பால்வாடிக்கு செல்லவிருக்கும் பிள்ளைக்கு சூப்பர் டிப்ஸ்

cover-image
பால்வாடிக்கு செல்லவிருக்கும் பிள்ளைக்கு சூப்பர் டிப்ஸ்

1. தொடர்பு திறன்

பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தொடர்பு திறன் மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் சொல்வதை புரிந்து, அதனை மனதில் உள்வாங்கி கொண்டு படிக்க அவர்களுடைய தொடர்பு திறனானது மேம்பட வேண்டியது அவசியம்.

 

2. கவனிக்கும் திறன்

இப்போது பிள்ளைகளை கவனிக்க சொல்வது சற்று கடினமான விஷயமே. நாம் ஒன்று கூறினால், அவர்கள் ஒன்று செய்வார்கள். இதுவும் அவர்களின் இப்போதைய வளர்ச்சிப்படிநிலைகளில் ஒன்று தான். ஆனாலும், பள்ளிக்கு செல்லும் நம்முடைய பிள்ளைகளுக்கு பாடுதல், வரைதல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். இதோடு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நாம் அவர்களை ஊக்கப்படுத்தவும். இதனால், படிப்பு மீது ஆர்வம் அவர்களுக்கு நாளடைவில் அதிகரிக்க தொடங்கும்.

 

3. சக நண்பர்களுடன் படித்தல்

பள்ளிக்கு செல்லும் நம்முடைய பிள்ளைகள் புதுப்புது நண்பர்களை பிடிக்கவும் ஆர்வமாக இருப்பார்கள். இது, அவர்களுடைய சமூக திறனை வளர்க்கும் ஒரு செயல்பாடாகும். அவர்கள் பள்ளிக்கு சென்று வந்ததும், என்னவெல்லாம் நடந்தது என்பதை ஆர்வத்துடன் கேட்டு அவர்களை நாம் ஊக்கப்படுத்தலாம்.

 

4. வழிமுறைகளை பின்பற்றுதல்

பள்ளியில் சொல்லப்படும் வழிமுறைகளை பின்பற்ற, நம்முடைய பிள்ளைகளை ஊக்கப்படுத்தவும். இதனை கடினமாக அவர்கள் மனதில் புகுத்தாமல் வேடிக்கையாக சொல்வதன் மூலம், நிச்சயம் நம்முடைய பேச்சை அவர்கள் கேட்பார்கள்.

 

5. எழுது பொருட்கள்

பென்சில், கிரேயான், கத்தரிக்கோல், கலர் பென்சில் என ஒவ்வொன்றின் பயன்பாட்டையும் அவர்களுக்கு சொல்லி ஊக்கமளிக்கலாம். அவர்கள் ஏதாவது ஒன்றை வரைந்து காட்டும்போது, நாம் அவர்களை பாராட்டலாம். இது தான் அவர்கள் எண்களையும், எழுத்துக்களையும் கற்றுக்கொள்ள உதவும்.

 

6. சுயமாக செயல்பட ஊக்குவித்தல்

பள்ளிக்கு செல்லும் நம் பிள்ளைகள் தானாகவே பல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், பள்ளிக்கு சென்றதும் வகுப்பறையில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், சாப்பிட செல்வதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும், சாப்பிட்டவுடன் என்ன செய்ய வேண்டும் போன்ற ஒவ்வொன்றையும் அவர்களுக்கு புரிய வைக்கவும். அவர்களுக்கு பாத்ரூம் வந்தால், அங்கிருக்கும் ஆசிரியரின் உதவியுடன் செல்ல வேண்டியதையும் நாம் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

 

7. பாதுகாப்பாக இருத்தல்

இது நம்முடைய பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். தெரியாதவர்களிடம் எந்த காரணத்துக்காகவும் பேச கூடாது என்றும், அவர்கள் கொடுக்கும் எதனையும் வாங்க கூடாது என்றும் சொல்லி விடவும். அதோடு, பள்ளியை விட்டு எங்கும் வெளியில் செல்ல கூடாது என்றும் சொல்லி அனுப்புவது நல்லது.

 

8. அடம்பிடித்தல்

அவர்கள் இதுவரை வீட்டில் பல விஷயங்களுக்காக அடம்பிடித்து அழுது இருக்கலாம். ஆனால், பள்ளிக்கு சென்ற பிறகு இது போன்று அடம்பிடித்து ஆசிரியர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதையும் சொல்லி அனுப்பவும்.

 

9. கையாளும் விதம்

பள்ளிக்கு செல்வதற்கு முன்னால், நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை, மென்மையாக சொல்லி அனுப்பவும். மூத்த பிள்ளைகளிடம் கடுமையாக சொல்வதை போல, அவர்களிடமும் சொல்ல கூடாது. நாம் கடுமையாக நடந்து கொண்டால், அப்போது அவர்கள் நாம் சொல்வதற்கு எதிராக செய்துவிடக்கூடும்.

 

10. பெருமை பாராட்டுங்கள்

நாம் அவர்கள் செய்யும் நற்செயல்களை எப்போதும் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்முடைய சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர அது உதவிகரமாக இருக்கும். இது அவர்கள் தவறுகள் செய்தாலும், அதனை திருத்திக்கொண்டு கற்றுக்கொள்ள உதவுகிறது. அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும், அந்த தவறால் என்னவெல்லாம் நேரும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவும். இதனால், நம்முடைய சொற்களை தட்டாமல் சரியாக நடந்துக்கொள்ள முயல்வார்கள்.

தோழிகளே, பள்ளிக்கு செல்லும் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல வித சூழலை அமைத்து தர வேண்டியது நம்முடைய கடமையே. நாம் அவர்களை உருவாக்கும் விதம் தான், ஆசிரியர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும். இன்னொரு சுவாரஸ்யமான பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

#preschooler #parentinggyaan #boostingchilddevelopment #earlylearning
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!