• Home  /  
  • Learn  /  
  • பிள்ளைகளுக்கு எண்களை கற்றுக் கொடுக்க எளிய வழிகள்
பிள்ளைகளுக்கு எண்களை கற்றுக் கொடுக்க எளிய வழிகள்

பிள்ளைகளுக்கு எண்களை கற்றுக் கொடுக்க எளிய வழிகள்

30 Oct 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு வயது முதலே எண்களை குறித்த புரிதலை ஏற்படுத்த தொடங்கலாம். நாம் எண்களை சொல்லிக்கொடுக்க பழக்கும்போது, அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையுமே எண்களை வைத்து கையாள விரும்புவார்கள். இதோ எண்களை நம்முடைய பிள்ளைகளுக்கு எப்படி எல்லாம் எளிய முறையில் கற்றுக்கொடுக்கலாம் என்பதை சுவாரஸ்யமாக இந்த பதிவு விளக்குகிறது.

 

எப்படி எளிய வழியில் எண்களை கற்றுத்தருவது?

1. ஒரே மாதிரியான பொருட்கள்

இந்த வழியை நம்முடைய பிள்ளைகள் நிச்சயம் விரும்புவார்கள். ஒரே மாதிரியான பொருள் எத்தனை முறை மீண்டும் வந்துள்ளது என்பதை வைத்து நாம் அவர்களுக்கு எண்களை கற்றுக்கொடுக்கலாம்.

 

2. பொம்மை போட்டவை

புத்தகங்களில் பொம்மைகள் இருக்க, அதன் அருகிலேயே எண் பெரிதாக எழுதப்பட்டிருக்கும். நம்முடைய பிள்ளைகள் வரைந்திருக்கும் பொம்மையை பார்க்கும்போது, எழுதி இருக்கும் எண் என்னவென தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் கொள்கின்றனர்.

 

3. வானம் பார்த்து கற்றல்

நம்முடைய பிள்ளைகள் எப்போதுமே இயற்கையை நம்மை விட ஒரு மடங்கு கூடுதலாகவே ரசிப்பார்கள். அதனால், இரவு சமயங்களில் இயற்கை அன்னையின் மடியில் தலை வைத்து, வானத்தில் தெரியும் நட்சத்திரங்களை இருவரும் சேர்ந்து எண்ணலாம். இது அவர்கள் எண்களை கற்க உதவும் ஒரு சுவாரஸ்யமான வழியும் கூட.

 

4. பிடித்த உணவு

அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவை வைத்தும் நாம் எண்களை கற்பிக்கலாம். ஐஸ்க்ரீம், பூ போன்றவற்றை கொண்டு நாம் அவர்களுக்கு, அவை எத்தனை உள்ளது என்பதை சொல்லி எண்களை தெரிந்துக்கொள்ள பழக்கலாம்.

 

5. மறைந்திருக்கும் எண்

பொம்மை மற்றும் காட்சிகள் நிறைந்த பக்கத்தில் எண்கள் ஆங்காங்கே மறைந்திருக்கும். உங்களுடைய பிள்ளைகளிடம் எண்கள் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சொல்லி, அவர்களை ஊக்குவிக்கலாம்.

 

6. ஒரே மாதிரியானவை

அவர்கள் கைகளில் கலர் பென்சிலை கொடுத்து ஒரு பொம்மைக்கு கலர் அடிக்க சொல்லலாம். அதே போன்ற பொம்மைகள் மீண்டும் வரும்போது, அதனை அவர்கள் கண்டுபிடித்து, அதன் மூலமாகவும் எண்களை அறிய தொடங்குகின்றனர்.

 

7. சொல் வடிவம்

அவர்கள் எண்களை புரிந்துக்கொள்ள தொடங்கும்போது, அந்த எண்களை எப்படி உச்சரிப்பது என்பதையும் நாம் அவர்களுக்கு சொல்லி தர தொடங்கலாம்.

 

8. விடுபட்ட எண்

அவர்கள் எண்களை ஒவ்வொன்றாக சொல்லவும், எழுதவும் பழகும்போது, அவற்றில் இடையுள்ள ஒரு சில எண்களை விட்டுவிடவும். அந்த இடத்தில் என்ன எண் வருமென அவர்களிடம் கேட்டு, அவர்கள் கூறும் சுவாரஸ்யமான பதிலை காணலாம்.

 

9. ரைம்ஸ்

ரைம்ஸ் பாடியும் அவர்களுக்கு எண்களை நாம் கற்றுக்கொடுக்கலாம். அதேபோல, அந்த ரைம்ஸில் வரும் எண்களை விரல் கொண்டும் நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டி, சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்யலாம்.

 

10. நம்பர் பிளாக்

இது நம்முடைய பிள்ளைகள் எண்களை கற்றுக்கொள்ள உதவும் ஒரு விளையாட்டு பொருளாகும். நம்பர் பிளாக்குகளில் மாறி இருக்கும் எண்களை வரிசைப்படுத்தி அடுக்க நாம் அவர்களை ஊக்குவிக்கலாம்.

 

11. சக நண்பர்கள்

உங்களின் பிள்ளைகள் சக நண்பர்களுடன் விளையாடும் வயதினராக இருந்தால், நிச்சயம் வெகு சீக்கிரமே அவர்களோடு சேர்ந்து கற்று எண்களை தெரிந்துக்கொள்ள தொடங்குகின்றனர்.

 

12. சாலையில் செல்பவை

அவர்களை வெளியில் அழைத்து செல்லும்போது செல்லும் வாகனங்களை சுட்டி காட்டி எத்தனை கார், பைக் செல்கிறது, நிற்கிறது போன்றவற்றை கொண்டும் நாம் அவர்களுக்கு எண்களை எளிதாக கற்றுக்கொடுக்கலாம்.

 

13. புள்ளிகளை இணைத்தல்

நாம் சிறுவயதில் இதனை செய்திருப்போம். காணப்படும் எண்களை இணைக்கும்போது தவளை, சிங்கம் என பல வடிவங்கள் முழுமையடையும். இதுவும் எண்களை நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க காணப்படும் எளிய வழிகளுள் ஒன்றாகும்.

எண்களை நம்முடைய அன்றாட வாழ்வில் பல மாதிரியாக நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தரலாம். அவற்றுள் சில சுவாரஸ்யமான வழிகளை தான் நாம் இப்போது பார்த்தோம். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம், நன்றி, வணக்கம்.

#earlylearning #boostingchilddevelopment

A

gallery
send-btn