுப்பூசி - HiB 1
 • இளம் குழந்தைகளில் கழிச்சல் ஏற்படுத்தும் ஒரு வகை நச்சுயிரிக்கு எதிரான (ரோட்டா வைரஸ்) முதல் தடுப்பூசி
 • நிமோனியாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி- PCV 1

 

பத்து வாரங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • DTP இரண்டாவது தடுப்பூசி - DTP 2
 • இன்-ஆக்டிவேட்டட் போலியோ இரண்டாவது தடுப்பூசி - IPV 2
 • ஹெபடைடிஸ் B மூன்றாவது தடுப்பூசி - HB 3
 • இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான HiB இரண்டாவது தடுப்பூசி - HiB 2
 • இளம் குழந்தைகளில் கழிச்சல் ஏற்படுத்தும் ஒரு வகை நச்சுயிரிக்கு எதிரான (ரோட்டா வைரஸ்) இரண்டாவது தடுப்பூசி
 • நிமோனியாவுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி - PCV 2


பதினான்கு வாரங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • DTP மூன்றாவது தடுப்பூசி - DTP 3
 • இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான HiB மூன்றாவது தடுப்பூசி - HiB 3
 • இன்-ஆக்டிவேட்டட் போலியோ மூன்றாவது தடுப்பூசி - IPV 3
 • ஹெபடைடிஸ் B நான்காவது தடுப்பூசி - HB 4
 • இளம் குழந்தைகளில் கழிச்சல் ஏற்படுத்தும் ஒரு வகை நச்சுயிரிக்கு எதிரான (ரோட்டா வைரஸ்) மூன்றாவது தடுப்பூசி
 • நிமோனியாவுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி - PCV 3

 

ஆறு மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • டைபாய்டு தடுப்பூசி - TCV

 

ஒன்பது மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • தட்டம்மை, கூவைக்கட்டு, உருபெல்லா எனப்படும் மணல்வாரி போன்றவற்றிற்கு எதிரான முதலாவது தடுப்பூசி - MMR 1
 • மூளைக்காய்ச்சலுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி - MCV 1

 

பன்னிரெண்டு மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • ஹெபடைடிஸ் A தடுப்பூசி - Hep A1
 • வருடந்தோறும் போட வேண்டிய இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான தடுப்பூசி
 • மூளைக்காய்ச்சலுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி - MCV 2
 • JE எனப்படும் ஜப்பான் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான முதல் தடுப்பூசி - JE 1

 

பதின்மூன்று மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • JE எனப்படும் ஜப்பான் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி - JE 2

 

பதினைந்து மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • தட்டம்மை, கூவைக்கட்டு, உருபெல்லா எனப்படும் மணல்வாரி போன்றவற்றிற்கு எதிரான இரண்டாவது தடுப்பூசி - MMR 2
 • நீர்க்கோளவான் சின்னம்மைக்கு எதிரான வெரிசெல்லா முதல் தடுப்பூசி
 • வருடந்தோறும் போட வேண்டிய இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான தடுப்பூசி
 • PCV B1 தடுப்பூசி பூஸ்டர்
 • காலராவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி

 

பதினாறு மற்றும் பதினெட்டு மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • DTP B1 தடுப்பூசி
 • இன்-ஆக்டிவேட்டட் போலியோ தடுப்பூசி - IPV B1
 • ஹெபடைடிஸ் A தடுப்பூசி - Hep A2
 • இன்புளுயன்சா நச்சுயிரிக்கு எதிரான தடுப்பூசி - HiB B1

 

இரண்டு முதல் மூன்று வருடங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி - MCV

 

நான்கு முதல் ஆறு வருடங்களில் போடப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?

 • DTP B2 தடுப்பூசி
 • நீர்க்கோளவான் சின்னம்மைக்கு எதிரான வெரிசெல்லா இரண்டாவது தடுப்பூசி
 • தட்டம்மை, கூவைக்கட்டு, உருபெல்லா எனப்படும் மணல்வாரி போன்றவற்றிற்கு எதிரான மூன்றாவது தடுப்பூசி - MMR 3/MMRV

 

தடுப்பூசிகள் நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான எதிர்ப்பாற்றலை வழங்கி பல வித நோய்களிலிருந்து அவர்களை பாதுகாக்கிறது. அதனால் தேவையான தடுப்பூசிகளை (மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே) நாம் அவ்வப்போது சரியாக பிள்ளைகளுக்கு போட்டுவிடுவது நல்லது. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#childhealth #vaccination
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!