தீபாவளி ஸ்பெஷல் - சீப்பு சீடை செய்வது எப்படி

cover-image
தீபாவளி ஸ்பெஷல் - சீப்பு சீடை செய்வது எப்படி

தீபாவளி நெருங்கிவிட்டது, புத்தம் புதிய ஆடைகள், பட்டாசு வாங்குதல் என என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பிசியாக இருக்க, என்ன ஸ்வீட் செய்வது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் இந்த சீப்பு சீடையை செய்ய முடிவெடுத்தேன். இந்த சீடைகளை காரமாகவும் செய்ய முடியும், இனிப்பு சேர்த்தும் செய்ய முடியும். எப்படி செய்தாலும், வைக்கப்பட்ட தட்டை நம்முடைய பிள்ளைகளும், கணவரும் காலி செய்யாமல் விட மாட்டார்கள் என்பதே உண்மை. நீங்களும் இந்த சீப்பு சீடையை உங்களுடைய பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க நினைக்கிறீர்களா. அப்படி என்றால், இந்த பதிவு நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த சீப்பு சீடையை செய்ய நமக்கு அதிகமாக தேவைப்படுவது அரிசி மாவு, பருப்பு, தேங்காய் பால் போன்றவை தான். இந்த மொறுமொறு சீப்பு சீடையை நம்முடைய அம்மா, நமக்கு சிறு வயதில் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி நாட்களில் செய்து கொடுத்திருப்பது நினைவில் இருக்கும். சரி, ரெசிபிக்கு போகலாம் வாருங்கள்.

 

தேவையான பொருட்கள் என்னென்ன?

வீட்டில் அரைத்த அரிசி மாவு - 2 கப்

உளுத்தம் பருப்பு - ½ கப்

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் பால் - 1 கப் (தண்ணியாக)

எண்ணெய் - 2 கப் (நன்றாக வறுக்க)

 

செய்வது எப்படி?

1. உளுத்தம் பருப்பை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. லேசான பிரவுன் கலரில் வரும் வரை உளுத்தம் பருப்பை வறுத்துக்கொள்ளவும்.

3. பிறகு அதனை ஓரமாக ஆறவிடவும்.

4. வறுத்த பருப்பை எடுத்துக்கொண்டு, நன்றாக பவுடராக்கி கொள்ளவும்.

5. வறுத்த மற்றும் அரைத்த உளுத்தம்பருப்பை ½ கப் அளவு எடுத்துக்கொள்ளவும். கட்டிகள் இல்லாமல் இருக்க சல்லடையை கொண்டு அதனை சலித்துக்கொள்ளவும்.

6. கலக்க ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, உளுத்தம் பருப்பு மாவுடன் அரிசி மாவு, வெண்ணெய், உப்பு போன்றவற்றை சரியான அளவில் கலந்து கொள்ளவும்.

7. பிறகு தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மாவை பிசைந்துக்கொள்ளவும்.

8. சீப்பு சீடை செய்யும் முறுக்கு அச்சியை எடுத்து அமுக்கிக்கொள்ளவும்.

9. அச்சின் உட்பக்கத்தில் ஆயிலை தடவிக்கொள்ளவும்.

10. இரண்டு முதல் மூன்று கை அளவு சீப்பு சீடை மாவை எடுத்து அச்சியில் வைத்து மூடிக்கொள்ளவும்.

11. கட் செய்யும் போர்டை வைத்து அச்சை அழுத்தி பிழிய தொடங்கவும்.

12. நீண்டதாக இருப்பதை சிறிய சிறியதாக ஃபோர்க் கொண்டு நறுக்கி கொள்ளவும்.

13. இப்போது பிழிந்த ஒவ்வொன்றையும் சுருள் சுருளாக சுத்திக்கொள்ளவும். அதேபோல மீதமுள்ள மாவிலும் நாம் முறுக்கு பிழிய வேண்டும்.

14. கடாயில் எண்ணெய்யை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டவுடன், மாவை லேசாக அதனில் போட்டு எண்ணெய் ரெடியாகிவிட்டதா என்பதை பார்க்கவும்.

15. எண்ணெய் வறுக்க தயாரானதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து உருட்டி வைத்திருக்கும் சீப்பு சீடையை மெல்ல ஒவ்வொன்றாக போடவும்.

16. அவை பொன்னிறம் வந்து மொறுமொறுவென வரும் வரை வைத்திருக்கவும்.

17. அவ்வளவு தான் சுவையான சூடான சீப்பு சீடை ரெடி.

18. இதனை காற்றுப்புகாத பாத்திரத்தில் கொட்டி வைத்து நம் பிள்ளைகளுக்கு கொடுத்து மகிழலாம்.

 

சீப்பு சீடையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

  • நாம் சாப்பிடும் அளவு 25 கிராமாக இருந்தால், 150 கலோரிகள் இதனில் இருக்கும்
  • அதேபோல இதனில் 18 கிராம் (தினசரி மதிப்பு) கார்போஹைட்ரேட்டும் உள்ளது
  • புரதச்சத்து 2 கிராம் (தினசரி மதிப்பு) இதில் உள்ளது

 

தோழிகளே, இந்த சுவையான சீப்பு சீடையை நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுத்து மகிழலாமே. இந்த வருட தீபாவளி இந்த இனிப்பான சீப்பு சீடையுடன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிமையாக அமையட்டும். நன்றி, வணக்கம்.

#instantrecipes #instantrecipes
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!