சுற்றுச்சூழலால் பிள்ளைகளுக்கு ஏற்படும் அலர்ஜி குறித்து நாம் அறிய வேண்டியவை

cover-image
சுற்றுச்சூழலால் பிள்ளைகளுக்கு ஏற்படும் அலர்ஜி குறித்து நாம் அறிய வேண்டியவை

எதனால் பிள்ளைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது? இதனை தடுப்பது எப்படி? அலர்ஜி அவர்களின் எதிர்காலத்தை பாதிக்குமா? என்பது குறித்து பார்ப்போம் வாருங்கள்.

சுற்றுச்சூழல் அலர்ஜி காரணமாக நம்முடைய பிள்ளைகளின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். ஆனாலும் இதன் அறிகுறிகள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாறி காணப்படும். சளி, தும்மல், களைப்பாக இருத்தல், சைனஸ் பிராப்ளம் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.

 

சுற்றுச்சூழல் அலர்ஜி என்பது என்ன?

இது உணவு அலர்ஜியை காட்டிலும் மாறுபட்டு காணப்படும் ஒன்றாகும். சுற்றுச்சூழல் அலர்ஜி என்பது அன்றாட வாழ்வில் அவர்கள் சுற்றியுள்ள விஷயங்களால் ஏற்படும் அலர்ஜியாகும்.

 

இதன் அறிகுறிகள் என்னென்ன?

 • தும்மல்
 • மூக்கு ஒழுகுதல்
 • மூச்சு விட சிரமம்
 • அரிப்பு இருத்தல்
 • வீஷிங் பிரச்சனை
 • களைப்படைதல்

 

ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் நாம் தாமதிக்காமல் நம்முடைய பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது. பருவக்காலம் வரும்போது மட்டுமே அலர்ஜி அவர்களுக்கு இருந்தாலும், அப்போதும் மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

 

“வசந்தகாலம் வந்தால் போதும். ஒரு சிலருக்கு அவர்கள் ஓடும் வேகத்தை விட, மூக்கு ஒழுகி வேகமாக ஓடும், உண்மை தானே.”

என்ன மாதிரியான விஷயங்களால் அலர்ஜி உண்டாகும்?

 

1. தூசித்துகள்

வீட்டிற்கு வெளியில் தான் தூசி இருக்க வேண்டுமென அவசியமில்லை.வீட்டினுள்ளே காணப்படும் நாற்காலிகள், மெத்தைகள் போன்றவற்றிலும் தூசி இருக்கலாம். இதனாலும் நம்முடைய பிள்ளைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம்.

 

2. மகரந்த அலர்ஜி

நம்முடைய பிள்ளைகளுக்கு பூக்கள் வாசனையும் சில சமயம் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். இதன் காரணமாக தும்மல், கண்களில் தண்ணீர் வருதல், தொண்டை அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்க செய்யலாம்.

 

3. செல்லப்பிராணி

கோழி போன்ற வளர்ப்பு பிராணிகள் மேல் உள்ள இறகு மற்றும் நாய், பூனை போன்றவற்றின் எச்சில், உதிர்க்கும் முடி போன்றவற்றாலும் நம்முடைய பிள்ளைகளுக்கு அலர்ஜி வரலாம். இதனால் இருக்கக்கூடிய அறிகுறிகள், தும்மல், அரிப்பு, இருமல் போன்றவையாகும். நம்முடைய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை தூரத்தில் கட்டி வைக்கலாம். கோழி கூடுகளை வீட்டின் அருகாமையில் வைக்காமல் தள்ளி வைக்கலாம்.

 

4. காளான், பூஞ்சை வகை

இவை நம்முடைய வீட்டின் பாத்ரூம், தொட்டி அடிகளில் வளர்ந்து காணப்படும். இவையும் நம்முடைய பிள்ளைகளுக்கு அலர்ஜியை உண்டாக்கலாம். இதனால் அவர்களுக்கு இருமல், மூச்சு விட சிரமம், தும்மல், சரும அரிப்பு போன்றவை காணப்படலாம்.

 

5. புகைப்பிடித்தல்

நம்முடைய வீட்டில் யாராவது புகைப்பிடித்தால், அதனாலும் நம்முடைய பிள்ளைக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வீட்டின் அருகாமையில் புகைப்பிடிக்க யாரையும் அனுமதிக்காமல் இருப்பது நம்முடைய பிள்ளைகளின் நலனுக்கு உதவும்.

 

எப்படியெல்லாம் இதனை தடுக்க முடியும்?

 • உங்களுடைய வீடு நகரங்களில் காணப்பட்டால், வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடி இருப்பதை உறுதி செய்யவும்.
 • வீட்டை பெருக்காமல் காற்றாடியை போட வேண்டாம். இல்லையேல், தூசி பறக்க தொடங்கிவிடும்.
 • பிள்ளைகளை எந்த காரணத்துக்காகவும் கோழி, நாய், பூனை போன்றவற்றின் அருகாமையில் செல்ல அனுமதிக்க கூடாது.
 • பூஞ்சை, பாசி, காளான் போன்றவை தங்கும் இடங்களை அடிக்கடி கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றவிட வேண்டும்.
 • வீட்டில் போடப்படும் கால் மிதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், காலணிகளை வைக்க ராக் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
 • வாஷிங் மெஷினில் துவைக்கும் துணியை உடனடியாக காய போடவும், இல்லையேல் கெட்ட வாடை ஒன்று வர தொடங்கிவிடும்.
 • ஈரமான துணிகளை வீட்டினுள்ளே போடாமல் காற்றோட்டமான இடங்களில் காய வைக்கவும்.
 • வீட்டினுள்ளே அதிகமாக செடி வளர்ப்பதை தவிர்க்கவும், இல்லையேல், காளான், பூஞ்சை போன்றவை வளர வாய்ப்புள்ளது.
 • விறகு அடுப்புக்களை வீட்டிற்கு வெளியே வைத்திருப்பது நல்லது.
 • படுக்கை தலையணை, மெத்தை, போர்வை போன்றவற்றை வாரம் ஒரு தடவை கட்டாயம் துவைக்க வேண்டும்.
 • கெட்டு போன உணவுகளை உடனடியாக அப்புறப்படுத்திவிடுவது நல்லது.

 

நம்முடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு சுற்றுச்சூழலை அமைத்து தருவதென்பது வெளியுலகை மட்டுமே சார்ந்ததல்ல என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடிச்சிருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள சுவாரஸ்யமான பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#childhealth #parentinggyaan #babycare
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!