பிள்ளைகளின் அளவுக்கு மீறிய அச்சத்தால் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

cover-image
பிள்ளைகளின் அளவுக்கு மீறிய அச்சத்தால் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

இந்த ஆர்டிக்களில், பிள்ளைகளின் பயம் ஏன் வருகிறது? என்ன செய்வது? எதனை கண்டு பயப்படுவர்? போன்றவற்றை பார்க்கவிருக்கிறோம்.

பயம் என்பது இப்போது நம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் இருக்கக்கூடிய ஒரு பகுதியே. ஏதாவது பேய் கதை கேட்டாலோ, சாலையில் நாய் சென்றால் கூட உடனே பயம் கொள்வார்கள். இடி இடிக்கும்போது நம்மை வந்து இறுக்கி அணைத்துக்கொள்ளவும் செய்வார்கள். பெற்றோராக நாம், அவர்களின் பயத்தை போக்க வேண்டுமென்றே ஆசை கொள்வோம். ஆனால், இப்போது பல விஷயங்களை பார்த்து வரும் பயம் இயல்பான ஒன்று தான். காலப்போக்கில் நம்முடைய பிள்ளைகளுக்கு நிச்சயம் தைரியம் பிறக்கும். இது குறித்த சுவாரஸ்யமான தகவலை நாம் இப்போது பார்ப்போம் வாருங்கள்.

 

பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பயத்தால் ஏதாவது நன்மை உள்ளதா?

நிச்சயம் உள்ளது, அவை என்னவென்பதை நாம் இப்போது காணலாம்

 

 • அவை நம்முடைய பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்க உதவுகிறது
 • தன்னிச்சையாக செயல்பாட்டை செய்ய அவர்களுக்கு தைரியத்தை தருகிறது
 • ஆரம்பத்தில் அவர்கள் பயந்தாலும், ஒரு கட்டத்தில் பயம் வெறும் நிழல் தான் என்பதை உணர்ந்து வாழ்க்கையில் முன்னோக்கி அடி எடுத்து வைக்கின்றனர்

 

எவற்றை எல்லாம் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்?

சுயகட்டுப்பாடு:

அவர்களுடைய சுயக்கட்டுப்பாடு மூலமாக தைரியமாக இருக்க முடியும். இந்த சுயக்கட்டுப்பாடு தான், அவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி சிறந்த முறையில் செயல்பட உதவியாக உள்ளது. சுயக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து நாம் நம்முடைய பிள்ளைகளிடம் பேசலாம். உதாரணமாக, அவர்கள் ஒரு இருட்டறை பார்த்து பயந்தால், உடனே அவர்களை அந்த ரூமை விட்டு அழைத்து வந்துவிடக்கூடாது. அவர்கள் பயத்தை போக்கும் வண்ணம், அந்த அறையின் லைட்டை போட்டு காண்பித்து அங்கு எதுவுமே இல்லை என்பதை அவர்களிடம் உறுதிசெய்யவும். இதனால், அடுத்த முறை இது போல பார்க்க தோன்றினாலும், உங்களை அழைக்கும் முன்பே தானாக ஒரு நிமிடம் யோசித்து முடிவெடுப்பார்கள்.

 

பயம் வேண்டாம்:

அவர்கள் எப்போதாவது பயப்படுவது பிரச்சனை இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அவர்கள் நிச்சயம் பயப்படுவார்கள். ஏனென்றால், அவை அவர்களை பயமுறுத்தும் விதத்தில் உண்மையாகவே இருக்கும். ஆனால், இல்லாத ஒரு விஷயத்தை எண்ணி பயப்படும்போது நாம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். நிழல் எதுவென்பதை நாம் அவர்களுக்கு வெளிச்சமிட்டு காட்ட வேண்டும்.

“கடினமான சூழலை, நம்முடைய பிள்ளைகளுக்கு காட்டும்போது தான் அவர்கள் அதனில் விழுந்து பயந்து எழுந்து தன்னம்பிக்கையை பெறுகிறார்கள்.”

அவர்கள் இயற்கையை பார்த்து பயப்பட்டால், இயற்கை நமக்கு எப்போதுமே நல்லதொரு நண்பன் என்று கூறலாம். அவர்கள் முன்பாக செடிகளை நடுதல், பூக்களை பறித்து அவர்களிடம் காட்டுதல் என பல செயல்பாடுகளை செய்யும்போது இயற்கையை பற்றிய அச்சம் அவர்களிடமிருந்து விலகி செல்லும். ஒரு பெரிய மரத்தை பார்த்து அவர்கள் பயப்பட்டால், அந்த மரத்தால் என்னவெல்லாம் நன்மை என்று நாம் அவர்களுக்கு கூறலாம்? ‘பார்த்தியா, அந்த மரம் உன்னை பார்த்து சிரிக்கிறது.’ என்று கூறும்போது அவர்களாகவே அந்த மரம் சிரிப்பது போல கற்பனை செய்துக்கொள்வர். இது அவர்களின் பயத்தை நிச்சயம் போக்கும்.

 

அவர்கள் பயத்தை போக்க நாம் வேறு என்னவெல்லாம் செய்வது?

 • அவர்கள் பயப்படும்போது சமாதானப்படுத்தி முதலில் முதுகை தடவி கொடுக்கலாம்
 • அவர்கள் தூங்க செல்வதற்கு முன்பாக திகில், பேய் படங்களை பார்ப்பதை தவிர்க்கவும்
 • அவர்களை சாப்பிட வைக்க ‘பூச்சாண்டி வருகிறான்’ போன்ற சொற்களை சொல்வதை தவிர்க்கவும்
 • அவர்கள் நாய்களை பார்த்து பயப்பட்டால், நாய்களால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு உள்ளது போன்றவற்றை காணொளி மூலமாக அவர்களுக்கு காட்டி பயத்தை போக்க வைக்கலாம். ஆனாலும், நாய்கள் அருகில் அவர்களை விட்டு விட கூடாது

 

எதை பார்த்து பெரும்பாலும் நம் பிள்ளைகள் பயப்படலாம்?

 • தனியாக இருப்பதை பார்த்து
 • இருளை பார்த்து
 • நாய் அல்லது பெரிய விலங்குகளை பார்த்து
 • பூச்சிக்களை பார்த்து
 • உயரத்தை பார்த்து
 • டாக்டர் ஊசி போடுவதை பார்த்து
 • அசாதாரண சத்தத்தை கேட்டு
 • கற்பனையாக நினைத்து

 

இதனை சரி செய்ய பெற்றோர்களாகிய நம்மால் மட்டுமே முடியுமென்பதை உணர்ந்து அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #babychakratamil #tamil #activitiesfortoddler
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!