பிறந்த பிள்ளைகளுக்கு அணிவிக்க வேண்டிய டயாப்பர்கள்

cover-image
பிறந்த பிள்ளைகளுக்கு அணிவிக்க வேண்டிய டயாப்பர்கள்

புதிதாய் தாய்மை எனும் ஸ்தானத்தை பெற்ற நமக்கு மகிழ்ச்சி இருக்கும், எண்ணற்ற கேள்விகளும், அதற்கு பதில் என்னவாக இருக்கும் என்ற குழப்பங்களும் மனதில் இருக்கும். அவற்றுள் ஒன்று தான் பிள்ளைகளுக்கு அணிவிக்க வேண்டிய டயாப்பர் குறித்தவை. இது பற்றி விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

டயாப்பர் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

டயாப்பர்களின் வகைகள்: எந்த மாதிரியான டயாப்பர் இப்போது நம்முடைய பிள்ளைக்கு சரியாக இருக்கும் என்ற குழப்பம் புதிதாய் பிள்ளை பெற்றுக்கொண்ட அம்மாக்களுக்கு இருக்கும். டேப் ஸ்டைல் வாங்க வேண்டுமா? பேண்ட் ஸ்டைல் வாங்க வேண்டுமா? என்ற குழப்பம் நமக்குள் இருக்கும். இன்றைய நாளில் பல பெற்றோர்கள் பேண்ட் ஸ்டைல் டயாப்பர்களை அணிவிக்கின்றனர். ஆனால், புதிதாக பிறந்த பிள்ளைகளுக்கு டேப் ஸ்டைல் தான் அணிவிக்கவும், அகற்றவும் எளிதாக காணப்படுகிறது.

 

உறிஞ்சும் தன்மை: டயாப்பர்கள், நம்முடைய பிள்ளைகளுக்கு மலம் மற்றும் சிறுநீரை உறிஞ்ச பயன்படுகிறது. நாம் வாங்கும் டயாப்பர்கள் குறைவாக உறிஞ்சும்போது, இதனால் பிள்ளைகளுக்கு சொறி, சிரங்கு வர வாய்ப்புள்ளது. அதனால், வாங்கும் முன்பு எது சிறந்தது என்றும், எது நன்றாக உறிஞ்சும் என்பதையும் பார்த்து வாங்குவது நல்லது. சொறி, சிரங்கு போன்றவை நம்முடைய பிள்ளைகளுக்கு இருந்தால், மருத்துவரிடம் மட்டுமே ஆலோசனை பெற்று, அதன்படி செயல்பட வேண்டும்.

விலை: வாங்குவதற்கு முன்பாக கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் டயாப்பர் விலை. சராசரியாக, நாம் ஒரு வருடத்திற்கு டயாப்பருக்காக 7 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது.

 

பொருந்துதல்: தொளதொளவென இருக்கும் டயாப்பர் அல்லது தவறான சைஸ் உடைய டயாப்பர் அதிகமான கசிவை ஏற்படுத்தி, துணியையும் ஈரமாக்கும். எப்போதும் டயாப்பர் வாங்கும்போது, அதன் மேல் கவரில் போடப்பட்டுள்ள எடையுடன் நம் பிள்ளைகள் எடையை ஒப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது. நாம் அணிவித்து விடும் டயாப்பர்களினால், அவர்கள் சருமத்தில் கோடுகள் எதுவும் விழவில்லை என்பதை நாம் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால், நம்முடைய பிள்ளைகள் அசவுகரியமாக உணர்வார்கள்.

 

பிராண்ட்: எப்போதும் தரமான டயாப்பர்களை மட்டுமே நம்முடைய பிள்ளைக்காக நாம் வாங்க வேண்டும். அதனால் வாங்கும்போது பிராண்ட் பார்த்து வாங்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

 

அம்சங்கள்: நாம் வாங்கும் டயாப்பர், நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்றது தானா? அது அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளதா என்பதையும் பார்த்து வாங்க வேண்டும்.

வெட்னெஸ் இண்டிக்கேட்டர் லைன்ஸ்: இப்போது வரும் டயாப்பர்களில் இந்த வசதியானது உள்ளது. அதாவது டயாப்பர்களில் வெள்ளை கோடு இருக்கும். நாம் பயன்படுத்திய டயப்பார் அதிகபட்சமாக நனைந்தவுடன் அது மஞ்சள் நிறமாக தோன்றும். இது நாம் டயாப்பர் மாற்ற வேண்டிய நேரத்தை அறிந்துக்கொள்ள நமக்கு உதவுகிறது.

 

மென்மை: நம்முடைய பிள்ளைகளின் சருமம் மென்மையாகவும், உணர்திறன் கொண்டதாகவும் இருக்கும். அதனால், அதற்கு ஏற்ற வகையிலான டயாப்பர்களை நாம் வாங்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளின் பின்பகுதிக்கு காற்றோட்டம் செல்கிறதா என்பதையும் கவனிக்கவும்.

 

தூக்கம்: நாம் அணிவிக்கும் டயாப்பர், அவர்களின் தூக்கத்தை கெடுத்தால், நிச்சயம் டயாப்பரை மாற்றுவது நல்லது. துணி டயாப்பர்களை காட்டிலும், ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசும் டயாப்பர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது கூடுதல் சவுகரியத்தை வழங்குகிறது.

மலம் கழிக்கும் முறை: ஒவ்வொரு பிள்ளையும், மலம் கழிக்கும் நேரம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாறுபட்டே காண்கின்றனர். நம்முடைய பிள்ளைகள் இப்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் செய்யலாம். அப்போது அதற்கு ஏற்ற வகையிலான டயாப்பர்களை நாம் வாங்கி பயன்படுத்துவது நல்லது.

புதிதாய் பிள்ளை பெற்றுக்கொண்டவர்கள் பிள்ளையை கவனித்து கொள்வது சற்று சவாலாகவே இருக்கும். அவர்களுடைய தூக்க சுழற்சியும் இப்போது மாறும். இப்போது யூஸ் & த்ரோ வகை டயாப்பர்களை வாங்கி நாம் பயன்படுத்துவதே நல்லது. சரியான டயாப்பரை தேர்ந்தெடுப்பதில் நமக்கு குழப்பங்கள் இருந்தால் டாக்டர் ஆலோசனையையும் இப்போது பெறலாம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

அனைவருக்கும், அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#babydiaper #babycareandhygiene
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!