14 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இந்த ஆர்டிக்களில், பிள்ளைகள் தவழும் அழகில் என்னவெல்லாம் நாம் கவனிக்க வேண்டும்? எப்போது பிள்ளைகள் தவழ தொடங்குவார்கள்? எதற்காக தவழ்தல் என்பது அவர்களுக்கு அவசியமாகிறது என்பதை பார்க்கவிருக்கிறோம்.
நம்முடைய பிள்ளைகள் தவழ தொடங்கும்போது அது நிச்சயம் நாம் நினைவில் வைத்துக்கொள்ள கூடிய ஒரு தருணமாக வாழ்க்கையில் அமையும். ஆனால் அவர்கள் தவழும் அழகில் பலவிதங்கள் உள்ளதென்பதை நீங்கள் அறிவீரா. ஆம், அவை என்னவென்பதையும், பிள்ளைகள் தவழுவதை குறித்த பல பயனுள்ள சுவாரஸ்யமான தகவலையும் இப்போது நாம் பார்ப்போம் வாருங்கள்.
நம்முடைய பிள்ளைகள் தவழ்வதில் என்னவெல்லாம் ஸ்டைல் உள்ளது?
1. கிராஸ் கிரவுல்
இவ்வாறு தவழும்போது நம்முடைய பிள்ளைகள் அவர்களின் கைகள் மற்றும் முழங்காலுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். இப்போது ஒரு கையை மெல்ல நகர்த்துவார்கள். அதே சமயம், அவர்களின் எதிர்புற முழங்காலும் முன்னோக்கி வரும்.
2. பியர் கிரவுல்
இந்த மாதிரியாக தவழும்போது நம்முடைய பிள்ளைகள், அவர்களின் முழங்கை மற்றும் முழங்காலை நேராக வைத்திருப்பார்கள். அதே சமயம், கைகள் மற்றும் பாதம் கொண்டு தவழ முயல்வார்கள். இது பார்ப்பதற்கு பாண்டா கரடி நடப்பது போலவே இருக்கும்.
3. கமாண்டோ கிரவுல் அல்லது பெல்லி கிரவுல்
இந்த தவழ்தல் முறையில் நம்முடைய பிள்ளைகள் இராணுவ வீரர்களை போல இருக்க செய்வார்கள். அவர்களின் உடலை முன்னோக்கி நகர்த்தி, வயிற்றை கொண்டு தரையில் நகர்வார்கள். அதாவது, இராணுவ வீரர்கள், பதுங்கி நிலத்தில் ஊர்ந்து செல்வது போல இருக்கும்.
4. பாட்டம் ஸ்கூட்டர்
இந்த தவழ்தல் முறையில், நம்முடைய பிள்ளைகள் முன்னோக்கி நகர்வதற்காக, கைகளை பயன்படுத்துவார்கள். அப்போது அவர்கள் கீழ் உடல் தரையில் படும்.
5. கிராப் கிரவுல்
இந்த தவழ்தல் முறை நண்டை போல, பின்னோக்கி நகர்தல் அல்லது பக்கவாட்டுப்புறமாக நகர்தலாகும். நண்டை போல கைகளை ஊன்றி ஊன்றி தவழ்வார்கள்.
6. ரோலிங் கிரவுல்
இந்த தவழ்தல் முறையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல நம்முடைய பிள்ளைகள் உருண்டே செல்வார்கள். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் ஒரு முறையும் கூட.
7. லீப்-ஃபிராக் கிரவுல்
இந்த முறையில் தவழும்போது, நம்முடைய பிள்ளைகள் அவர்களின் கைகள் மற்றும் கால்களை நிலத்தில் ஊன்றி முன்னோக்கி உந்துவார்கள். இதனை பச்சைக்குதிரை முறை தவழ்தல் என்று கூட நாம் அழைப்போம்.
எப்போது தவழ தொடங்குவார்கள்?
பெரும்பாலான பிள்ளைகள் 6 மாதங்களில் கை மற்றும் கால்களை நகர்த்தி தவழ செய்கிறார்கள். ஆனால், நம்முடைய பிள்ளைகள் 6 முதல் 12 மாதங்களில் தவழ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை நீண்ட காலமாக நம்முடைய பிள்ளைகள் தவழ தொடங்கவில்லை என்றால் குழந்தை நல மருத்துவரை நாம் அணுகலாம்.
தவழ்தல் என்பது நம்முடைய பிள்ளைக்கு எதற்கு அவசியமாகிறது?
தவழ்தல் வேறு எதற்கெல்லாம் உதவுகிறது?
நம்முடைய பிள்ளைகள் தவழ தொடங்கும்போது அவர்களை சுற்றியுள்ள பொருட்கள் குறித்தும் நாம் கவனிக்க வேண்டும். ஏனென்றால், அவற்றை எடுத்து வாயில் வைக்க வாய்ப்புள்ளது. அவர்களின் தவழ்தல் ரசிப்பதற்கு எவ்வளவு அழகோ, அதே அளவு முன்னெச்சரிக்கை உடனும் நாம் நிச்சயம் இருக்க வேண்டும்.
இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
#8monthsoldbaby #8to12monthbabydevlopment #momof7montholdbaby
A