இரண்டு வயது பிள்ளையிடம் செய்ய வேண்டிய விஷயங்கள்

cover-image
இரண்டு வயது பிள்ளையிடம் செய்ய வேண்டிய விஷயங்கள்

பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரு சில பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்துவிட வேண்டும். இல்லையேல், பிற்காலத்தில் நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். பிள்ளைகளுக்கு இருக்க கூடிய பெரும்பாலான பிரச்சனைகள் மரபு சார்ந்தே வருகிறது. ஆனால், ஒரு சில பிரச்சனைகள் கவனக்குறைவாலும் அவர்களுக்கு வருகிறது. இந்த பதிவில் இரண்டு வயது பிள்ளைகளின் வளர்ச்சி மைல் கற்கள் என்னென்ன என்பதையும், அவற்றை எப்படி நாம் அறிவது? என்பதையும் பார்ப்போம் வாருங்கள்.

 

இரண்டு வயது பிள்ளைகள் என்னவெல்லாம் செய்வார்கள்?

1. உணர்ச்சிவசப்படுதல்

நம்முடைய பிள்ளைகள் இப்போது நன்றாகவே உணர்ச்சிவசப்படுவார்கள். ஏதாவது சொல்லிவிட்டால் போதும், முதலை கண்ணீர் வடிக்க கூட அவர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள். இதை எல்லாம் பார்த்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. காரணம், இந்த வயதில் எல்லா பிள்ளைகளும் செய்யக்கூடிய ஒரு செயல் தான் இது. ஒரு சில விஷயங்களை செய்து பார்த்து, தவறு செய்யும்போது வருந்துவார்கள். இது அவர்களுடைய வாழ்வின் ஒரு அங்கம் தான்.

 

என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உதாரணமாக, அவர்கள் ஒரு உணவை வேண்டாமென கூறினால், ‘அம்மாவிற்கும் இன்று இந்த உணவு பிடிக்கவில்லை, என்ன செய்வது? செய்துவிட்டேன், அதனால் 2 பேரும் இப்போது இதனை சாப்பிடுவோம். அடுத்த வேளைக்கு உனக்கு பிடித்ததை செய்து தருகிறேன் என் செல்ல மகளே.’ என பாசாங்கு செய்யலாம். நாம் அவர்களின் உணர்வுகளுக்கு இவ்வாறு மதிப்பளிக்கும்போது, அவர்களும் நம்முடைய உணர்வுகளை புரிந்துக்கொள்ள தொடங்குகின்றனர்.

 

2. எளிதில் கடந்து செல்லுதல்

நம்முடைய பிள்ளைகள் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் பொருட்களை உடைக்கவோ, அடிக்கடி கீழே விழுந்து அடிபட்டுக்கொள்ளவோ செய்வார்கள். அப்போது அவர்களை கடினமாக கையாளாதீர்கள். அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, 2 வயதில் இது போன்ற செயல்பாடுகள் சாதாரணம் தான் என்பதை உணர்ந்து எளிதாக கடந்து செல்ல பாருங்கள்.

அவர்கள் தவறு செய்து ஒரு சில விஷயங்களை கற்றுக்கொண்டாலும், நம்முடைய உதவியை இப்போது குறைவாகவே எதிர்பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை கேட்காமல், அதற்கு எதிராகவும் இப்போது செய்வார்கள். இதுவும் இந்த வயதில் முற்றிலும் சகஜம் தான்.

 

3. உணவுப்பழக்கவழக்க மாறுதல்கள்

பிள்ளைகளின் உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் இப்போது தேவைப்படும். நம்முடைய பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவெல்லாம் இப்போது சிறந்தது என்பதை குழந்தைகள் நல மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுகளை நாம் அவர்களுக்கு அளிப்பதன் மூலம், மூளை மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது. பால் உணவுப்பொருட்களை நாம் அவர்களுக்காக கொடுப்பதால், கால்சியம் சத்து கிடைக்கிறது. இவற்றை தவிர, காய்கறிகள், முழு தானியங்கள், மெல்லிய இறைச்சி, பீன்ஸ் போன்றவையும் கொடுக்கலாம்.

 

4. மதியம் தூங்குதல்

காலையில் அவர்கள் போடும் குட்டி தூக்கத்தை குறைத்து இந்த சமயம், மதியம் கொஞ்ச நேரம் தூங்க செய்வார்கள்.

 

5. பேச பழகுதல்

அவர்கள் இப்போது தான் பேச கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசினாலும் நாம் அதனை கவனிக்க வேண்டும். அவர்கள் பேசுவது புரியவில்லை என நினைத்து, கண்டுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் பேச ஆள் இல்லாமல் தவிப்பார்கள். அதோடு, பேச பழகுவதில் தாமதமும் உண்டாகலாம். அதனால், ஒரு வார்த்தை பேசினாலும் அதற்கும் நாம் கண்டிப்பாக பதில் தர வேண்டும். அவர்களிடம் சிங்கம், புலி போன்ற விலங்குகளை பற்றியும், கலர் கலரான புத்தகங்களில் உள்ள படங்கள் பற்றியும் பேசலாம்.

 

6. பொம்மைகள் கொண்டு விளையாடுதல்

பிளாக்குகள், பஷில், விதவிதமான கார் ஆகியவை கொண்டு இப்போது விளையாட அவர்கள் ஆசைப்படுவார்கள். அதேபோல, பொம்மைகளை அதன் வகைப்படி ஒவ்வொரு கூடையில் அடுக்கி வைக்கவும் ஆசைக்கொள்வார்கள். அவர்கள் இந்த மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும்போது, அவர்களை ஊக்கப்படுத்தவும்.

இரண்டு வயது பிள்ளைகளிடம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது நாம் பார்த்தோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!