பிள்ளைகளுடன் சுற்றுலா செல்ல சூப்பர் இடங்கள்

cover-image
பிள்ளைகளுடன் சுற்றுலா செல்ல சூப்பர் இடங்கள்

பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வதென்பது மற்ற எல்லாவற்றையும் விட ஒரு அழகிய தருணம் என்று கூட சொல்லலாம். அதிலும், பள்ளிகள் தொடங்கப்படுவதால், நாம் நம்முடைய பிள்ளைகளுடன் வார இறுதி நாட்களில் எங்காவது சென்று வரலாம். அதோடு, தளிர்நடை போடும் நம்முடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஒரு சூப்பர் இடத்திற்கும் நாம் இப்போது போய் வரலாம்.

 

என்ன மாதிரியான இடங்களுக்கு எல்லாம் நம் பிள்ளைகளுடன் போகலாம்?

கன்னியாகுமாரி

விவேகானந்தர் பாறையை நம் பிள்ளைகள் நிச்சயம் ரசிப்பார்கள். இந்த இடம், நம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இனிமையாக செலவிட ஏற்ற சிறந்த இடமும் கூட. அதேபோல அதிகாலையில் எழும் கதிரவன் அழகையும் நாம் நம்முடைய கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கன்னியாகுமரியில் கண்டு ரசிக்கலாம். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் அழகிய புகைப்படங்களை எடுக்க சிறந்த இடமாகவும் கன்னியாக்குமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை போன்றவை உள்ளன.

 

மாமல்லபுரம்

இது மிகவும் பழமையான இடம் என்பதோடு இங்குள்ள சிற்பங்கள் நம்முடைய சின்னச்சிறு பிள்ளைகளின் மனதை கொள்ளைகொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். இங்கே காணப்படும் ஐந்து ரதங்கள், பாறை கோயில்கள், கடற்கரையில் அமைந்துள்ள இடங்கள் போன்றவை போட்டோ எடுக்க சிறந்த இடமாக உள்ளது. மெட்ராஸ் க்ரொகடைல் பேங்க் போன்றவையும் நம்முடைய பிள்ளைகளுக்கு சிறந்த வேடிக்கை காட்டும் இடமாக உள்ளது.

 

ஊட்டி

இங்குள்ள பாட்டனிக்கல் கார்டனில் நாம் பலவித கவர்ச்சிகரமான தாவரங்களை காண முடியும். இங்கே 650-இற்கும் மேற்பட்ட வகையான மரங்கள் நம்முடைய கண்களை கொள்ளைக்கொள்ள காத்திருக்கிறது. மலை பகுதிகள் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பு குறைவு என்பதால் அவர்களை அழைத்து செல்வதில் கவனம் வேண்டும். கலர் கலரான பூக்களும் ஆங்காங்கே பூத்து குலுங்குகிறது.

 

சென்னை

மெரினா பீச் நம்முடைய குடும்பத்தோடு சென்று மகிழ சிறந்த இடமாகும். இங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் நம்முடைய பிள்ளைகளின் மனதை நிச்சயம் கவரும். இங்குள்ள மணல்களில் கோட்டைகள் கட்டி நம்முடைய பிள்ளைகளின் மனதை நாம் குளிர செய்யலாம்.

 

உதகமண்டலம்

இங்குள்ள பைகாரா ஏரி, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் நிச்சயம் பிடிக்கும். இங்கே நம்மால் பலவிதமான தாவரங்களையும், விலங்குகளையும் பார்க்க முடிகிறது. இங்கு காணப்படும் விலங்குகள் நம்முடைய பிள்ளைகளுக்கு சிறந்த வேடிக்கையாக நிச்சயம் அமையும். இங்குள்ள போட் ஹவுஸிற்கும் சென்று நாம் நம்முடைய பிள்ளைகளை குஷிப்படுத்தலாம்.

 

மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் நாம் குடும்பத்தோடு சென்று வரலாம். இங்கே கோயில் முகப்பில் காணப்படும் முப்பரிமாண சிவ லிங்கம் நிச்சயம் நம் பிள்ளைகளுக்கு பிடிக்கும். அதோடு, அந்த காலத்தில் எப்படி இந்த முப்பரிமாண சிவ லிங்கத்தை வரைந்தார்கள் என்ற ஆச்சரியமும் நம்மை போன்ற பெரியவர்களுக்கும் நிச்சயம் வரும். இதை தவிர ஆயிரம் கால் மண்டபம், பெரிய அம்மன் சிலை என பல இடங்கள் நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் பார்க்கவிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

 

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள பிரகாதீஸ்வரர் ஆலயம் பிரமிக்கவைக்கும் ஒன்றாகும். இங்கே காணப்படும் பெரிய நந்தி சிலை நிச்சயம் நம்முடைய பிள்ளைகளுக்கு பிடிக்கும். இதை தவிர, கலசத்தின் நிழல் பூமியில் விழாமல் இருக்கும் அற்புதத்தை நாம் அவர்களுக்கு காண்பிக்கலாம். அதோடு, ஆலயம் சென்று திரும்பும்போது அவர்களுக்கு தலையாட்டி பொம்மை வாங்கி தந்தும் அவர்கள் மனதை மகிழ்விக்கலாம்.

இது போன்ற எண்ணற்ற இடங்கள் நம் தமிழ்நாட்டிலேயே நாம் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ காணப்படுகிறது. நீங்கள் எந்த மாதிரியான இடங்களுக்கு எல்லாம் உங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாமே. மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

அனைவருக்கும் பேபி சக்ராவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#Vacation
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!