கர்ப்பமாக இருக்கும்போது அந்தரங்க உறுப்பை பாதுகாக்க பயனுள்ள டிப்ஸ்

cover-image
கர்ப்பமாக இருக்கும்போது அந்தரங்க உறுப்பை பாதுகாக்க பயனுள்ள டிப்ஸ்

கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய உடலில் பல வித மாறுதல்கள் உண்டாகின்றன. அவற்றுள் உணரும் அறிகுறிகள் மார்பகம் பெரிதாக காணப்படுவது, வயிறு பெரிதாக தொடங்குவது, வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை தான். ஆனால், நம்முடைய அந்தரங்க பாகத்திலும் பல வித மாறுதல்கள் இப்போது உண்டாகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அவை என்னவென்பதையும், அவற்றினால் ஏற்படும் சிரமங்களை எப்படி தவிர்ப்பது என்பதையும் நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

 

கர்ப்பமாக இருக்கும்போது அந்தரங்க உறுப்பில் உண்டாகும் மாற்றம் என்னென்ன?

1. யோனி வெளியேற்றம் அதிகரித்தல்

கர்ப்பமாக இருக்கும்போது இதனை நம்மால் நன்றாகவே உணர முடியும். இதற்கு காரணம், எஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் எனப்படும் ஹார்மோன் தான். அதாவது, இரத்த அழுத்தம் மிகுதி ஆவதாலும், இரத்த ஓட்டம் அதிகரித்து காணப்படுவதாலும் இதனை நம்மால் உணர முடியும்.

கர்ப்பமாக இருக்கும்போது காணப்படும் யோனி வெளியேற்றம், மெல்லியதாக, வெள்ளையாக, பால் போன்று காணப்படும். பிரசவ தேதி நெருங்க இது அதிகமாகவும் காணப்படலாம். ஆனாலும், எந்தவொரு கெட்ட வாடையும் வருவதில்லை.

இந்த மாதிரியான யோனி வெளியேற்றத்தின் போது அணியும் பேடுகள், வாசனையற்றது என்பதை உறுதி செய்யவும்.

 

2. யோனி தொற்று

யோனி வெளியேற்றம் அதிகம் இருக்க, யோனி தொற்றும் காரணமாக இருக்கலாம். இது கர்ப்பமாக இருக்கும்போது வரக்கூடிய பொதுவான பிரச்சனையே.
ஈஸ்ட் தொற்று:

இது நம்முடைய பிறக்க போகும் பிள்ளையை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஆனாலும் இதனால், யோனி அரிப்பு, யோனி வெளியேற்றம், யோனி எரிச்சல் போன்ற அசவுகரியங்கள் உண்டாகக்கூடும்.

 

பாக்டீரியா தொற்று:

பாக்டீரியாவினால் நமக்கு தொற்று உண்டாகிறது. இது உணர்வதற்கு மீன் போன்ற நாற்றத்தையும், சாம்பல் நிற வெளியேற்றத்தையும் கொண்டிருக்கும். இதனால் பிள்ளை பிறக்கும்போது எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும்.

 

3. அந்தரங்க உறுப்பில் வீக்கம்

நம்முடைய பிள்ளைகள் வளர தொடங்கி இருப்பதால், இரத்த ஓட்டம் மிகுதி காரணமாக அந்தரங்க உறுப்பில் வீக்கம் காணப்படுவதை நாம் உணரலாம். இதனால், உடலுறவில் இப்போது நமக்கு கூடுதல் ஆர்வமும் இருக்க வாய்ப்புள்ளது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும், இரத்த ஓட்ட மிகுதியாலும் நம்முடைய அந்தரங்க உறுப்பு அடர் நிறத்திலும் இப்போது காணப்படலாம்.

 

4. யோனி இரத்தக்கசிவு

முதல் மூன்று மாதங்களில் இப்பிரச்சனை இருந்தால் அது இயல்பானது அல்ல. கருவானது, கருப்பை சுவற்றில் பதியும்போதும் இதுப்போல நடக்கக்கூடும். கருச்சிதைவு ஏற்பட்டாலும் இது போன்ற இரத்தக்கசிவை நம்மால் உணர முடியும் என்பதால் மிகுந்த கவனம் வேண்டும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் நாம் இதுபோன்ற இரத்தக்கசிவை கண்டால், மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும்.

 

கர்ப்பமாக இருக்கும்போது என்னுடைய அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?

1. உங்களுடைய அந்தரங்க உறுப்பின் வெளியே எப்போதுமே வாசனைமிக்க ஸ்பிரே போன்ற எந்தவொரு பொருளையும் பயன்படுத்தக்கூடாது. சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் போதும்.

2. மருந்து நீர்களை அந்தரங்க உறுப்பில் பயன்படுத்த வேண்டாம். இவை, நல்ல பாக்டீரியாவையும் கொன்று, தொற்றை ஏற்படுத்தும்.

3. அந்தரங்க உறுப்பின் உள்ளே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

4. அந்தரங்க உறுப்பை சோப், ஜெல் போன்றவை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. இவை நம்முடைய அந்தரங்க உறுப்பில் எரிச்சலை உண்டாக்க செய்யும்.

5. உங்களது தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடிக்க சுத்தமான காட்டன் ஆடைகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

6. ஜீன்ஸ், பேண்டுகள் போன்ற டைட்டான உடைகளை அணிவதால் காற்றோட்டமாக உங்களின் அந்தரங்க பாகம் இல்லாமல் தேவையற்ற அசவுகரியத்தை உண்டாக்கும்.

7. மூன்றாவது மூன்று மாதங்களில் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் உண்டாவதால், ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை பேன்டி லைனர்களை மாற்றுவது நல்லது.

8. அந்தரங்க உறுப்பில் வாக்சிங் போன்றவை இப்போது நாம் நிச்சயம் பயன்படுத்த கூடாது. இதனால் அலெர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது தொற்று போன்ற தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட பெரிதும் உதவியாக இருக்கிறது. இன்னொரு பயனுள்ள பதிவில் மீண்டும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#pregnancycare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!