30 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிறந்த பிள்ளைகளின் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றை நாம் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை பற்றிய பல பயனுள்ள சுவாரஸ்யமான தகவலை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம்.
பிள்ளைகளின் காதுகளை பராமரிப்பது எப்படி?
பொதுவாக, நம்முடைய காதுகளில் எந்த வித வைத்தியத்தையும் மருத்துவர்களை கேட்காமல் செய்ய கூடாது என்பார்கள். காரணம், இது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு சில அம்மாக்கள் பிள்ளைகளுக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது, பட்ஸ் கொண்டு காதை குடைவது போன்ற செயல்களை செய்வர். இதெல்லாம் முற்றிலும் பாதுகாப்பற்ற ஒரு செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி இருக்கும்போது, பிள்ளைகளின் காதுகளை எப்படி பராமரிப்பது என்பதை நாம் பார்ப்போம்.
1. பிள்ளைகள் காதின் வெளிப்புறம் மட்டுமே சுத்தம் செய்யவும். இதற்கு சுத்தமான துணி அல்லது காட்டன் பஞ்சு, வெதுவெதுப்பான நீர் போதும்.
2. பிள்ளைகளின் காதிற்குள் சுத்தம் செய்வதை கட்டாயம் தவிர்க்கவும். ஒருவேளை அவர்கள் காதினுள் அழுக்கு இருப்பதை கண்டாலும், அதனை எக்காரணம் கொண்டு நீங்களாக சுத்தம் செய்யக்கூடாது.
3. பொதுவாக பிள்ளைகள் காதில் உள்ள குறும்பி, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காது சொட்டு மருந்து:
1. டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே பிள்ளைகள் காதுக்கு சொட்டு மருந்து பயன்படுத்தவும்.
பிள்ளைகளின் மூக்கை பராமரிப்பது எப்படி?
நமக்கு சளி இருந்தால், எப்படி சிந்த வேண்டுமென்பதை நாம் அறிவோம். ஆனால், நம்முடைய பிள்ளைகளுக்கு அதெல்லாம் தெரியாதல்லவா? அப்படி இருக்கும்போது, அவர்களால் அழுது மட்டுமே அவர்களுடைய அசவுகரியத்தை வெளிப்படுத்த முடியும். பிள்ளைகளின் மூக்கை எப்படி பராமரிப்பது என்பதை நாம் பார்ப்போம்.
1. பல்ப் சிரஞ்சியை மருத்துவர்கள் பரிந்துரைக்கு பிறகு பயன்படுத்தலாம். இதனை கொண்டு பிள்ளைகளின் மூக்கில் இருக்கும் சளி எளிதில் வெளிவரும். ஆனாலும் இதனை மென்மையாக நாம் பயன்படுத்த வேண்டும்.
2. நம்முடைய பிள்ளைகளுக்கு நாஷல் ஸ்பிரே அல்லது டிராப்பை நாமாகவே பயன்படுத்த கூடாது. முதலில் இதனை பயன்படுத்துவது குறித்து மருத்துவர்களிடம் கேட்கவும். இப்போது நம்முடைய மூக்கை போல நம் பிள்ளைகள் மூக்கு இருக்காது என்பதால், பயன்படுத்துவதற்கு முன்பு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து டாக்டர்களிடம் கேட்கலாம்.
3. நம்முடைய பிள்ளைகளுக்கு மூக்கடைப்பு இருக்கும்போது, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வைக்கவும் டாக்டர் பரிந்துரைக்கலாம். இது அவர்களின் மூக்கடைப்பை சரி செய்ய உதவுகிறது.
4. நம்முடைய பிள்ளைகள் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் குடிக்கும் முன்பு, பிள்ளைகளின் மூக்கு சுத்தமாக உள்ளதா என்பதை அம்மாக்கள் உறுதி செய்துக்கொள்வது நல்லது.
5. தாய்ப்பால் சொட்டை மூக்கில் விட்டாலும் இந்த பிரச்சனை சரியாகும். நம்ப முடியவில்லையா, உங்களுடைய பிள்ளைகளுக்கு மூக்கடைப்பு இருக்கும்போது, டிராப்பர் பயன்படுத்தி சில சொட்டு தாய்ப்பாலை பிள்ளைகள் மூக்கில் விடவும். இந்த தாய்ப்பாலில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பண்புகள், சளிக்கு நல்லது.
பிள்ளைகளின் தொண்டையை பராமரிப்பது எப்படி?
மூன்று மாதங்கள் வரை உள்ள பிள்ளைகளுக்கு தொண்டை கரகரப்பு இருந்தால், அவர்களால் பால் குடிக்க முடிகிறதா என்பதை முதலில் பார்க்கவும். ஒருவேளை அவர்களால் ஒழுங்காக பாலை குடிக்க முடியாவிட்டால், அப்போது நிச்சயம் டாக்டரிடம் அழைத்து செல்வது நல்லது. காரணம், அவர்கள் இப்போது முழு எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருக்க மாட்டார்கள் என்பதால், இது போன்ற சூழ்நிலைகளை நாம் சாதாரணமாக கருதிவிட கூடாது.
நம்முடைய மருத்துவர்கள் தான் வீட்டு வைத்தியம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த மாதிரியான சூழலில் முடிவு செய்வர்.
தோழிகளே, நம்முடைய பிள்ளைகளின் காது, மூக்கு, தொண்டை குறித்த பல தகவலை நாம் இப்போது தெரிந்துக்கொண்டோம். இந்த பதிவு நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A