பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டிய குட் டச் & பேட் டச் (Good Touch & Bad Touch)

cover-image
பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டிய குட் டச் & பேட் டச் (Good Touch & Bad Touch)

இன்றைய நாளில் சமூகத்தில் சிறு பிள்ளைகள் கூட சுதந்திரமாக நடமாடுவது கடினமான காரியமே. காரணம், பிள்ளைகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல், பிள்ளைகளை கடத்துதல் என பிள்ளைகளுக்கு எதிரான பல குற்றங்கள் நிகழ்கிறது. இவற்றை தடுப்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

குட் டச் & பேட் டச் என்றால் என்ன?

 

பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் போது உண்டாகும் பயம், அவர்கள் வீடு திரும்பும் வரை நமக்குள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய பிள்ளைகள் பால்வாடிக்கு செல்லும் முன்பே இந்த குட் டச் மற்றும் பேட் டச் குறித்து பேச வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஒருவர் அவர்களை தொடும்போது, அது சரியான நோக்கத்துடன் தொடப்படுகிறதா, அல்லது தவறான நோக்கத்திற்காக தொடப்படுகிறதா என்பதை நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் சொல்லி வளர்க்க வேண்டும். இதனை தான் குட் டச் மற்றும் பேட் டச் என்பார்கள்.

 

குட் டச் குறித்து கற்றுத்தர வேண்டிய விஷயங்கள் எவை?

 

இந்த மாதிரியான தொடுதல்கள் அக்கறையுடன் மட்டுமே இருக்கும். அவை என்னவென்பதை நாம் விரிவாக பார்ப்போம்.

 

1. ஒருவர் தொடும்போது, அதனில் பாதுகாப்பை நம்முடைய பிள்ளைகள் உணர்ந்தால் அது குட் டச் ஆகும். இதனில் எவ்வித ஆபாசமும் கலந்து காணப்படாது.

2. நடைமுறை வாழ்க்கையை நாம் அவர்களுக்கு உதாரணம் காட்டலாம். நாமோ அல்லது பிள்ளைகளின் அப்பாவோ தொடுவதற்கும் மற்றவர்கள் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அவர்களுக்கு காட்டலாம். உதாரணமாக, அவர்கள் விளையாடும்போது நண்பர்கள் அவர்களை கையை பிடிப்பதை நாம் உதாரணமாக காட்டலாம்.

3. அவர்களுடைய உடல், அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை கற்றுக்கொடுங்கள். நாம் உட்பட, யார் அவர்களை தொட்டாலும், அது நல்லவிதமான தொடுதலா? இல்லையா? என்பதை உணர்வதற்கான சுதந்திரத்தை நாம் அவர்களுக்கு தரவேண்டும்.

 

பேட் டச் குறித்து கற்றுத்தர வேண்டிய விஷயங்கள் எவை?

 

இது ஒருவிதமான ஆபாசம் கலந்தோ அல்லது கூச்ச சுபாவத்தை உண்டாக்க கூடியதாகவோ இருக்கும். இதனை இப்போது விரிவாக காண்போம்.

1. உடலின் ஒவ்வொரு பாகத்திற்கு என ஒருவித பாதுகாப்பு உண்டு என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள். குறிப்பாக, அவர்கள் மார்பகம், பின்புறம், அந்தரங்க உறுப்பை யாராவது தொட முயன்றால், அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதை சொல்லி வளர்க்கவும்.

2. டிரெஸ்ஸை மேலோட்டமாக தொட்டு பேசுவது தவறல்ல என்றும், ஆனால் வரம்பை மீறி உடையை அழுத்துவது, தடவுவது போன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதையும் நாம் சொல்லி வளர்க்கவும்.

3. அதேபோல, அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தால் எப்படி உதவிக்கு அழைப்பது என்பது குறித்தும் நாம் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

 

பெற்றோர்கள் எதை எல்லாம் கவனிக்க வேண்டும்?

 

பிள்ளைகள் வளரவளர தொடர்ந்து அவர்களை நாம் கண்காணிக்க வேண்டும். அதேபோல, முன்பின் தெரியாதவர்களை நம்பி பிள்ளைகள் சார்ந்த எந்த பொறுப்பையும் ஒப்படைக்கக்கூடாது. அதேபோல, கண் மூடித்தனமாகவும் நம்முடைய பிள்ளைகள் மீது நமக்கு சந்தேகம் வரக்கூடாது. இல்லையென்றால், நல்லது, கெட்டதை நம்மிடம் பகிர்ந்துக்கொள்ள நம் பிள்ளைகள் பயம் கொள்வர். அவர்கள் மொபைல் பார்ப்பது குறித்தும் நாம் அவசியம் கண்காணிக்க வேண்டும்.

 

பாலியல் துன்புறுத்தல் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டியவை எவை?

 

இப்போது நாம் ஏன் இது குறித்து பேச வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். காலத்திற்கு ஏற்றார் போல, நாமும் நம்முடைய பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனாலும், அவற்றை குறித்து விளக்கும்போது மிகுந்த கவனத்துடனும் நாம் இருக்கவும். எவை எல்லாம் அந்தரங்க உறுப்பு என்பது குறித்தும், எந்த மாதிரியான தொடுதல் எல்லாம் தவறானது என்பது குறித்தும் நாம் அவர்களுக்கு புரிய வைக்கலாம்.

குழந்தையும், தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால், இன்றைய சூழலில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதென்பது பல வித பாதுகாப்பு மத்தியில் நிகழ வேண்டியதாக உள்ளது. மீண்டும் இன்னொரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

அனைவருக்கும், அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#parentinggyaan #childsafety
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!