31 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
புரதச்சத்து தேவை என்பது நம் பிள்ளைகளின் ஒவ்வொரு வயதை பொறுத்து மாறுபடுகிறது. நம் பிள்ளைகளின் சரியான வளர்ச்சிக்கு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். அவற்றுள் முக்கியமானது புரதச்சத்து. ஏனெனில், ஒவ்வொரு வாழும் உயிரினத்தின் உடலை கட்டமைக்க புரதச்சத்து அவசியமாகிறது. அதோடு, நம்முடைய பிள்ளைகளின் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் புரதச்சத்து நமக்கு உதவுகிறது. இப்போது எவற்றிலெல்லாம் புரதச்சத்து உள்ளது என்பதை நாம் பார்ப்போம் வாருங்கள்.
எவற்றில் எல்லாம் புரதச்சத்து உள்ளது?
1. முழு முட்டை
முட்டையில் அதிகளவிலான புரதச்சத்து உள்ளது. அதே வேளையில், நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய சுவையான உணவு இதுவென்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவற்றை காலை உணவாகவோ அல்லது மாலை ஸ்நாக்ஸ் ஆக கூட நாம் தரலாம்.
2. சிக்கன்
நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று தான் இந்த சிக்கன். இதிலும் அதிகளவிலான புரதச்சத்து உள்ளது. இது நம்முடைய பிள்ளைகளின் இதயத்திற்கு நல்லது, பிள்ளைகளின் ஆற்றலை பல மடங்கு பெருக்கவும் இது உதவுகிறது. உடலின் தசைகள் வலுப்பெறவும் சிக்கன் நமக்கு உதவுகிறது.
3. சாதம்
இவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. நெய் சாதமும் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுத்து புரதச்சத்தை பெற செய்யலாம்.
4. மீன்
கிழங்கான் மீன், கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. அதோடு புரதமும் அதிகளவில் உள்ள உணவு பொருள் தான் மீன். இந்த கொழுப்பு அமிலங்கள், நம்முடைய பிள்ளைகளின் மூளைக்கு நல்லது. நம்முடைய பிள்ளைகளின் உணவுப்பழக்க வழக்கத்தில் மீனை சேர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
5. பருப்பு வகைகள்
பாதாம் பருப்பு போன்றவையும் நம்முடைய பிள்ளைகளுக்கு புரதத்தை வழங்கும் ஒரு உணவாகும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளது. இதனை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆகவும் நாம் கொடுக்கலாம்.
என்ன மாதிரியான காலை உணவுகளை எல்லாம் புரதச்சத்து கிடைக்க நம் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்?
1. பாசிப்பருப்பு தோசை
பாசிப்பருப்பில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதனை தோசையாக சுட்டு நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். பாசிப்பருப்பு தோசை மிகவும் சுவையான ஒரு உணவும் என்பதால், நம்முடைய பிள்ளைகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
2. சோயா உப்புமா
தென்னிந்திய உணவில் உப்புமா இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆனால், வட இந்திய மக்களும் இன்று உப்புமாவை காலை உணவிற்கு அதிகமாக கொடுக்க தொடங்கிவிட்டனர். காரணம், காய்கறிகள் சேர்த்து செய்யும்போது பலவித ஊட்டச்சத்துக்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு கிடைக்கிறது. சோயாவில் உப்புமா செய்து, நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது, புரதச்சத்து கிடைக்கிறது. இதனோடு நாம், உளுத்தம் பருப்பு, கேரட், பீன்ஸ், வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கூடுதல் சுவையுடனும் கொடுக்கலாம்.
3. கீரை சப்பாத்தி
நம்முடைய பிள்ளைகளுக்கு சப்பாத்தி, குருமா என்றால் மிகவும் பிடிக்கும். இந்த சப்பாத்தியோடு கூடுதலாக கீரையை சேர்த்து கொடுக்கும்போது, புரதச்சத்து கிடைக்கிறது. இந்த சுவையான உணவை தருவதன் மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் புரதச்சத்தை நம்மால் உறுதிசெய்ய முடியும்.
4. காய்கறி கஞ்சி
இதனில் புரதச்சத்து நிறைந்துள்ளது. அதோடு, எல்லா விதமான ஊட்டசத்துக்களும் நிறைந்ததும் காய்கறி மட்டும் தான். இந்த கஞ்சியை செய்யும்போது நாம், நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றை கூடுதலாக சேர்த்து சுவையுடன் ஆரோக்கியத்தையும் சேர்த்து நம்முடைய பிள்ளைகளுக்கு தரலாம்.
5. முட்டை வறுவல் மசாலா
இது சுவையான உணவும் என்பதால் நிச்சயம் நம்முடைய பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போகாது. இதனை காலை வேளையில் சப்பாத்தியுடன் சேர்த்து நாம் அவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய புரதச்சத்து உறுதியாகிறது.
6. சுண்டல்
கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் செய்தும் நாம் அவர்களுக்கு கொடுக்கலாம். இதனோடு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கூடுதல் சுவையுடனும் நாம் அவர்களுக்கு கொடுக்கலாம்.
புரதச்சத்து நம்முடைய பிள்ளைகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, பெற்றோர்களாகிய நம்முடைய கடமை. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
A