10 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நாம் கடைப்பிடிக்கும் கலாச்சாரம் நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதை நாம் பார்ப்போம்.
பிள்ளைகள் வளரும்போது நம்மை பார்த்தே நம்முடைய கலாச்சார நடைமுறைகளின் பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றனர். நாம் சமூகத்துடன் எவ்வளவு ஒன்றி வாழ்கிறோமோ, அதே பழக்கத்தை தான் நம்முடைய பிள்ளைகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். இது நம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அறிய வேண்டிய கலாச்சாரம்
ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களும் ஒரு வகையான கலாச்சாரத்தை கடைப்பிடிப்பார்கள். எல்லா குடும்பமும் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றுவார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அவை பல விதத்தில் மாறும். கணவன், மனைவி, பிள்ளைகள் என மட்டுமே இருக்கும் வீட்டில் காணப்படும் கலாச்சாரம், கூட்டு குடும்ப கலாச்சாரத்தை காட்டிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
கூட்டு குடும்பம் மற்றும் தனிக்குடும்பத்தில் வாழும் பிள்ளைகள் எப்படி இருப்பர்?
கூட்டு குடும்பம் என்று வரும்போது நம்முடைய பிள்ளைகளுக்கு பல விதத்தில் எது நல்லது? கெட்டது? என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. இதனால், அவர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ எளிதில் பழகிக்கொள்ள தொடங்குகிறார்கள்.
தனிக்குடும்பத்தில் வாழும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லி தரும் விதமே வாழ்க்கைக்கு உதவுகிறது. நாம் பலவற்றை மறைத்து நல்லது கெட்டதை அவர்களிடம் மறைக்கும்போது, அவர்களும் ஒருவித பாதுகாப்பாற்ற உறவை உணர்கிறார்கள். எப்போதும் நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் எதிர்காலத்திற்கு அது எல்லா வகையிலும் உதவும்.
சமூக கலாச்சாரம்
இது நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நம்முடைய பிள்ளைகளை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல தன்னை பாதுகாத்து வாழ்ந்திட நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் மனதில் பாசிட்டிவான எண்ணங்களை விதைக்கும்போது நிச்சயம் தைரியத்துடன் வாழ்க்கையில் காணும் பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்வர். எல்லா சூழலும் நமக்கு ஏற்றார் போல இருக்காது என்பதனை அவர்களுக்கு உதாரணம் காட்டி நாம் புரியவைக்கலாம். பிள்ளைகள் சமூகத்துடன் ஒன்ற பயப்படும்போது தான், ஒரு வித பாதுகாப்பற்ற சூழலை உணர்கிறார்கள். அதோடு, தனிமையில் இருப்பதை பாதுகாப்பாக நினைக்கவும் தொடங்கி விடுகிறார்கள்.
வெளி கலாச்சாரம்
நம்முடைய பிள்ளைகள் சக நண்பர்களுடன் விளையாடும்போதே இந்த வித கலாச்சரத்தை உணர முடிகின்றது. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது கீழே விழுவது போல, சக பிள்ளைகளுடன் வரும் சண்டை சச்சரவுகளை அவர்களாகவே தீர்க்க முயலும்போது தான் வெளியுலகை அறிந்துக்கொள்ள பழகுகிறார்கள். அதற்காக, அவர்களை அப்படியே கண்டுக்கொள்ளாமலும் நாம் விட்டு விட கூடாது. தவறு யார் மீது உள்ளது என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல எதிர்வினை ஆற்றலாம். நம்முடைய பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு சக பிள்ளைகளை கண்டித்தால், நம்முடைய பிள்ளையை அவர்கள் ஒதுக்கிவிட வாய்ப்புண்டு.
அதனால், இப்போது சக பிள்ளைகளுடன் விளையாடும்போது, சேர்ந்து சண்டை இல்லாமல் விளையாடுவது எப்படி என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த பழக்கம் தான் அவர்கள் பள்ளியில் சிறந்த முறையில் சென்று வரவும் உதவியாக இருக்கும். கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் நம்முடைய பிள்ளைகளை வடிவமைப்பதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது.
அதேபோல ஆரம்ப கட்டத்தில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது வெகு தூரத்தில் இருக்கும் பள்ளியை தேர்ந்தெடுக்க வேண்டாம். இது ஒருவித பாதுகாப்பற்ற உணர்வை நம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கிறது.
தேசிய கலாச்சாரம்
நம்முடைய பிள்ளைகளின் பள்ளிகளில் நடத்தப்படும் ஓவிய போட்டி, பிராஜக்ட் போன்றவற்றிற்கு நாம், நம்முடைய ஆதரவை அவர்களின் சிறு வயது முதலே வழங்கி வர வேண்டும். இதனால், நம்முடைய பிள்ளைகள் எதிர்காலத்தில் சாதனை பல படைத்து சமூகத்திற்கு பெருமை சேர்க்க தொடங்குகின்றனர். அவர்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யும்போது, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
பிள்ளைகள் வளர்ப்பின் பயன் என்பது வீட்டோடு நின்றுவிடுவதில்லை. மாறாக, சமூகத்தில் அவர்கள் பாசிட்டிவான மனநிலையுடன் நிலைத்து இருக்க இதுவே உதவியாக உள்ளது. பிள்ளையை வளர்ப்பதில் பெற்றோர்களை காட்டிலும் வேறு யாரால் அக்கறை காட்டிவிட முடியும்! அதனால், நல்லதொரு சூழலை நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு அமைத்து தரலாம் வாருங்கள். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
Content Image Source: Shutterstock
A