பிறந்த பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பு வீங்குதல்

cover-image
பிறந்த பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பு வீங்குதல்

இது போன்ற பிரச்சனைகளை பிறந்த பிள்ளைக்கு காணலாம். இதை கண்டதும் நாம் பதறவும் செய்வோம். காரணம், இது ஏதேனும் பெரிய பிரச்சனையாக இருக்குமோ எனும் பயம் தான். ஆனால், உண்மை என்னவென்றால், பிறந்த பிள்ளைகளின் அந்தரங்க பாகம் வீங்கி காணப்படுவது இயல்பான விஷயமே. இதற்காக பயப்பட வேண்டிய அவசியமில்லை. இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்த பல பயனுள்ள தகவலை நாம் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

 

எதனால் இது உண்டாகிறது?

நம்முடைய பிள்ளைகள் பிறக்கும்போது கூடுதல் திரவத்தை உடலில் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இவை, நம்முடைய பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பில் சேர்கிறது. பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் இந்த பிரச்சனையை ஸ்வெலன் லேபியா என்றும், ஆண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனையை ஸ்வெலன் ஸ்க்ரோட்டம் என்றும் அழைப்பார்கள்.

அதேபோல நம்முடைய பிள்ளைகளின் கண்கள் உப்பி இருப்பதையும் இப்போது நம்மால் காண முடியும்.

 

இதனால் பயப்பட வேண்டுமா?

இதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. காரணம், இது பிறந்த சில நாட்களில் சரியாகிவிடும். நம்முடைய பிள்ளைகளின் உடலில் இருந்து திரவம் வெளியானதும் வீக்கம் வடிய தொடங்கிவிடும். இந்த சமயத்தில் நம் பிள்ளைகளின் உடல் எடை திரவ இழப்பால் முன்பு இருந்ததை விட குறைந்தும் காணப்படும் என்பதால் இதை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை.

 

ஸ்வெலன் லேபியா என்பது என்ன?

நம்முடைய ஹார்மோன் காரணமாக பிறந்த பெண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பில் ஏற்படுவது ஸ்வெலன் லேபியா எனப்படும். குறிப்பாக, பிரசவம் முன் கூட்டி நடந்திருந்தால், இந்த பிரச்சனை நம்முடைய பெண் பிள்ளைகளுக்கு காணப்படலாம். இந்த சமயங்களில் தெளிவான, வெள்ளை நிற, இரத்த வெளியேற்றம் காணப்படலாம். ஆனாலும், இது முற்றிலும் நார்மல் தான் எந்த வித பயமும் நமக்கு வேண்டியதில்லை.

 

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

பிறந்து ஆறு வாரங்கள் வரைக்கும் இது போன்ற இரத்தப்போக்கு நம்முடைய பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பில் காணப்பட்டால், அப்போது நிச்சயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகளுக்கு இது போன்ற அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா என்பதை மருத்துவமனையில் இருக்கும்போதே பார்த்து டாக்டரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது. அதேபோல, நம்முடைய பிள்ளைகளை பராமரிப்பது குறித்தும் மருத்துவர்களின் ஆலோசனை பெறலாம்.

பெண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பில் இருந்து இரத்தப்போக்குடன் கூடிய வாடை அடிப்பதையும் உணர்ந்தால், அது தொற்றினால் கூட ஏற்பட்டிருக்கலாம். அப்போது நிச்சயம் மருத்துவர்களிடம் அழைத்து செல்வது நல்லது.

 

ஸ்வெலன் ஸ்க்ரோட்டம் என்பது என்ன?

நம்முடைய ஆண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பு பிறந்து சில நாட்கள் வரையும் வீங்கி காணப்படலாம். இதற்கு காரணம் விரைகளில் திரவம் தங்கி இருப்பது தான். நம்முடைய பிள்ளைகளை இது போன்ற சூழலில், மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. இந்த வீக்கம் சில மாதங்களில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஒரு சில பிள்ளைகளுக்கு இரண்டு வருடம் வரை கூட இருக்கவும் செய்கிறது.

 

பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

1. வாசனை மிக்க கிரீம்கள் போன்றவற்றை அவர்களின் அந்தரங்க உறுப்பில் பயன்படுத்த வேண்டாம்.

2. வாசனைமிக்க துணிகளை அவர்களின் அந்தரங்க உறுப்பில் பயன்படுத்த வேண்டாம்.

3. அடிக்கடி அவர்களின் டயாப்பரை மாற்ற வேண்டும்.

4. சோப்புகளை பிள்ளைகளின், குறிப்பாக பெண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது அவர்களுக்கு அலெர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

5. பெண் பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யும்போது, முன் பகுதி முதல் பின் பகுதி வரை துணியால் சுத்தமாக துடைக்கவும்.

 

பிள்ளைகளின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் தினசரி கடமையாகும். ஏனென்றால், தொற்று போன்றவை இந்த இடத்தில் ஏற்படும்போது அவர்களுக்கு அது மிகப்பெரிய அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். நம்முடைய பிள்ளைகளின் சுகாதாரம் தானே நம்மை போன்ற பெற்றோர்களின் சந்தோஷமே. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babyhealth #growthmilestones
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!