கர்ப்பமாக இருக்கும் போது சமூக வலைதள தகவலை நம்பலாமா?

cover-image
கர்ப்பமாக இருக்கும் போது சமூக வலைதள தகவலை நம்பலாமா?

கர்ப்பமாக திட்டமிடும்போதும், கர்ப்பமாக இருக்கும்போதும் இன்றைய தலைமுறையினர் பல வித தகவலை சமூக வலைத்தளம் பார்த்தே அறிகின்றனர். இவை நமக்கு தெளிவான பதிலை தருகின்றனவா என்பதை குறித்து விளக்குகிறது இந்த சுவாரஸ்யமான பதிவு.

இன்றைய நவீன உலகில் நம்மிடம் 1100 மொபைல் இருந்தால், வேற்று கிரக வாசியை போல பார்ப்பார்கள் என்பதே உண்மை. காரணம், எண்ணற்ற விஷயங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்க, அவற்றை சரியாக பயன்படுத்தும்போது, பலவிதத்தில் நமக்கு நல்ல முடிவையே அளிக்கவும் செய்கிறது.

 

இணையத்தை எப்படி பாதுகாப்பாக கர்ப்பிணிகள் பயன்படுத்துவது?

கர்ப்பம் என்ற ஒரு விஷயத்தை பற்றி பெண்கள் யோசிக்கும்போது, பல வித கேள்விகளும், சந்தேகங்களும் அவர்கள் மனதில் உருவாகிறது. உதாரணத்திற்கு, கர்ப்பமாக இருக்கும்போது நீர் எரிச்சல் வருவது பொதுவான விஷயம் தான். ஆனால், இப்போது அதற்கான மருந்து/சிரப் நாம் எடுத்துக்கொள்ளலாமா என்ற குழப்பம் இருக்கும். உடனே, சமூக வலைத்தளத்தில் தீர்வுகளை தேடுவோம். இது சரியா? வாருங்கள் பார்ப்போம்.

 

சக்ஸஸ் ஸ்டோரி

சமூக வலைத்தளங்களில் உலா வரும் சக்ஸஸ் ஸ்டோரி நமக்கு ஒரு வித பாசிட்டிவ் மனநிலையை தரக்கூடியதாகும். ஆனால், அதுவே நெகட்டிவ் மனநிலையை தரும் விஷயங்களை ஒருவர் தன்னுடைய அனுபவத்தில் பகிர்ந்து கொண்டால், அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய உடல் நிலையும், நம்முடைய உடல் நிலையும் வேறுவேறு என்பதால் இதுகுறித்த பயம் நமக்கு வேண்டியதில்லை.

 

பப்ளிசிட்டி

பகிரும் தகவல்கள் பப்ளிசிட்டிக்காக மட்டுமே செய்யப்படுகிறதா, இல்லை, ஏதேனும் தகவலை நமக்கு அளிக்கிறதா என்பதை பொருத்து ஒரு தகவலை நாம் நம்பலாம். பெரும்பாலும், நல்ல தகவல்கள் மற்றவர்களால் பகிரப்படும்.

 

பாசிட்டிவான மனநிலை

சமூக வலைத்தளங்களில் வழங்கப்படும் தகவல் பாசிட்டிவ்/நெகட்டிவ் என எதுவாக இருந்தாலும் நம்முடைய மனதை எப்போதும் பாசிட்டிவாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பாசிட்டிவாக பேசினால், அதனை படித்து மகிழுங்கள். நெகட்டிவாக எழுதப்பட்டிருந்தால், அப்போது சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டுமே தவிர, அதற்காக பயமோ, பதட்டமோ கூடாது.

 

சமூக வலைத்தளத்தில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

1. நாம் பின்தொடரும் பக்கம் அங்கீகாரம் பெற்ற ஒன்றா என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும். அதனை படிக்கும்போது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை பொருத்தும் தொடரலாம்.

2. அவர்களின் நோக்கம் சரியாக உள்ளதா என்பதையும் கவனிக்கவும். அவர்கள் பதிவிடும் பதிவுகளை கொண்டு நாம் இதனை முடிவு செய்யலாம்.

3. பிடிக்காத பக்கங்களை நாம் பின்தொடர வேண்டிய அவசியமில்லை.

 

நிபுணர்கள் கூறுவது என்ன?

முதல் மூன்று மாதங்கள் முடியும் வரைக்கும் நீங்கள் கர்ப்பம் என்பதை அதிகம் யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்கின்றனர். காரணம், ஒவ்வொருவர் ஒருவிதமான அறிவுரைகளை வழங்குவார்கள் என்பதால் இதனை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

 

குறிப்பாக மருத்துவர்கள் அல்லது நம்பிக்கையான நபர்களை தவிர சமூக வலைத்தளங்களில் யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நீங்கள் ஒரு சமூக வலைதள பக்கத்தை பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

 

சமூக வலைத்தளம் என்பது பல்வேறு தகவலை ஆரோக்கியமான முறையில் பகிர்ந்துக்கொள்ள மட்டுமே என்பதை நாம் உணர வேண்டும். அதுவும் குறிப்பாக கர்ப்பம் போன்ற சமயங்களில் இது குறித்து நாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

 

சமூக வலைத்தளங்களை ஆரோக்கியமாக பயன்படுத்தி கொண்டவர்கள், அவர்களுடைய சக்ஸஸ் ஸ்டோரியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொள்ளத்தான் செய்கின்றனர். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன், இரண்டிலுமே நிறைகளும், குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.

 

அக்கம் பக்கத்தினர் நமக்கு கூறும் அறிவுரைகளும் 100% சரியாக இருக்குமென சொல்லவிட முடியாது. ஆன்லைனில் போடப்படும் கமெண்டும் 100% சரியாக இருக்குமென சொல்லிவிட முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களிடமும், மருத்துவர்களிடமும், அங்கீகாரம் வழங்கப்பட்ட பதிவுகள் மூலமாக மட்டுமே நம்மால் சரியான தகவலை பெற முடியும் என்பதே உண்மை.

 

எது எப்படியோ, நெகட்டிவ் மனநிலைக்கு குட்பை சொல்லி, பாசிட்டிவ் மனநிலைக்கு இந்த 10 மாதம் வெல்கம் சொல்வதே, நம்முடைய கர்ப்ப காலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.

 

அனைவருக்கும் பேபி சக்ராவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#socialmedia
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!