கணவர் புகைப்பிடிப்பதால் பிள்ளைக்கு ஏற்படும் பாதிப்புகள்

cover-image
கணவர் புகைப்பிடிப்பதால் பிள்ளைக்கு ஏற்படும் பாதிப்புகள்

கணவர் புகைப்பிடிப்பதால் அது கருவில் உள்ள பிள்ளையை எப்படி பாதிக்கிறது? பிறந்த பிள்ளையை எப்படி பாதிக்கிறது? இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது?

புகைப்பிடிப்பதென்பது நம்முடைய கணவருக்கு மட்டும் அல்ல, அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் கேடு விளைவிக்கும். ஒருவர் புகைப்பிடிக்கும்போது, எல்லா புகையும் வயிற்றினுள் செல்வதில்லை, வெளிப்புறமும் செல்கிறது. இதனை அருகில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது பலவித உடல் உபாதைகள் அவர்களுக்கும் உண்டாகிறது. இது நம்முடைய பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குகிறது இந்த விழிப்புணர்வு பதிவு.

 

எப்படி எல்லாம் புகைப்பிடிக்கப்படுகிறது?

பொதுஇடங்களில் புகைப்பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனால், புகைப்பழக்கத்துக்கு அடிமையான பலரும் அதனை விட்டொழிக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வீட்டில் மறைத்து வைத்து புகைப்பிடிக்கின்றனர். நம் வீடு தானே, யார் கேட்க போவது என நினைத்துக்கொண்டு பொதுநலன் கருதி வீட்டில் உள்ளவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றனர்.

சிகரெட், சிகார், பைப் போன்றவை கொண்டு புகைப்பிடிக்கப்படுகிறது. புகையிலையில் இருந்து வெளிவரும் புகையில் எண்ணற்ற வேதிப்பொருட்கள் இருப்பது தெரிகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களும் வர வாய்ப்புள்ளது.

 

இது நம்முடைய பிள்ளைகளை எப்படி பாதிக்கும்?

நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சி பிறந்த பின்பும் செயல்முறையில் இருக்கும். அதுவும், நம்மை போன்ற பெரியவர்களை விட அவர்கள் வளர்ச்சி விகிதம் அதிகமாகவே காணப்படுகிறது. இது போன்ற சூழலில் நம் கணவர் புகைப்பிடிக்கும்போது பிள்ளைகளின் வளர்ச்சிநிலையை இது நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்.

 

 • SIDS எனப்படும் தீடீர்க் கைக்குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி
 • சுவாசப்பிரச்சனை ஏற்படுதல்
 • மோசமாக ஆஸ்துமா பிரச்சனை இருத்தல்
 • காதுகளில் தொற்று ஏற்படுதல்
 • நாள்பட்ட சளி மற்றும் இருமல் பிரச்சனை

 

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது கணவர் அல்லது வீட்டில் உள்ளவர்கள் புகைப்பிடிப்பதால், கருவில் இருக்கும்போதே பிள்ளைகளின் வளர்ச்சியை பல விதத்தில் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள் பின்வருமாறு,

 • குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பிருத்தல்
 • குழந்தை எடை குறைவுடன் பிறத்தல்
 • SID நோய்க்குறி
 • மனநலம் பாதிக்கப்பட்டு இருத்தல்
 • கற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுதல்
 • ADHD எனப்படும் கவனக்குறைவு மிகைஇயக்க குறைபாடு இருத்தல்

 

என்ன செய்வது?

1. பிள்ளைகள் அல்லது கர்ப்பிணி பெண் இருக்கும் வீட்டில் கணவர் புகைப்பிடிப்பதை கட்டாயம் தவிர்க்கவும்.

2. ஒரு தவறான உதாரணத்தை நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

3. சாலையில் செல்லும்போதும், சிகெரெட் துண்டுகளை ஆங்காங்கே போடுவதை கட்டாயம் தவிர்க்கவும். இது வீட்டிற்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிக்கும் ஒரு செயலாகும்.

4. அதேபோல சிகரெட் பழக்கம் இருப்பவர்களுக்கு விந்தணு உற்பத்தி குறையவும் வாய்ப்புள்ளது. அதனால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

 

நம் கணவரிடம் இதனை எப்படி சொல்வது?

1. புகைப்பிடிப்பதால் அது எப்படி எல்லாம் நம் கருவில் வளரும் பிள்ளையை பாதிக்கும் என்பதை நம்முடைய கணவருக்கு பொறுமையாக எடுத்துரைக்கலாம்.

2. கணவர் புகைப்பிடிக்கும்போது உடனே இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என கூறினால், நமக்கு தெரியாமல் கூட அவர்கள் இதனை செய்ய வாய்ப்புண்டு. அவர்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர நாமும் போதிய ஆதரவை அவர்களுக்கு தர வேண்டும்.

3. புகைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய உண்மை அவல நிலைகளை அவர்கள் மனதில் அவர்களுக்கு தெரியாமலே புகுத்த தொடங்கலாம். இதனால், நிச்சயம் நம்முடைய பிள்ளைகளுக்காக இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்வார்கள்.

4. புகைப்பிடித்துவிட்டு பிள்ளைகளை தூக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து நம்முடைய கணவருக்கு விளக்கி புரிய வைக்கலாம்.

5. ஒருவேளை உங்கள் பேச்சை அவர்கள் கேட்க தவறினால், பிள்ளைகளை வைத்து மெல்ல இந்த பழக்கத்திலிருந்து வெளிவர வைக்க முயலலாம். பிள்ளைகள் சொன்னால் கேட்காத அப்பாக்கள் இவ்வுலகில் உண்டா என்ன? அதிலும் பெண் பிள்ளைகள் மீது அப்பாக்களுக்கு எப்போதுமே பாசம் அதிகம் என்பதால், அவர்கள் மூலமாகவும் இந்த பழக்கத்தை அவரிடமிருந்து மாற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவலாம்.

 

புகைப்பிடிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லை. கவலைகளை மறக்க அல்லது மறைக்க புகைப்பிடிக்க நினைத்தால், நிகழ்காலம் வேண்டுமென்றால் நன்றாக இருக்கும், ஆனால், வருங்காலம் என்னவாகும் என்பதை நாம் நம்முடைய கணவருக்கு புரியவைக்க வேண்டும். மீண்டுமோர் சுவாரஸ்யமான பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#parentinggyaan #babycareandhygiene
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!