கர்ப்பிணிகள் செய்து சாப்பிட வேண்டிய தீபாவளி பலகாரம்

cover-image
கர்ப்பிணிகள் செய்து சாப்பிட வேண்டிய தீபாவளி பலகாரம்

கர்ப்பமாக இருக்கும்போது இனிப்பு, காரம் என எதை வாயில் வைத்தாலும் அது ஒவ்வாமை காரணமாக குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். ஆனால், எல்லோருடைய வீட்டிலும் இப்போது தீபாவளி திருநாளை முன்னிட்டு விதவிதமான பலகாரம் தயாராகிக்கொண்டு இருக்கும். நாம் ஸ்வீட் சாப்பிட கூடாது என்பதற்காக இவற்றின் பக்கம் எல்லாம் போகாமல் இருந்து வருவோம். ஆனால், சில ஆரோக்கியமான பலகாரங்களை கர்ப்பிணி பெண்களும் இந்த தீபாவளி திருநாளன்று சாப்பிடலாம். இவை நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது. அவை என்னவென்பதை இப்போது நாம் பார்ப்போம்.

 

1. பருப்பு லட்டு

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்

வால்நட் - 1 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)

பாதாம் - 2 டேபிள்ஸ்பூன் (முணுக்கியது)

எள் - 2 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்

பால் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்வது எப்படி?

1. நான்ஸ்டிக் கடாயை சுட வைக்கவும்.

2. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு ஓட்ஸை வறுக்கவும்.

3. இதனை கிண்ணத்துக்கு மாற்றி விடவும்.

4. இப்போது இரண்டு நிமிடங்களுக்கு எள் விதையை வறுத்து, ஓரமாக வைத்துவிடவும்.

5. கடாயில் நெய் மற்றும் வெல்லத்தை ஒரு நிமிடத்துக்கு சுட வைத்து, நன்றாக கிண்டிக்கொள்ளவும்.

6. அதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

7. ஓட்ஸ், எள், முணுக்கிய பருப்பு, நெய், உலர்ந்த திராட்சை மற்றும் வெல்லத்தை சேர்த்துக்கொள்ளவும்.

8. பால் சேர்த்து மீண்டும் கலந்துக்கொள்ளவும்.

9. அதனை லட்டுவாக உருட்டிக்கொள்ளவும்.

10. அவ்வளவு தான் சுவையான பருப்பு லட்டு ரெடி.

11. காற்றுப்புகாத டப்பாவில் வைத்து இதனை நாம் உண்ணலாம்.

 

2. கேரட் அல்வா

தேவையான பொருட்கள்

துருவிய கேரட் - 3 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

பொடித்த வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்

பால் - 2 டேபிள்ஸ்பூன்

பால் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்வது எப்படி?

1. துருவிய கேரட்டை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.

2. கடாயில் நெய்யை சுட வைக்கவும்.

3. இப்போது வேகவைத்த கேரட்டை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.

4. பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாக கிண்டவும்.

5. கடைசியாக, பால் மற்றும் பால் பவுடரை சேர்த்து, இன்னொரு ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்திருக்கவும்.

6. அவ்வளவு தான், சுவையான ஆரோக்கியமான கேரட் அல்வா ரெடி.

 

3. பேரிச்சம்பழம் கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்

பால் - 2 கப்

கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்

பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய பேரிட்சை - 1 கப்

வால்நட் - 1 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)

பாதாம் - 2 டேபிள்ஸ்பூன் (முணுக்கியது)


செய்வது எப்படி?

1. பால், கஸ்டர்ட் பவுடர், வெல்லத்தை கடாயில் சேர்த்துக் கொள்ளவும்.

2. அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, எட்டு முதல் பத்து நிமிடங்களுக்கு நன்றாக கிண்டிக்கொள்ளவும்.

3. பேரிட்சையை அதனோடு சேர்த்து, இன்னொரு இரண்டு நிமிடத்துக்கு அடுப்பில் வைத்திருக்கவும்.

4. பிறகு ஆறவிடவும். இதனை ஃபிரிட்ஜில் வைத்திருக்கவும்.

5. பருப்பை மேலே தூவி, சுவையாக சாப்பிடலாம்.

 

4. வால்நட் ஷீரா

தேவையான பொருட்கள்

வால்நட் - 1 கப் (முணுக்கியது)

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

பால் - ½ கப்

பொடித்த வெல்லம் - ¼ கப்

 

செய்வது எப்படி?

1. கடாயில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும்.

2. முணுக்கிய வால்நட்டை, நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்திருக்கவும்.

3. இப்போது வெல்லத்தையும், பாலையும் சேர்க்கவும்.

4. நன்றாக கிண்டவும்.

5. இன்னொரு ஐந்து நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்திருக்கவும்.

6. அவ்வளவு தான், சுவையாக சாப்பிட வால்நட் ஷீரா ரெடி.

தோழிகளே, இந்த தீபாவளிக்கு இது போன்ற ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிட்டு, நம்முடைய பிள்ளைகளை கையில் தாங்கவிருக்கும் அந்த ஒரு நிமிடத்திற்காக நாம் காத்திருப்போம். அடுத்த தீபாவளியை நம்முடன் கொண்டாட நம்முடைய பிள்ளைகளும் நமக்காக காத்திருக்கிறார்கள். மீண்டும், ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#diwali
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!