கர்ப்பமும்! குடும்ப சூழலும்!

cover-image
கர்ப்பமும்! குடும்ப சூழலும்!

கர்ப்பமாக இருக்கும்போது வறுமையை வென்று ஆரோக்கியமாக குழந்தையை பெற்றுக்கொள்ள இப்பதிவு உதவுகிறது.

 

கர்ப்பமாக இருக்கும்போது, கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இதை தவிர செக்கப் செல்வது, மருந்து, மாத்திரைகள், ஊசி என எடுத்துக்கொள்வது இப்படி பல செலவுகள் அவர்களுக்கு வருகிறது. நம்முடைய பிள்ளைகள் கருவில் ஆரோக்கியமாக வளர்கிறார்களா? இல்லையா? என்பதை பொருத்தும் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் மாற்றம் காண்கிறது. பிறகு, பிரசவத்தின்போது சுகப்பிரசவமாக இருந்தால் இந்தியாவில் 40,000 முதல் 1 லட்சம் வரை ஆகிறது. அதுவே சிசேரியனாக இருந்தால் 60,000 முதல் 1.5 லட்சம் வரை ஆகிறது. இந்த பண தொகை, மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் இருப்பவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறார்கள், ஆனால் இல்லாதவர்கள் என்ன செய்வது? இது குறித்த பல பயனுள்ள தகவலை இந்த பதிவு விளக்குகிறது.

 

மகப்பேறு காப்பீட்டு திட்டம் என்பது என்ன?

இன்றைய சூழலில் மகப்பேறுக்கு மிகப்பெரிய அளவில் செலவாகிறது என்பதால் பல நிறுவனங்கள் இதற்காக மருத்துவ காப்பீடு அளிக்கிறது. ஆனால், கர்ப்பமாக இருப்பதற்கு முன்பாக இதற்காக நாம் அப்ளை செய்ய வேண்டியது அவசியமாகலாம். அது நிறுவனங்களை பொறுத்தே அமைகிறது.

 

எவ்வளவு வரை இந்த காப்பீட்டு திட்டம் மூலமாக நமக்கு கிடைக்கும்?

நமக்கு இந்த காப்பீட்டு திட்டம் மூலமாக 50,000 வரை கிடைக்கிறது. ஆனால், ஒரு சில நிறுவனங்கள் வெளிநோயாளி செலவினத்திற்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்குகிறது.

 

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் என்றால் என்ன?

இதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால நிதி உதவித்தொகையாக 12000 முதல் 18000 ரூபாய் வரை கிடைக்கிறது. இவை ஐந்து தவணைகளாக வழங்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவலை நாம் இப்போது காண்போம்.

 

முதல் தவணை

கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் 2000 ரூபாயை முதல் தவணையில் இத்திட்டம் வழங்குகிறது. அதோடு ஊட்டச்சத்துக்கான 2000 ரூபாயையும் வழங்குகிறது.

 

இரண்டாவது தவணை

நான்காம் மாதம் நிறைவடைவதற்குள் 2000 ரூபாய் வழங்கப்படும். ஆனால், கர்ப்பகால மற்றும் இரத்த பரிசோதனைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதோடு ஊட்டச்சத்துக்கான 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

 

மூன்றாவது தவணை

அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தவுடன் 4000 ரூபாய் வழங்கப்படும்.

 

நான்காவது தவணை

குழந்தைகளுக்கு 3-ஆம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு 4000 ரூபாய் வழங்கப்படும்.

 

ஐந்தாவது தவணை

குழந்தைகளுக்கு 9 மாதம் தடுப்பூசி போட்டபிறகு 2000 ரூபாய் வழங்கப்படும்.

 

ஊட்டச்சத்து பொருட்களாக கொடுக்கப்படுவது என்ன?

  • கர்ப்பிணி தாய்க்கான ஊட்டச்சத்து மாவு
  • இரும்பு சத்து திரவம்
  • உலர்ந்த பேரிட்சை
  • புரதச்சத்து பிஸ்கட்
  • ஆவின் நெய்
  • பூச்சி மாத்திரை
  • துண்டு

 

திட்டத்தின் பயனை அடைவதற்கான தகுதிகள் எவை?

1. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

2. இந்த ஐந்து தவணை உதவித்தொகையை இரண்டு பிரசவத்திற்கு மட்டுமே நம்மால் பெற முடியும்.

3. இரண்டு பிள்ளைகளுக்கு மேல், முதல் மற்றும் ஐந்தாவது தவணையை மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு நாம் பெறலாம்.

 

என்ன நடைமுறைகளை நாம் பின்பற்றுவது?

கர்ப்பம் என தெரிந்தவுடன் பன்னிரெண்டு வாரத்திற்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் சென்று பதிவு செய்து எண்ணை பெற்றிருக்க வேண்டும் அல்லது முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

 

இன்றைய காலக்கட்டத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் பிறக்க கூடாது என்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை குறித்த தகவலை நாம் அறிந்து பயன்பெறுவது நல்லது. ஏழை எளியோர்களும் எவ்வித சிரமமுமின்றி பிள்ளைகளை பெற்றுக்கொள்ள இதுபோன்ற திட்டங்கள் பலருக்கு உதவி வருகிறது.

 

நாமும் இது குறித்த தகவலை அறிந்து பயனடையலாமே. வருங்கால தமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாடில்லாமல் பிள்ளைகள் பிறக்க, பிறந்த நாட்டிற்கு பலவித பெருமைகளையும் சேர்த்து வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கட்டும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#financialadvice
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!