பிறந்த பிள்ளைகளை துணி கொண்டு சுற்றுவது எப்படி?

cover-image
பிறந்த பிள்ளைகளை துணி கொண்டு சுற்றுவது எப்படி?

பிறந்த பிள்ளைகள் மருத்துவமனையில் இருந்து வரும்போது அவர்கள் உடலை துணி போர்த்தி தூக்கி வருவார்கள். அவர்கள் உடல் முழுவதும் துணியால் சுற்றி காணப்பட, அந்த குட்டி முகமும், அழகிய கண்கள் மட்டுமே பார்ப்பவருக்கு வெளிப்படும். இது எதற்காக செய்யப்படுகிறது என்பது குறித்து என்றாவது யோசித்தது உண்டா? சிலர், பிள்ளைகள் மேல் திருஷ்டி பட்டுவிட கூடாது என்பதற்காகவும் சொல்வார்கள். ஆனால், உண்மையான காரணம் தான் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

 

ஸ்வாட்லிங் என்றால் என்ன?

இவ்வாறு பிள்ளைகளை துணி கொண்டு சுற்றுவதை தான் ‘ஸ்வாட்லிங்’ என்று அழைக்கிறோம். இது நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்த முறையே. பிறந்த பிள்ளைகளை ஒரு மெல்லிய போர்வை அல்லது துணி கொண்டு சுற்றுவார்கள்.

 

எதற்காக இது செய்யப்படுகிறது?

இதனால் நம்முடைய பிள்ளைகளுக்கு பல பயன்கள் கிடைக்கிறது. அவை என்னவென்பதை இப்போது நாம் பார்ப்போம்.

 

1. நம்முடைய பிள்ளைகள் இதனால் பாதுகாப்பாக உணர்வார்கள். இதுவரை கருவறையில் இருட்டில் தங்கி இருந்தவர்களுக்கு, இப்போது வெளிச்சத்தை புதிதாய் பார்க்கும்போது ஒரு பயம் வரும். இந்த மாதிரி துணியை கொண்டு சுற்றும்போது, அவர்கள் ஒருவித பாதுகாப்பை உணர்கிறார்கள்.

 

2. இப்போது அவர்கள் கை மற்றும் கால் படபடப்புடன் காணப்படும். பிறந்த பிள்ளைகள் கை மற்றும் கால்கள் திடீர் திடீரென படபடத்து போவதை நாம் பல முறை பார்த்திருப்போம். இது போல சுற்றும்போது, இந்த அசவுகரியம் அவர்களுக்கு குறைந்து காணப்படுகிறது.

 

3. இவ்வாறு நாம் பிள்ளைகளை சுற்றும்போது வெதுவெதுப்பாக உணர்வார்கள். இது ஒருவித உஷ்னத்தை அவர்களுக்கு தந்து நன்றாக தூங்கவும் உதவுகிறது.

 

பிள்ளைகளை துணியை கொண்டு சுற்றுவது எப்படி?

 

ஸ்டெப் 1: தட்டையான பரப்பை தேர்ந்தெடுத்தல்

பிள்ளைகளை போர்த்தப்போகும் துணியை தட்டையான பரப்பில், வைர வடிவத்தில் விரித்துக்கொள்ளவும். அதன் மேல் மூலையை மடித்துக்கொள்ளவும். அதாவது மேல் மூலையை சுமார் 6 அங்குலத்திற்கு கீழ் நோக்கி மடிக்கவும்.

 

ஸ்டெப் 2: போர்வையில் பிள்ளையின் முகம் மேல் நோக்கி இருத்தல்

அவர்கள் தலை போர்வையின் மடித்த விளிம்புக்கு மேலே இருக்க வேண்டும். அவர்கள் உடம்பு, கீழ் மூலை வரை நீண்டு இருக்க வேண்டும்.

 

ஸ்டெப் 3: பிள்ளைகளின் இடது கை நேராக இருத்தல்

அவர்களின் இடதுகை நேராக பக்கவாட்டில் இருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளின் இடது கை முதல் வலப்பக்க உடல் வரை துணி கொண்டு மூடி இருக்கவும். வலது கை மூடப்படாமல் இருக்கவும் வேண்டும்.

 

ஸ்டெப் 4: கீழ் கொண்டு வருதல்

துணியின் கீழ் மூலையை இழுக்கவும். இதனால், அவர்களின் கால்கள் மற்றும் வலது கை மூடப்பட்ட நிலையில் இப்போது இருக்கும். அவர்களுடைய வலது தோல் பட்டைக்கு கீழ் முனையை சொருகி விடவும்.

 

ஸ்டெப் 5: போர்வை கொண்டு பாதுகாத்தல்

இப்போது வலது கையை நேராக வைத்தபடி துணி கொண்டு மூடவும். அதோடு மீதமுள்ள மூலைகளை உடம்போடு ஒட்டி, மடித்து, பின் பக்கத்தில் சொருகவும்.

 

நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை?

1. நாம் போர்த்தியது பிள்ளைகளின் உடம்போடு ஒட்டி இருக்க வேண்டும். ஆனால், தளர்வாக இருக்க கூடாது.

2. அவர்களின் இடுப்பு பகுதி சுற்றி தளர்வாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கால்களை சிரமமின்றி அசைக்க முடியும்.

3. அவர்கள் கைகளை வெளியில் வைத்துக்கொள்ள விரும்பினால் போர்த்தி இருப்பதற்கு வெளியே ஒன்று அல்லது இரண்டு கைகளையும் விட்டு விடலாம்.

 

இது பாதுகாப்பானதா?

இதனை சரியாக செய்யும்போது முற்றிலும் பாதுகாப்பானதே. போர்த்தி இருப்பது தளர்வாக இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையேல், பிள்ளைகளின் மூச்சு திணற வாய்ப்புள்ளது. அதனால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

பிள்ளைகள் பிறந்ததும், எப்படி போர்த்துவது என்பது குறித்து செவிலியர்கள் நமக்கு உதவுவார்கள். கூடுதல் சந்தேகங்கள் நமக்கு இருக்கும்போது நிச்சயம் அவர்கள் உதவியை நாம் பெறலாம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babycare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!