பிள்ளைகள் முன்னேற்றத்தில் காணப்படும் பெற்றோர்களின் பங்கு

cover-image
பிள்ளைகள் முன்னேற்றத்தில் காணப்படும் பெற்றோர்களின் பங்கு

ஒவ்வொரு பிள்ளைகளும் வளர்ந்து ஒரு கட்டத்தில் நிச்சயம் பெற்றோர் ஆகின்றனர். பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் முன்பு, அவர்களை வளர்ப்பது குறித்து பல வித ஆசைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், அவர்கள் பிறந்தவுடன் ஒரு விதமான பதட்டத்தை சந்திக்கின்றனர். இது முற்றிலும் இயல்பான ஒரு விஷயமே. எந்தவொரு பெற்றோரும் எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு பிள்ளைகளை வளர்ப்பதில்லை. ஆனால், எந்த காரணம் கொண்டும் அவர்கள் மனதில் நெகட்டிவான விஷயங்களை விதைக்காமல் பெற்றோர்கள் இருக்க வேண்டும். இது குறித்த ஒரு சுவாரஸ்யமான பதிவு தான் இது.

 

பேரண்டிங் என்றால் என்ன?

இதனில் அப்பா மற்றும் அம்மா இருவருக்குமே முக்கியமான பங்கிருக்கிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே பெற்றோர்கள் ஒவ்வொரு விஷயங்களையும் செய்ய வேண்டும். பெற்றோர்கள் எப்போதும் கடமைக்கு ஒரு விஷயத்தை செய்வதை காட்டிலும், அதனில் அக்கறை கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

பாசிட்டிவ் பேரண்டிங் என்பது என்ன?

 • வழிகாட்டுதல்
 • முன்னேற உதவுதல்
 • கற்றுக்கொடுத்தல்
 • அக்கறையாக இருத்தல்
 • ஆளுமை திறனை வளர்த்தல்
 • ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் பார்த்துக்கொள்ளுதல்
 • பிள்ளைகளின் தேவை அறிந்து செயல்படுதல்
 • அடிக்காமல், திட்டாமல் இருத்தல்
 • மனம் விட்டு பேசுதல்
 • அவர்கள் வாழ்வை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுதல்
 • உணர்வுப்பூர்வமான பாதுகாப்பை உணர செய்தல்
 • நிபந்தனையற்ற அன்பை பரிசளித்தல்
 • பாசிட்டிவ் மனநிலையை வழங்குதல்
 • வளர்ச்சிப்படிநிலைகளை அடைய உதவுதல்
 • வரம்புகளை அமைத்தல்
 • பிள்ளைகள் உணர்வுக்கு மதிப்பளித்தல்
 • பிள்ளைகள் இலட்சியத்திற்கு மதிப்பளித்தல்

 

இதனால் என்னவெல்லாம் பலன்கள் காணப்படுகின்றன?

 • பள்ளிக்கு செல்லும் முன்பே நல்லது கெட்டதை பிரித்தாள அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்
 • அவர்களுடைய தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைகின்றனர்
 • பிள்ளைகளின் கவனிக்கும் திறன் மேம்பட்டு, வாழ்க்கையின் புரிதலை இளம் பருவத்திலேயே அடைய தொடங்குகின்றனர்
 • எந்தவொரு விஷயத்தையும் தயக்கமில்லாமல் நம்மிடம் பகிர்ந்துக்கொள்ள தொடங்குகின்றனர்
 • ஆக்கப்பூர்வமான சிந்தனை பெருகி, இதனால் பல புதிய விஷயங்களை தானாகவே கற்றுக்கொள்ள ஆசைக்கொள்கின்றனர்
 • சமூகத்துடன் ஒன்றி வாழ எவ்வித பயமும் இல்லாமல், தனக்கு தேவையானதை தைரியமாக பெற்று நல்ல முன்னேற்றத்தை வாழ்வில் காண்கின்றனர்
 • கல்வியில் எப்போதும் சிறந்து விளங்குகின்றனர்
 • மன அழுத்தம் இல்லாமல், வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்பதை கற்றுக்கொள்கின்றனர்
 • எவ்வளவு பெரிய கடினமான சூழலையும் தன்னுடைய பாசிட்டிவ் மனதை கொண்டு எளிதாக வென்று சாதிக்க செய்கின்றனர்

 

என்ன செய்ய வேண்டும்?

1. நம்முடைய பிள்ளைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிடாதீர்கள். பிள்ளைகள் எப்போதுமே ஒவ்வொருவரும் மாறுபட்டு காணப்படுவார்கள் என்பதால் ஒப்பிட்டு ஒரு விஷயத்தை செய்ய வைப்பது நெகட்டிவான மனநிலைக்கு வழிவகுக்கும்.

2. இதை தான் செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை எப்போதும் கடினமாக மனதில் பதிய வைக்காதீர்கள். அவர்கள் தவறு செய்யும்போது, அந்த தவறால் என்னவெல்லாம் பக்கவிளைவுகள் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை மெல்ல புரிய வைக்கலாம்.

3. அவர்களுக்கு வேடிக்கையான வழியில் சுய ஒழுக்கத்தை கற்றுத்தரலாம். சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க கடுமையாக நடந்துக்கொண்டால், ஒரு கட்டத்தில் சுதந்திரமாக செயல்பட ஆசைக்கொண்டு தவறை செய்யவும் வாய்ப்புள்ளது.

4. அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். எந்நேரமும் வேலை, போன் என இல்லாமல் நம்முடைய பிள்ளைகளுடன் தினமும் நேரத்தை செலவிடுவதை நாம் நிச்சயம் உறுதிசெய்ய வேண்டும்.

5. அவர்களுடன் சேர்ந்து தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது நல்ல பழக்கங்களை அவர்கள் கற்க உதவுவதோடு, பாசிட்டிவான மனநிலையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கவும் உதவும்.

6. இனிமையான தருணங்களை அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள பாருங்கள். இது அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது.

 

தோழிகளே, விதை போட்டு ஒரு மரத்தை உருவாக்குவது போல தான் பிள்ளைகள் வளர்ப்பு என்பது. அவர்கள் வளர்ச்சியின் ஒவ்வொரு நாளும் நமக்கு மிகமிக முக்கியம். ஏனென்றால், ஒவ்வொரு நாளுமே அவர்கள் ஏதோவொரு விஷயத்தை நிச்சயம் கற்றுக்கொள்கின்றனர். நம்முடைய பிள்ளைகள் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு நாளைய சமூகத்தில் நிச்சயம் வெற்றி பெறுவது நம்முடைய கையில் தான் இருக்கிறது. நாளை விடியல், நல்லதொரு விடியலாய் நம்முடைய பிள்ளைகளுக்கு அமையட்டும். மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#parentinggyaan #boostingchilddevelopment
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!