பிறந்த பிள்ளைகளுக்கு வரும் கோலிக் பிரச்சனை

cover-image
பிறந்த பிள்ளைகளுக்கு வரும் கோலிக் பிரச்சனை

நம்முடைய பிள்ளைகள் நன்றாக இருந்து வருவர், ஆனால் திடீரென சம்பந்தமே இல்லாமல் அழுவார்கள். இதை தான் நாம் கோலிக் என்போம். இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவே தெரியாது. ஆனாலும், பிள்ளைகள் தினமும் இதை செய்யவும் வாய்ப்புள்ளது.

 

எப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு இந்த பிரச்சனை இருக்கும்?

நம்முடைய பிள்ளைகளுக்கு ஆறு மாதம் வரைக்கும் இது போன்ற பிரச்சனை இருக்கலாம். கோலிக் பிரச்சனையின் போது நம்முடைய பிள்ளைகள் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை அழவும் வாய்ப்புள்ளது.

 

கோலிக் பிரச்சனையை நாம் கண்டறிவது எப்படி?

முதல் மூன்று மாதங்களில் நம்முடைய பிள்ளைகள் அழுவது பொதுவான விஷயமே. இப்போது கோலிக் பிரச்சனைக்கான அறிகுறிகள் என்னவென்பதை நாம் பார்ப்போம்.

 • பயம் வந்து அழுவது போலவோ அல்லது ஏதோ வலியினால் அழுவது போலவோ செய்வார்கள்
 • சில சமயம் பசித்தும் அழுவார்கள் அல்லது டயாப்பர் ஈரமானாலும் அழுவார்கள்
 • கண்டுக்கொள்ளாமல் இருக்கும்போது அதிகமாக அழவும் செய்வார்கள், சில சமயம் ஏதாவது பூச்சிகள் கூட அவர்களை கடித்திருக்கலாம்
 • குறிப்பாக மாலை நேரத்தில் தினமும் ஒரே சமயம் அழ செய்வார்கள்
 • முகம் சிவந்து இருத்தல் அல்லது வாய் சுற்றி சருமம் வெளிறி காணப்படுதல் போன்ற அறிகுறிகளும் காணலாம்
 • சில சமயம் வயிற்றில் உபாதைகள் இருந்தாலும் அவர்கள் அழ செய்வார்கள்

 

இதற்கு என்னவெல்லாம் காரணங்கள் இருக்கலாம்?

கோலிக் பிரச்சனைக்கு என குறிப்பிட்ட எந்த காரணங்களும் இல்லை. இது எண்ணற்ற காரணிகளை பொறுத்தே அமைகிறது. ஆனால், பொதுவாக இருக்கும் சில காரணிகளை நாம் இப்போது காண்போம்.

 

 • செரிமான பிரச்சனை இருந்தால்
 • ஆரோக்கியமான பாக்டீரியா பிரச்சனை செரிமான குழலில் இருந்தால்
 • உணவு ஒவ்வாமை காரணமாக
 • அதிகமாக பாலூட்டினால், குறைவாக பாலூட்டினால்
 • அடிக்கடி ஏப்பம் வந்துக்கொண்டே இருந்தால்
 • தலைவலி போன்ற பிரச்சனை இருந்தால்
 • நாம் அவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தால்

 

இதனால் ஏதேனும் பிரச்சனையா?

இது எந்தவொரு பிள்ளைக்கும் வெகு நாட்கள் இருப்பதில்லை. ஆனால் இந்த மாதிரியான சமயங்களில்

 

 • நம்முடைய மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது
 • சில அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதை பயந்து நிறுத்துகின்றனர்
 • என்ன காரணம் என தெரியாமல் தவிக்க செய்வோம்

 

என்னவெல்லாம் செய்யலாம்?

இந்த மாதிரியான பிரச்சனையின் போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை இப்போது நாம் பார்ப்போம்.

 

1. அவர்களுக்கு கடைசியாக எப்போது உணவளித்தீர்கள் என்பதை பொறுத்து அவர்களுக்கு தற்போது பசிக்கிறதா? இல்லை வேறு காரணங்களுக்காக அழுகிறார்களா என்பதை நம்மால் அறிய முடியும்.

2. நாம் தாய்ப்பால் தந்து வந்து, அவர்களுக்கு கோலிக் பிரச்சனை இருக்குமெனில், சிலசமயம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து அல்லது மாத்திரைகள் கூட அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இது குறித்து மருத்துவரின் ஆலோசனையை நாம் பெறுவது நல்லது.

3. அவர்களின் உடல் பொஷிஷனை மாற்றுதல், அவர்களை தூக்கிக்கொண்டு நடப்பது அல்லது முதுகை தடவி மசாஜ் செய்வது போன்றவற்றை கூட நாம் செய்யலாம்.

4. மருத்துவரின் பரிந்துரை பெற்று அதன்பின் ஃபேசிபையர் நாம் பயன்படுத்தலாம்.

5. பிள்ளைகளை துணி கொண்டு சுற்றி ஓய்வில் வைத்திருக்கலாம்.

6. நம் தோளோடு ஒட்டி அவர்களை பிடித்திருக்கலாம். இதனால் ஒருவிதமான பாதுகாப்பை அவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

7. ஃபேன், வாஷிங் மெஷின், டிஷ் வாஷர் போன்றவை எழுப்பும் ஒலி பிடிக்காவிட்டாலும் அவர்கள் அழ வாய்ப்புள்ளது.

8. காரில் அவர்களை அழைத்துக்கொண்டு அப்படியே காற்றாட சென்று வரலாம்.

 

எப்போது மருத்துவரை பார்ப்பது?

அவர்கள் மல்லுக்கட்டி கொண்டு அழுது, உடலை வருத்திக்கொண்டால் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

இவ்வாறு நம்முடைய பிள்ளைகள் அழும்போது, நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் உதவியுடனும் நாம் அவர்கள் அழுகையை நிறுத்தலாம்.

இந்த பதிவின் மூலமாக கோலிக் குறித்த பல பயனுள்ள தகவலை அறிந்தோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#babycolic
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!