பிறந்த பிள்ளைகள் மலம் கழித்தல் குறித்து அறிய வேண்டியவை

cover-image
பிறந்த பிள்ளைகள் மலம் கழித்தல் குறித்து அறிய வேண்டியவை

பிறந்த பிள்ளைகளின் டயாப்பரை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவர்கள் கழிக்கும் மலமே, அவர்கள் உடல் நலனை குறித்த பல வித தகவல்களை நமக்கு தருகிறது. அதோடு, அவர்கள் குடிக்கும் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலின் அளவு எவ்வளவு என்பதையும் அதுவே கூறுகிறது. நம்முடைய பிள்ளைகளுக்கு நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், மலச்சிக்கல் இருந்தாலும், அவர்கள் கழிக்கும் மலத்தை பொறுத்தே அதனையும் நாம் முடிவு செய்கிறோம்.

 

தாய்ப்பால், ஃபார்முலா பால் கொடுப்பதனால் பிள்ளைகளின் மலம் வேறுபடுமா?

தாய்ப்பால் தரும்போது பிள்ளைகள் அதிகமாக மலம் கழிக்க வாய்ப்புள்ளது. அதேபோல தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தவர்கள் திடீரென ஃபார்முலா பாலை கொடுக்கும்போதும், பிள்ளைகளின் மலத்தின் தன்மை மாறி காணப்படுகிறது. அதேபோல அவர்கள் நனைக்கும் டயாப்பரும் அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். இப்போது அவர்கள் 5 முதல் 8 டயாப்பர் வரை நனைக்க வாய்ப்புள்ளது.

 

முதல் மூன்று நாட்கள் பிள்ளைகளின் மலம் எப்படி இருக்கும்?

நீங்கள் தாய்ப்பால் தருபவராக இருந்தால், மெக்கோனியம் எனப்படும் மலத்தை பிறந்த 24 முதல் 48 மணி நேரம் நம்முடைய பிள்ளைகள் கழிப்பார்கள். நான்காவது நாள் அவர்கள் கழிக்கும் மலம் பார்ப்பதற்கு பச்சை - மஞ்சள் கலந்து காணப்படும்.

ஃபார்முலா பாலை கொடுக்கும்போதும், இதேபோல தான் முதல் 3 நாட்கள் நம்முடைய பிள்ளைகளின் மலம் காணப்படும்.

 

முதல் ஆறு வாரங்களில் பிள்ளைகளின் மலம் எப்படி இருக்கும்?

நீங்கள் தாய்ப்பால் தரும்போது, அவர்கள் தண்ணியாக மஞ்சள் நிறத்தில் போவார்கள். குறைந்தது தினமும் மூன்று முறையாவது மலம் கழிப்பார்கள்.

ஃபார்முலா பாலை கொடுக்கும்போது, லேசான பிரவுன் கலர் அல்லது பச்சை நிறத்தில் மலம் கழிப்பார்கள். தினமும் ஒன்று முதல் 4 முறையாவது மலம் கழிக்க வாய்ப்புள்ளது.

 

ஆறு மாதங்களில் பிள்ளைகளின் மலம் எப்படி இருக்கும்?

நாம் சாலிட் ஃபுட் கொடுக்க தொடங்கியவுடன், தாய்ப்பால் குடிக்கும் நம்முடைய பிள்ளைகள் அதிகமாக மலம் கழிக்க வாய்ப்புள்ளது. ஃபார்முலா பாலை நாம் கொடுத்து வந்தால், இப்போது தினமும் 1 - 2 முறை அவர்கள் மலம் கழிக்க வாய்ப்புள்ளது.

 

மலத்தின் தன்மை எப்படி இருக்கும்?

தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளின் மலம், விதை போன்று இருக்கும். இது பார்ப்பதற்கு கடுகு நிறத்தில் இருக்கும். அவர்கள் சாலிட் உணவு சாப்பிட்டு, தாய்ப்பாலும் குடிக்கும்போது தண்ணியாகவும் போக வாய்ப்புள்ளது.

ஃபார்முலா பால் குடிக்கும் பிள்ளைகளின் மலம், மஞ்சள் கலந்த பச்சை அல்லது லேசாக பிரவுன் நிறத்தில் இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளை காட்டிலும் இவர்களின் மலம் பேஸ்ட் போலவும் இருக்கும்.

 

எப்போது உதவி தேவை?

கீழ்காணும் அறிகுறிகளை நாம் பிள்ளையின் மலத்தில் கண்டால், அப்போது டாக்டர் ஆலோசனை நமக்கு அவசியமாகிறது. அவை,

1. மெரூன் கலர் அல்லது இரத்தமாக மலம் கழித்தால்

2. நான்கு நாட்கள் கழித்தும் அவர்கள் கழிக்கும் மலம் கருப்பாக இருந்தால்
3. வெள்ளை அல்லது சாம்பல் நிறமாக மலம் இருந்தால்

4. வழக்கத்தை விட அதிகமாக மலம் கழித்தால்

5. சளி அல்லது தண்ணியாக மலம் கழித்தால்

 

நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது வயிற்றுப்போக்கு இருந்தால், அதற்கு காரணம் வைரஸ் அல்லது பாக்டீரியாவாக இருக்கலாம். நீர்ச்சத்து அவர்கள் உடலில் குறையும்போது வயிற்றுப்போக்கானது உண்டாகிறது.

ஆப்பிள் இதனை சரி செய்யும் என்றாலும், நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது ஆப்பிள் கொடுப்பது குறித்து மருத்துவர்களே முடிவெடுப்பர்.

நம்முடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தை தெரிந்துக்கொள்ள அவர்கள் மலம் கழிக்கும்போது நாம் அவர்கள் அருகில் இருக்க வேண்டியது அவசியம். பிறந்த பிள்ளைகளின் மலம் மாறுதல்களுடன் காணப்படுவது முற்றிலும் இயல்பான விஷயமே. இது அவர்களின் வளர்ச்சியையும் குறிக்கும்.

ஒருவேளை அவர்கள் மலம் கழிக்கும்போது அசாதாரண நிலையை நாம் கண்டால் மட்டுமே மருத்துவர்களை இப்போது பார்க்கலாம். இந்த பதிவில் வழங்கப்பட்ட தகவல் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்.

#babyhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!