35 வயதுக்கு பிறகு கர்ப்பமாகும் போது கவனிக்க வேண்டியவை

cover-image
35 வயதுக்கு பிறகு கர்ப்பமாகும் போது கவனிக்க வேண்டியவை

இந்த ஆர்டிக்களில், 35 வயதுக்கு மேல் கர்ப்பமாவது குறித்து பல பயனுள்ள தகவலை பார்க்கவிருக்கிறோம்.

பொதுவாக ஒரு பெண்ணால் இருபது வயதுக்கு மேலிருந்து முப்பது வயதுக்குள் இயற்கையாகவே கருத்தரிக்க முடிகிறது.

டாக்டர் ஒருவர் கூறும்போது, “பெண்கள் 20 வயது முதல் 24 வயது வரை என்பது கருத்தரிக்க சிறந்த வயது.” என்கிறார்.

ஆனால், ஒரு சில பெண்கள் திருமண வயதை கடந்து மணமுடிக்கும்போது தன்னால் இதற்கு பிறகு கர்ப்பமாக முடியுமா? முடியாதா என்ற கவலையுடன் இருப்பார்கள். இது குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு பதிவு.

 

ஜெரியாட்ரிக் பிரக்னென்சி என்றால் என்ன?

ஒரு பெண் 35 வயது அல்லது அதனை கடந்து பிள்ளையை பெற்றுக்கொள்வதை இந்த வார்த்தை கொண்டு அழைப்பர். 35 வயதை கடந்தும் ஒரு பெண்ணால் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது எனில் நிச்சயம் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமென்பது மருத்துவர்களின் கருத்து.

 

“70 வயது மூதாட்டி ஒருவர் பிள்ளையை பெற்றுக்கொண்டார்.” என்ற செய்தி சமீபத்தில் வைரலானது.


35 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சிக்கல் என்னென்ன?

 • உயர்ந்த இரத்த அழுத்தம் காணப்படுதல்
 • கர்ப்பக்கால சர்க்கரை நோய்
 • கருச்சிதைவு
 • சிசேரியனுக்கு வழிவகுத்தல்
 • குழந்தை முன்கூட்டி பிறத்தல்
 • குழந்தை குறைந்த எடையுடன் பிறத்தல்
 • குரோமோசோம் குறைபாடுகள்

 

ஆனால் 35 வயதுக்கு மேல் கார்ப்பமாகும்போது ஒரு சில நன்மைகள் உள்ளது, அவை என்னவென்பதையும் நாம் இப்போது காண்போம்.

 

35 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள நன்மைகள் என்னென்ன?

 • 35 வயதை கடக்கும்போது அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும்
 • அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலையில் இருக்கவும் கூடும்
 • ஆரோக்கியம் கூடி காணப்படவும் வாய்ப்புள்ளது

 

ஆரோக்கியமாக பிள்ளையை பெற்றெடுக்க என்ன செய்வது?

கருத்தரிப்பதற்கு முன்பான செக்கப் & ஆலோசனை

பிள்ளை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த உடனே மருத்துவரை அணுகி, அதற்கான வழிமுறைகளை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். உடல் மற்றும் மனரீதியாக நாம் தயாராக டாக்டர் பரிந்துரைகள் அவசியம்.

கர்ப்பத்தின் முதல் எட்டு வாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதனில் நம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சி அதிகமாகவே காணப்படும். கருத்தரிப்பதற்கு முன்பான செக்கப் மூலமாக நம்மால் ஆரோக்கியமாக பிள்ளையை பெற்றுக்கொள்ள முடியும். இதனில் ஸ்க்ரீனிங், ரெகுலர் செக்கப், சைல்ட் பர்த் பற்றி அறிதல், ஆலோசனை மற்றும் ஆதரவு என அனைத்தும் அடங்கும்.

 

நம்முடைய டாக்டர்கள் இந்த வயதில் எதனை எல்லாம் கவனிப்பார்கள்?

 • சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதனை
 • இரத்த அழுத்தம் சீராக இருக்கிறதா என்பதனை
 • பிள்ளையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா என்பதனை

 

எவற்றை எல்லாம் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்?

1. நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரெனெட்டல் வைட்டமின்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். இப்போது நமக்கு போதிய அளவிலான ஃபோலிக் அமிலம் என்பது தேவைப்படுகிறது. இது நம்முடைய பிள்ளையின் மூளை மற்றும் தண்டு வடத்தை உறுதியாக வைத்துக்கொள்ள உதவும் வைட்டமினாகும். இந்த வைட்டமின் எடுத்துக்கொள்வது மூலமாக பிள்ளைகளின் பிறப்பில் ஏற்படக்கூடிய குறைபாடு குறைந்து காணப்படும்.

2. ஆரோக்கியமான உணவு முறை பழக்கவழக்கத்தை இப்போது நாம் கடைப்பிடிக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர். விதவிதமான ஆரோக்கியமான உணவை நாம் உண்ணுவதன் மூலம் அனைத்து விதமான ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கிறது.

3. நம்முடைய உணவு முறையில் நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

4. முழு தானியங்கள், பீன்ஸ், மெல்லிய இறைச்சி, குறைந்த கொழுப்பு அடங்கிய பால் உற்பத்தி உணவு பொருட்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

5. தினமும் கால்சியம் நிறைந்த உணவை உட்கொள்ளுவதனை உறுதி செய்ய வேண்டும். இதனால் நம்முடைய பிள்ளையின் பற்கள், எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கிறது.

முப்பத்தைந்து வயதுக்கு பிறகு கர்ப்பமாவதென்பது சிக்கலான விஷயம் ஒன்றல்ல. நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது நிச்சயம் நம்மால் நாற்பது வயதில் கூட பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

 

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamil #tamilbabychakra #bbctamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!