பாட்டில் பால் தர பிள்ளைகளின் தந்தைக்கு பயிற்சியளிப்பது எப்படி?

cover-image
பாட்டில் பால் தர பிள்ளைகளின் தந்தைக்கு பயிற்சியளிப்பது எப்படி?

ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளிடம் பாசமாக இருப்பது எப்படி? தாய்ப்பால் தருவதில் நம்முடைய கணவரின் பங்கு எத்தகையது? பாட்டில் பால் தர இது எவ்வாறு உதவும்? என்பதை பார்ப்போம்.

 

புதிதாக பிள்ளை பிறந்ததும் மொத்த பொறுப்பும் தாய்க்கு மட்டும் தான் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால், தாய்ப்பால் அளிப்பது வரை என எல்லாவற்றிலும் நம்முடைய கணவருக்கும் பங்குண்டு. பிள்ளைகளின் தந்தைக்கு இப்போது என்னவெல்லாம் கடமை உணர்வுகள் உள்ளது என்பதை விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

தாய்ப்பால் தரும்போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு பெண் தாய்மையை அடைந்தவுடன் தாய்ப்பால் தர மிக முக்கியமாக ஆதரவளிக்க வேண்டியது கணவன்மார்கள் தான். அவள் சவுகரியமாக தாய்ப்பாலை தருகிறாளா? ஏதேனும் சிரமம் கொள்கிறாளா? தாய்ப்பால் பிள்ளைக்கு சரியாக கிடைக்கிறதா? இல்லையென்றால், பால் ஊற என்ன உணவை தன் மனைவிக்கு கொடுக்க வேண்டும்? எப்போது மருத்துவரை பார்க்க வேண்டுமென எல்லாவற்றிலும் தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கும் பங்குண்டு என்பதை ஒவ்வொரு கணவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மனைவி என்பவள் பிள்ளைக்கு அதிகமாக தாய்ப்பால் தரும்போது என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதையும் கணவன்மார்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இது தான் அம்மாக்கள் பிள்ளைகளின் அருகில் இல்லையென்றாலும், தந்தை அமைதியாக தன்னுடைய பிள்ளைக்கு பாட்டிலில் உள்ள பாலை தர உதவியாகவும் இருக்கும் என்பதை மறவாதீர்.

 

தாய்ப்பால் தருவதில் தந்தையின் பங்கு எத்தகையது?

தயாராக இருத்தல்:

தாய்ப்பால் குறித்த அனைத்து விதமான தகவலை நம் கணவர், நம்முடன் இணைந்து கற்றுக்கொள்ள வேண்டும். எப்போது பிள்ளைக்கு தாய்ப்பால் அவசியம், தாய்ப்பாலை எப்படி பம்ப் செய்து சேமித்து பிள்ளைக்கு தருவது போன்ற அடிப்படை விஷயங்களை நம்முடைய கணவர் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 

ஆதரவு அளித்தல்:

தாய்ப்பால் அளிக்கும் நமக்கு எல்லா விதத்திலும் கணவரின் ஆதரவு கிடைக்க வேண்டும். நம்முடைய பிள்ளையின் ஆரோக்கியத்தை தாய்ப்பால் எப்படி எல்லாம் மேம்படுத்துகிறது என்பதை நாம் அவருக்கு புரியவைத்து ஆதரவை கோரலாம். குறிப்பாக, தாய்ப்பால் தரும்போது ஏற்படக்கூடிய அசவுகரிய சூழலில் தான் அவருடைய ஆதரவு வேண்டுமென்பதை புரிய வைக்கலாம்.

 

அறிய வேண்டியவை:

பிள்ளைகள் பிறந்தவுடன் மருத்துவமனையில் உள்ள செவிலியரிடம் என்ன மாதிரியான பராமரிப்பு வேண்டும் என்பதை கேட்டு அறிந்துக்கொள்ளவும் செய்யலாம். அதேபோல, அவர்கள், பிள்ளைகளின் நலனுக்காக என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதையும் அறிந்துக்கொள்ள வேண்டும். வீட்டிற்கு போனதும் நமக்கு ஒத்தாசையாக இருக்க நிச்சயம் இது உதவும்.

 

தாய்ப்பால் கொடுக்கும் பிள்ளைகளுடன் எளிதில் பாசத்தை தந்தைகள் வெளிப்படுத்துவது எப்படி?

ஒரு சில கணவன்மார்களுக்கு பிறந்த பிள்ளைகளை தூக்கி கொஞ்சவே பயமாக இருக்கும். ஆனால் இந்த பயம் நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே போகும். இப்போது, நம்முடைய கணவர், பிள்ளையிடம் பாசத்தை எளிதாக வெளிப்படுத்த என்னவெல்லாம் வழிகள் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

 

1. தூக்குதல்

அவர்கள் விழித்திருக்கும்போது அவர்களை தூக்கி கொஞ்சலாம். அவர்கள் தூங்கும்போது, தந்தை அவர்கள் அருகில் அமர்ந்து கைகளை பிடித்துக்கொள்ளவும் செய்யலாம்.

 

2. தோலோடு தோல் ஒட்டுதல்

இதனை கங்காரு பராமரிப்பு என்றும் அழைப்பார்கள். அதாவது கங்காரு அதன் குட்டியை மடியில் சுமந்து கொண்டு எப்படி இருக்குமோ, அதேபோல, நம்முடைய மார்போடு அவர்களை இறுக்கி அணைத்து அன்பை வெளிப்படுத்தலாம். இது போன்ற சூழலில் ஆக்சிடோசின் எனப்படும் ஹார்மோன் வெளிப்படும். இந்த ஹார்மோன் தான் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த உதவும் ஒன்றாகும்.

 

3. தினசரி பராமரிப்பு

தாய்ப்பால் அளிக்கும் முன்பும், பின்பும் எண்ணற்ற டயாப்பர்களை மாற்ற வேண்டி வரலாம். இதற்கு நம் கணவர் நமக்கு உதவி செய்யும்போது, பிள்ளைகள் தந்தையின் பாசத்தை உணர தொடங்குகின்றனர். மார்பக காம்பில் மாற்றி கொடுக்கும்போது அல்லது தாய்ப்பால் அளித்து முடித்த பிறகு அவர்களுக்கு ஏப்பம் வர நம்முடைய கணவர் உதவி செய்ய முன்வரலாம். அதேபோல நம்முடைய பிள்ளைகளை குளிக்க வைக்கும்போது வேடிக்கை காட்டி அவர்கள் அசவுகரியத்தை குறைக்கவும் உதவலாம்.

 

4. வேடிக்கை காட்டுதல்

நாம், நம் பிள்ளை மற்றும் கணவரோடு வேடிக்கையான நிகழ்வுகளில் ஈடுபட செய்யலாம். அதோடு, நம்முடைய கணவரிடம் சொல்லி, அவர்களை கேரியர் அல்லது வண்டியில் வைத்து அழைத்துக்கொண்டு ஒரு வால்க் சென்று வரவும் சொல்லலாம். இதன் மூலமாக, இயற்கை காற்று நம்முடைய பிள்ளைக்கு இதமாக இருப்பதோடு, தந்தையுடன் பாசத்தை வெளிப்படுத்த வாய்ப்பையும் அமைத்து தருகிறது.

 

இது போன்ற எண்ணற்ற செயல்பாடுகள் நம்முடைய கணவர் பிள்ளையுடன் பாசத்தை வெளிப்படுத்தி புரிந்துக்கொள்ள செய்ய உதவியாக இருக்கிறது. மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#breastfeeding #babycare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!