12 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
பிள்ளைகள் படுக்கையில் உச்சா போவது குறித்து நாம் என்ன அறிய வேண்டும்? எதனால் இது ஏற்படுகிறது? பெட் வெட்டிங் அலாரம் என்றால் என்ன? போன்ற பல சுவாரஸ்யமான தகவலை காண்போம் வாருங்கள்.
இப்போது நம்முடைய பிள்ளைகளால் மெத்தையில் உச்சா போகாமல் இருக்கவே முடியாது. இது குறித்து நீங்கள் ஆதங்கத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினாலும், இதனை எப்படி தவிர்ப்பதென தெரியாமல் தவிக்க தான் செய்கிறார்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்வதாக நாம் நினைப்பது தான் தவறு. இந்த வயதில் இது பொதுவான விஷயம் தான். இது குறித்த பல பயனுள்ள தகவலை தான் நாம் இப்போது இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
இது நம்முடைய பிள்ளைகளுக்கு காலப்போக்கில் சரியாகிவிடும் ஒரு பிரச்சனை தான் என்பதால் கவலை வேண்டாம். சில சமயம் மட்டுமே இதற்காக நாம் மருத்துவரை அணுக வேண்டும்.
எப்போது இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?
40% மூன்று வயது பிள்ளைகள் படுக்கையை நனைப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சில சமயம் நம்முடைய பிள்ளைகளின் சிறுநீர்ப்பை முற்றிலும் வளர்ச்சியடையாமல் இருக்கும்போது, சிறுநீரை தேக்கி வைக்க முடியாமல் அவர்கள் போய்விடுவதாகவும் கூறப்படுகிறது. சில மருத்துவர்களோ, பிள்ளைகளுக்கு தற்போது எவ்வளவு நேரம் சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமென்பது குறித்த அடிப்படை புரிதல் இல்லாமல் போவதாலே இந்த பிரச்சனை என்கின்றனர்.
இந்த விஷயத்தில், எதனை நாம் சகஜமாக கடந்து செல்ல வேண்டும்?
இரண்டு முதல் நான்கு வயதில் தான் டாய்லெட் போவது குறித்தவற்றை நம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு வயதில் முற்றிலுமாக இந்த பழக்கம் நின்றுவிடவும் கூடும். அதனால் இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. சில பிள்ளைகள் பத்து அல்லது பன்னிரெண்டு வயது வரை கூட இதை செய்வார்கள். இதற்கு காரணமாக நம் வீட்டில் இருக்க கூடிய மன அழுத்தங்கள் அல்லது பள்ளிக்கு செல்வதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் இந்த வயதில் அடங்கி இருக்கலாம்.
“பிள்ளைகள் படுக்கையை நனைப்பதற்கும், அவர்களின் குணாதிசயத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி உளவியல் கூறுகிறது.”
ஒருவேளை இந்த பிரச்சனை உங்களின் பிள்ளைக்கு தொடர்ந்து இருப்பதாக நீங்கள் நினைத்தால் கட்டாயம் மருத்துவரின் உதவியை இந்த விஷயத்திற்காக நாடலாம்.
டாக்டருக்கு நாம் எப்படி உதவுவது?
ஒரு சில கேள்விகளுக்கு நாம் டாக்டரிடம் பதில் கூறுவதன் மூலம் அவர்களால் இந்த பிரச்சனை குறித்த தெளிவை பெற்று இதற்கான தீர்வையும் தேட முடியும். அவை,
இது போன்ற கேள்விக்கு நாம் அளிக்கும் பதில் கொண்டு மருத்துவர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான பிரச்சனை உள்ளது என்பதை கண்டறியலாம்.
எந்த மாதிரியான சிகிச்சை இதற்கு தேவைப்படும்?
நம்முடைய பிள்ளைகளுக்கு சிறுநீர் நோய் தொற்று உள்ளதா என்பதை அறிய யூரின் டெஸ்ட் எடுத்து பார்ப்பார்கள். நம்முடைய பிள்ளைகளின் சிறுநீர் பாதை குறித்து அறிய இன்னும் சில பரிசோதனைக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பது குறித்து நாம் அறிய வேண்டியவை எவை?
படுக்கையில் சிறுநீர் கழிப்பது குறித்து நாம் அவர்களின் வயதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும். எப்போதும் இந்த விஷயத்தில் நாம், நம்முடைய ஆதரவை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடிச்சிருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
A