இரண்டாவது பிள்ளையை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் அறிய வேண்டியவை

cover-image
இரண்டாவது பிள்ளையை பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் அறிய வேண்டியவை

முதல் முறை பிள்ளை பெற்றுக்கொண்ட நமக்கு, கிட்டத்தட்ட ஓரளவு அனுபவம் கிடைத்திருக்கும். இதனால் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும்போது எதை செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்ற குழப்பம் குறைவாகவே இருக்கிறது. ஆனால், பிள்ளை பெற்றுக்கொண்ட பிறகு ஒருவித குழப்பம் வரலாம். ஆம், முதல் குழந்தையை இப்போது நாம் எப்படி பார்த்துக்கொள்வது என்பது குறித்த பல கேள்விகள் மனதில் எழும். பெரும்பாலான மருத்துவர்கள் ஒன்றரை வருடம் கழித்து இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுவதே சிறந்தது என்கின்றனர்.

 

நான் இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ள எப்படி தயாராவது?

1. கையில் தவழ்ந்து வந்த உங்களின் முதல் பிள்ளை இப்போது பள்ளிக்கு செல்ல தயாராக இருக்கும் பருவமிது. அதாவது நாம் அவர்களுக்கு மென்மையாக ஒரு சில விஷயங்களை எடுத்துக்கூறும்போது அதனை அவர்கள் இந்த பருவத்தில் ஏற்றுக்கொள்ள செய்கின்றனர். இந்த மாதிரியான சமயம், நம்முடைய இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ள நாம் திட்டமிடலாம்.

2. நம்முடைய முதல் பிள்ளை, பிறக்க போகும் பிள்ளையை கவனித்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் இப்போது நாம் இரண்டாவது பிள்ளைக்காக திட்டமிடலாம்.

3. உங்களுடைய முதல் பிள்ளை, இப்போதும் உங்களுடைய உதவியை அதிகமாக எதிர்பார்க்கிறார் என்றால், சற்று தாமதமாக நீங்கள் இரண்டாவது பிள்ளைக்கு திட்டமிடலாம். ஏனென்றால், இப்போது இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ளும்போது, முதல் பிள்ளைக்கு பணிவிடைகள் செய்ய முடியாமல் போகலாம்.

4. அதேபோல, முதல் பிரசவத்தின் போது நமக்கு போடப்பட்ட தையல்கள், செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்றவையும் நம்முடைய இரண்டாவது பிள்ளைக்கு திட்டமிடும் காலத்தை முடிவு செய்கிறது. முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், மீண்டும் சிசேரியனுக்கு நம் உடல் தயாராக இரண்டு வருடங்கள் ஆகும். முதல் முறை சிசேரியனாக இருந்தால், இரண்டாவது முறை சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு இருப்பது மிகவும் கடினம் என்கின்றனர் மருத்துவர்கள்.

5. இதை தவிர்த்து, நம்முடைய குடும்ப சூழ்நிலை, வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் இரண்டாவது பிள்ளைக்கு திட்டமிடலாம். அதேபோல இரண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும்போது அதற்கு ஏற்றார் போலவும் நம்முடைய வீடு போன்றவை இருக்க வேண்டும்.

6. நாம் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கிறோமா இல்லையா என்பதை பார்த்தும் இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ள திட்டமிடலாம்.

 

நம்முடைய வயதை பொறுத்து இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்வது திட்டமிடப்பட வேண்டுமா?

பெண்களுக்கு வயதாகும்போது, வெளிப்படும் கருமுட்டை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல, முட்டையின் தரமும் வயதை பொறுத்து மாறுபட்டுக்கொண்டே இருக்கும் என்பதால், இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்வதற்கு நாம் சரிதானா என்பதை மருத்துவர்களிடம் கேட்டு பதிலை பெறவும்.

அதேபோல கணவர் வயதை பொறுத்தும், இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்வது அமைகிறது. 35 வயதுக்கு மேலாக, விந்தணுக்களின் தரம் குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

வேறு என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

நமக்கு நம்முடைய கணவரின் உதவி கிடைக்குமென்றால், நிச்சயம் இரண்டாவது பிள்ளைக்கு திட்டமிடலாம். ஒருவேளை உங்களின் கணவர் உங்களுக்கு ஒத்தாசையாக இல்லாதபோது, குடும்ப சூழலை கருத்தில் கொண்டே நாம் இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ள திட்டமிட வேண்டும்.

 

செய்யும் வேலையையும் நாம் கவனிக்க வேண்டுமா?

ஒருவேளை உங்களின் கணவர் வேலையில் இருப்பவராக இருந்தால், அதனை பொறுத்தும் நாம் இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்வது குறித்து திட்டமிட வேண்டும். இது தேவையற்ற பணி சுமையை உங்கள் இருவருக்கும் குறைக்க உதவுகிறது.

குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு உதவ தயாராக இருக்கும் பட்சத்திலும், இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ள நாம் திட்டமிடலாம்.

தோழிகளே, உண்மையில் சொல்ல வேண்டுமானால், முதல் பிள்ளையை பெற்றுக்கொள்வதை காட்டிலும் இரண்டாவது பிள்ளையை பெற்றுக்கொள்ளும்போதே அதிக திட்டமிடல் அவசியமாகிறது. மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#planningababy
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!