• Home  /  
  • Learn  /  
  • பிரசவத்திற்கு பிறகு உண்ண வேண்டிய 12 சூப்பர் உணவுகள்
பிரசவத்திற்கு பிறகு உண்ண வேண்டிய 12 சூப்பர் உணவுகள்

பிரசவத்திற்கு பிறகு உண்ண வேண்டிய 12 சூப்பர் உணவுகள்

15 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இந்த ஆர்டிக்களில் பிரசவம் கழித்து, எதனை நாம் சாப்பிடலாம்? அவை நமக்கும், பிள்ளைக்கும் எப்படி உதவுகிறது? என்னவெல்லாம் சத்துக்கள் அதனில் உள்ளது? என்பதை பார்ப்போம்.

 

கர்ப்பமாக இருந்தபோது பிள்ளைகளை நல்லபடியாக பெற்றால் போதுமென்ற மனநிலையுடன் மட்டுமே இருப்போம். இதனை தாண்டி எதையும் யோசிக்க நாம் நிச்சயம் தயாராக இருக்க மாட்டோம். ஆனால், பிரசவம் கழித்து பல வித கேள்விகள் நம் மனதில் எழும். அவற்றுள் ஒன்று தான் நாம் உண்ண வேண்டிய உணவு குறித்த கேள்விகள்.

 

கர்ப்பமாக இருக்கும்போது பலவித ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு இருப்போம், மோசமான உணவை தவிர்த்து இருப்போம். அதான் பிரசவம் ஆகிவிட்டதே என்று நினைத்து மீண்டும் ஜங் ஃபுட்டை நம்மால் சாப்பிட முடியாது. ஏனென்றால், நம்முடைய பிள்ளைகள் இப்போது தாய்ப்பால் குடித்து கொண்டிருக்கலாம். நாம் மோசமான உணவை உண்ணும்போது, பால் சுரக்க சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இப்போது பிரசவத்திற்கு பிறகு நாம் உண்ண வேண்டிய 12 சூப்பர் உணவுகளை பார்ப்போம் வாருங்கள்.

 

1. கிழங்கான் மீன்

நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் ஒமேகா கொழுப்பு அமிலம் அவசியமாகிறது. இந்த சத்து மீனில் உள்ளது. ஆனாலும் மெர்குரி இல்லாத மீனாக சாப்பிடுவது நல்லது. அப்பேற்பட்ட ஒரு சிறந்த மீன் தான் இந்த கிழங்கான். ஆனாலும் இந்த மீனை நாம் நம்முடைய மருத்துவர் பரிந்துரை பெற்று மட்டும் தான் சாப்பிட வேண்டும். காரணம், இதனில் காணப்படும் DHA.

 

“தாய்ப்பால் தருபவர்கள், கர்ப்பமாக நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், எடுத்துக்கொள்ளும் கிழங்கான் மீன் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும், மருத்துவர் பரிந்துரை அவசியம்.”

– FDA

திருக்கை போன்ற மீன்களை நாம் தவிர்க்க வேண்டும். இதனில் அதிகளவிலான மெர்குரி உள்ளது.

 

2. குறைந்த கொழுப்புள்ள தயாரிப்புகள்

தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு தயிர், பால் அல்லது சீஸ் போன்றவை ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவு பொருளாகும். பாலில் உள்ள வைட்டமின்-D எலும்பை வலுவாக்க உதவுகிறது. அதோடு கால்சியமும் பாலில் உள்ளது. இதன் காரணமாக நம் பிள்ளைகளின் எலும்பு வலுவாக வளர்ச்சியடைய தொடங்கும். அதனால் போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

 

3. பயறு வகை

கருப்பு பீன்ஸ், சிவப்பு காராமணியில் இரும்புச்சத்துள்ளது. இது நாம் தாய்ப்பால் தரும்போது உதவும் அற்புதமான உணவாகும். இதனில் அசைவ கொழுப்பு அற்ற புரதச்சத்து இருப்பதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

 

4. ப்ளூபெர்ரி பழம்

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் தினமும் பழங்கள் அல்லது ஜூஸ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்பேற்பட்ட, நம்முடைய தேவையை பூர்த்தி செய்வதில் ப்ளூபெர்ரி முக்கியமான பங்கை வகிக்கிறது. இதனில் வைட்டமின்கள் மற்றும் மினெரெல்கள் உள்ளது. இதனில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் நம் உடல் ஆற்றலை அதிகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

5. தீட்டாத அரிசி

நாம் இதனை எடுத்துக்கொள்ளும்போது ஆற்றல் மடங்கு அதிகமாக காணப்படும். இதனால் நம்முடைய பிள்ளைகளுக்கு தாய்ப்பால் சரியான அளவில் கிடைக்கிறது.

 

6. ஆரஞ்சு

இதுவும் நம்முடைய ஆற்றலுக்கு உதவும் ஒரு பழமாகும். ஆரஞ்சும் மற்ற சிட்ரஸ் பழங்களும் தாய்ப்பால் தருவதற்கு ஏற்ற அற்புதமான பழங்களாகும். கர்ப்பமாக இருந்ததை காட்டிலும் தாய்ப்பால் தரும்
அம்மாக்களுக்கு வைட்டமின் – C அவசியமாகிறது.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

 

7. முட்டை

நம்முடைய தினசரி புரதச்சத்து தேவையை முட்டை பூர்த்தி செய்கிறது. காலை வேளையில் இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். மதியம் ஆம்லெட் போட்டு கூட சாப்பிடலாம்.

 

8. முழு தானிய பிரெட்

தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு ஃபோலிக் அமிலம் அவசியமாகிறது. இது நம்மையும், நம்முடைய பிள்ளையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. முழு தானிய பிரெட்டுகளில் இந்த வித சத்து இருப்பதால் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

 

9. கீரைகள்

இன்னொரு அற்புதமான உணவு, வைட்டமின்-A சத்து நிறைந்த கீரை தான். இது நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் நல்லது. எப்போதும் கீரை எடுத்துக்கொள்வதை நாம் நிறுத்த கூடாது. இதனில் கால்சியம், வைட்டமின்-C, இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.

 

10. தண்ணீர்

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் நீர்ச்சத்து குறையாமல் கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். காஃபின் அடங்கியவை எடுத்துக்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

11. பட்டர் புரூட்

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் அவகடோ எனப்படும் பட்டர் புரூட் பழத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

 

12. ஆலிவ் ஆயில்

இதனை சேர்த்துக்கொள்ளும்போது தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு நல்லது.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #bbtamilfood #afterdeliveryfood #babychakratamil

A

gallery
send-btn