9 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிள்ளைகளுக்கு என்ன தேவை தெரியுமா? நாம் காணவிருக்கும் இப்பிரச்சனை அவர்களின் மனநிலை சார்ந்த ஒன்று.
நீங்கள் அடிக்கடி வீட்டை மாற்றுகிறீர்களா? அது உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்குமென்பதை என்றாவது உணர்ந்ததுண்டா? ஆம், அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தால் நம்முடைய பிள்ளைகளின் உடல் மற்றும் மனநிலையை அது பாதிக்கிறது. இது குறித்த சிறப்பு பதிவு தான் இது.
எப்படி நம்முடைய பிள்ளைகளை பாதிக்கிறது?
நம்முடைய பிள்ளைகள் நண்பர்கள் வேண்டுமென நினைக்கும் வயது இது. அவர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ கற்றுக்கொள்ளும் பருவமும் இது. நம்முடைய வீட்டின் அருகில் அவர்கள் வயது பிள்ளைகள் யாரெல்லாம் இருக்கிறார்கள்? தன்னுடன் விளையாட யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பதை இப்போது அவர்கள் ஆராய்கின்றனர். அவர்கள் சூழலுடன் ஒன்றும்போது நாம் வீட்டை மாற்றினால், அப்போது அவர்கள் கடினமாக உணர்கிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களின் வளர்ச்சிப்படிநிலையும் பாதிக்கிறது என்பதே உண்மை.
உதாரணமாக, நம்முடைய பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும்போது இதனால் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். சூழலுடன் ஒன்றுவதற்காக ஒரு சில தீய பழக்க வழக்கங்களை செய்யவும் தோன்றும். அதனால் நம்முடைய பிள்ளைகள் யாருடன் பழகிறார்கள் என்பதை குறித்த கவனம் நமக்கு எப்போதுமே வேண்டும்.
நம்முடைய பிள்ளைகளின் ஒவ்வொரு வயதிலும், பல மாறுபட்ட விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். ஆனால், இது போன்ற இட மாற்றங்களால், அவற்றில் நிச்சயம் தாமதம் ஏற்பட்டு தனிமையை விரும்பவும் தொடங்கிவிடுவார்கள்.
என்ன மாதிரியான பாதிப்புக்கள் உண்டாகும்?
என்ன செய்யலாம்?
1. முடிந்தளவுக்கு பிள்ளைகளின் வளர்ச்சியின்போது ஒரே இடத்தில் இருக்க பார்ப்பது நல்லது.
2. தவிர்க்க முடியாத சூழலின் போது, அதற்கு ஏற்ப அவர்களை நாம் தயார் செய்ய வேண்டும்.
3. இட மாற்றத்தினால் அவர்கள் சமூகத்துடன் ஒன்ற சிரமம் கொள்வார்கள் என்பதால் நாம் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நாமும் அவர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டால், கண்டிப்பாக நல்லது கெட்டதை பிற்காலத்தில் நம்முடன் பகிர்ந்துக்கொள்ள தயக்கம் கொள்வார்கள்.
4. அவர்களுடைய மனதில் நெகட்டிவ் எண்ணங்கள் எழாதவாறு பார்த்துக்கொள்ளவும். இல்லையேல், அவர்கள் தனிமையை தேடி செல்வர். அதோடு, சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல இருக்க முடியாமல் வாழ்க்கையை வெறுக்கவும் தொடங்கிவிட வாய்ப்புள்ளது.
5. அந்த இடத்தின் அருகில் உள்ள பாசிட்டிவ் சூழலை அவர்களுக்கு நாம் அமைத்து தரலாம். உதாரணமாக, அவர்கள் வயதினர் யாராவது இருக்கிறார்களா என்பதை ஆராய்தல், பூங்கா, கண்காட்சி என பலவற்றிற்கு அழைத்து செல்வதன் மூலம் அவர்கள் கண்களுக்கு விருந்து படைத்தல் போன்றவற்றை செய்யலாம். இதனால், புதிய சூழலை தனக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர்.
6. ஒருவேளை புதிய சூழலை தனக்கு ஏற்றதாக அமைத்துக்கொள்ள அவர்கள் சிரமம் கொள்ளும்போது நாம் நிச்சயம் குழந்தை நல மருத்துவரை அணுகலாம்.
7. அவர்களிடம் இது குறித்து பேசலாம், 4 வயதுக்கு மேலுள்ள பிள்ளைகளிடம் இது குறித்து பேசும்போது அவர்கள் புரிந்துக்கொள்ள செய்கின்றனர். எங்கு இருந்தோம்? எதற்காக செல்கிறோம்? எங்கே செல்கிறோம்? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் அவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப நம்மால் இருக்கவும் முடியும்.
தோழிகளே, இடம் மாறி செல்வதென்பது நம்முடைய உடல் மற்றும் மனநிலைக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனால், நம்முடைய பிள்ளைகள் இப்போது கற்றுக்கொள்ளும் பருவத்தில் இருக்கின்றனர். அதனால், அடிக்கடி இடம் மாறி செல்வதென்பது அவர்களுக்கும், அவர்களுடைய உடலுக்கும் நிச்சயம் நல்லதாக இருக்காது. மீண்டும் ஓர் பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
Content Image Source: Shutterstock
A