பயணத்தின் போது தாய்ப்பால் தர பயனுள்ள டிப்ஸ்

cover-image
பயணத்தின் போது தாய்ப்பால் தர பயனுள்ள டிப்ஸ்

நம்முடைய வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வந்தாலே, தாய்ப்பால் தருவது சிரமமாக இருக்கும். அப்படி இருக்கும்போது, பயணத்தில் தாய்ப்பால் தருவது அவ்வளவு எளிதான காரியமில்லை தானே. தெரியாத நபர்கள் சூழ்ந்திருக்கும் வேளையில், தாய்ப்பால் தருவது சற்று கூச்சத்தை உண்டாக்கும் விஷயமே. ஆனால், இந்த பயனுள்ள குறிப்புகள் பயணத்திலும் தாய்ப்பால் தர எளிதாக உள்ளது. அவை என்னவென்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம் வாருங்கள்.

 

எப்படி நாமும், நம்முடைய பிள்ளையும் மகிழ்ச்சியாக பயணிப்பது?

 

பயணத்தில் தாய்ப்பால் தருவது குறித்து நாம் முன்பே ஒரு சில விஷயங்களை திட்டமிட வேண்டும். குறிப்பாக, நமக்கு பயணத்தில் தாய்ப்பால் தருவது எவ்வளவு சங்கடமாக இருக்குமோ, அதை விட பல மடங்கு தாய்ப்பால் குடிக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும். அவர்கள் புது இடத்தில் தாய்ப்பால் குடிக்க மிகவும் சிரமம் கொள்வார்கள் என்பதால், அவர்களுடைய சவுகரியத்தை நாம் கருத்தில் கொண்டு ஒரு சில விஷயங்களை நிச்சயம் செய்ய வேண்டும்.

 

1. ஒருவேளை நாம் காரில் குடும்பத்துடன் செல்வோம் எனில், அப்போது கார் குலுங்கும்போது தாய்ப்பால் தர அவ்வளவு எளிதல்ல. அதனால், உங்கள் கணவரிடம் சொல்லி, ஆங்காங்கே நிறுத்தி தாய்ப்பால் தந்துக்கொண்டே செல்லலாம்.

2. அதேபோல, காரில் பயணிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்துக்கொள்ள வேண்டாம். நர்சிங் கவர் அல்லது லேசான காட்டன் துணிகளை வைத்து மறைத்துக்கொண்டும் பயணத்தின்போது நாம் தாய்ப்பால் தரலாம்.

3. தாய்ப்பாலை பம்ப் செய்து எடுத்துக்கொண்டு பாட்டிலிலும் நாம் செல்லலாம். இந்த மாதிரியான சமயங்களில், பால் கெட்டு போகாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

4. அதோடு பயணம் செல்லும்போது பேக்கில் பிரெஸ்ட் பம்பையும் வைத்துக்கொள்வது நல்லது. இது அவர்களுக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் தடைபடுவதை தவிர்க்க உதவுகிறது.

5. பயணம் செல்லும்போது அதிகமான தண்ணீர் குடிப்பதை நாம் உறுதி செய்யவும். இதனால், தாய்ப்பால் நம்முடைய பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்கிறது.

 

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுத்தல்

நர்சிங் ஸ்கார்ப் உதவியுடன் மற்றவர்களிடம் இருந்து மறைத்து நாம் சுதந்திரமாக பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்க முடியும். அதேபோல, பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு நம்முடைய கணவர் உதவியையும் நாம் கோரலாம்.

 

எதிர்ப்புத்திறனூட்டல்

இது குறித்து பயணத்திற்கு முன்பாக நாம் நம்முடைய சிறப்பு நிபுணரிடம் (லாக்டேஷன் கன்சல்டன்ட்) ஆலோசனைகள் பெறலாம். அதேபோல பயணம் செல்வதற்கு முன்பாக நம் பிள்ளைக்கு தேவையான மருந்து சிரப்புகளை எல்லாம் மறக்காமல் எடுத்து வைத்துக்கொள்ளவும் வேண்டும்.

 

விமானங்களில் பயணித்தல்

இது குறித்து நாம் மருத்துவர்களிடம் முதலில் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. நாம் தேர்ந்தெடுக்கும் விமானம், நம்முடைய பிள்ளைக்கு ஏற்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு பசி எடுக்கும்போது தாய்ப்பால் ஊட்டும் வகையில் நாம் அமர்வது நல்லது. புதிதாக பயணிக்கும்போது வயிற்றுப்போக்கு அல்லது நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும் என்பதால் நீர்ச்சத்து குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

பேருந்துகளில் பயணித்தல்

பேருந்துகளில் பயணிக்கும்போது தாய்ப்பால் கொடுக்க உதவும் பிப் போன்றவற்றை நாம் பயன்படுத்தலாம். அதேபோல, நாம் அமைதியாக தாய்ப்பால் கொடுக்கும்போது அது மற்ற பயணிகளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை. இது நமக்கு வீட்டில் கொடுப்பது போன்ற ஒருவித சூழலை அமைத்து தரும். முடிந்தளவு, திரை மூடப்பட்டு பிரைவசி அடங்கிய பேருந்துகளை இது போன்ற பயணத்தின்போது நாம் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. நீங்கள் AC பஸ்ஸில் பயணிக்கும் முன்பு மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெறுவது நல்லது. அதேபோல இப்போது ஆடைகளுடன், தாய்ப்பால் தருவதற்கு ஏற்ற ஷால்களும் சேர்ந்து வருகிறது. அதேபோல பிராவில் மார்பக காம்புக்கு நேராக திறக்கும் வசதி கொண்டும் இப்போது உள்ளாடை வருகிறது. இது போன்றவை நம்முடைய சிரமத்தை குறைக்க உதவுகிறது.

தோழிகளே, இனிமேல் பொது இடங்களிலோ அல்லது பயணங்களின்போதோ தாய்ப்பால் தருவது சிரமமாக இருக்காது என்பதை இந்த பதிவை படித்தறிந்து இருப்பீர்கள் என நம்புகிறோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

அனைவருக்கும் பேபி சக்ராவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#breastfeeding #babynutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!