கர்ப்பிணிகளின் வட்ட தசை நார்களில் ஏற்படும் வலியால் பாதிப்பா?

cover-image
கர்ப்பிணிகளின் வட்ட தசை நார்களில் ஏற்படும் வலியால் பாதிப்பா?

இந்த ஆர்டிக்களில் வட்ட தசை நார்கள் என்றால் என்ன? இதனை எப்படி கண்டறிவது? எப்படி வராமல் தடுப்பது? இதற்கு என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை பார்க்கவிருக்கிறோம்.

 

வட்ட தசை நார்களில் வலி என்பது கூர்மையான வலியை நாம் உணர்வதாகும். இதனை நம்மால் கீழ் வயிறு அல்லது கால் கவட்டை அல்லது இரண்டு இடங்களிலுமே உணர முடியும். கர்ப்பமாக இருக்கும்போது பல பெண்கள் அவதிப்படும் ஒரு பிரச்சனை இதுவென்றாலும், இது குறித்து நாம் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

 

“கடலில் மிதக்கும் கப்பலும் அழகு! பனிக்குட நீரில் மிதக்கும் பிள்ளையும் அழகு!”

- பெஞ்சமின் பிராங்கிளின்

இந்த வட்ட தசை நார் வலி, இரண்டாவது மூன்று மாதங்களில் அதிகமாக காணப்படவும் வாய்ப்புள்ளது.

 

வட்ட தசை நார் வலி வர காரணம் என்ன?

நன்றாக தடித்த தசைநார், நம்முடைய பிள்ளையை சுற்றி சூழ்ந்து ஆதரவை அளிக்கும். அவற்றுள் ஒன்று தான் வட்ட தசை நார் எனப்படுவது.

இந்த வட்ட தசை நாரானது, கருவின் முன் பகுதி முதல் நம்முடைய கால் கவட்டை வரை இணைந்து காணப்படுகிறது. அதாவது இடுப்புடன் நம்முடைய கால்கள் இணையும் இடமாகும். இந்த தசை நார்கள் வழக்கமாக இறுகி, மெல்ல தளர்வடையும்.

நம்முடைய பிள்ளைகள் வளரும்போது இந்த வட்ட தசை நார்கள் விரிவடைகிறது. இதனால் ஒரு வித அசவுகரியம் நமக்கு காணப்படும்.

நாம் திடீரென உட்கார்ந்து எழுந்தாலோ அல்லது ஏதாவது செய்துக்கொண்டிருந்தாலோ இந்த தசை நார்கள் சுருங்கி விரிந்து வலியை ஏற்படுத்தும்.

 

இதன் அறிகுறிகள் என்னென்ன?

  • நாம் அசவுகரியமாக உணர்வோம். ஆனாலும் கர்ப்பமாக இருக்கும்போது இது பொதுவான ஒரு அறிகுறி தான்
  • கூர்மையான வலியை நாம் உணரலாம்
  • பொதுவாக நம்முடைய வலதுபக்கம் ஏற்படும், ஆனால் சிலருக்கு இரண்டு பக்கமுமே காணப்படவும் வாய்ப்புள்ளது
  • வலி தொடர்ந்து இல்லாமல் இருக்கும்

 

இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?

இந்த அசவுகரியத்தை குறைக்கும் வழிகளை நாம் இப்போது காண்போம்.

 

1. வலி நிவாரணி

மருத்துவர் ‘ஓகே’ சொன்னால் மட்டும் வலி நிவாரணியை நாம் இப்போது எடுத்துக்கொள்ளலாம்.

 

2. உடற்பயிற்சி

நம்முடைய வயிற்று தசைகளை வலுவாக்க உடற்பயிற்சி செய்யலாம். கர்ப்பகால யோகாவையும் நாம் செய்யலாம். நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் எந்த வித உடற்பயிற்சி இப்போது நல்லதென்பதை நாம் மருத்துவரிடம் மட்டுமே கேட்டறிய வேண்டும்.

 

3. அசைவுகள்

மெல்ல நம்முடைய பொஷிஷனை மாற்றவும். எந்த காரணத்துக்காகவும் அவசரப்பட்டு எந்த செயலையும் செய்ய கூடாது. இப்படி செய்வதனால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.

 

4. இடுப்பு தளர்வு

இருமல், தும்மல் அல்லது சிரிக்கும்போது கூட லேசாக வளைந்து இடுப்பை தளர்த்தி செய்யவும். வட்ட தசை நார்களை இழுத்துக்கொண்டு எதனையும் செய்ய கூடாது.

 

5. ஒத்தடம் கொடுத்தல்

ஹீட்டிங் பேடு அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்தல் மூலமாக இந்த வலியை நாம் குறைக்கலாம். இதனை நாம் செய்வது குறித்து முதலில் நம்முடைய மருத்துவரிடம் அனுமதி பெற வேண்டியது மிகவும் அவசியம். அதிகமான சூட்டை நம்முடைய பிள்ளைகளால் தாங்கவே முடியாது.

 

எப்போது மருத்துவரை நாம் பார்ப்பது?

கர்ப்பமாக இருக்கும்போது வலி அதிகமாக இருந்தால் நிச்சயம் நாம் மருத்துவரை பார்க்க வேண்டும். கீழ்காணும் அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால் மருத்துவரை அழைக்கலாம். அவை,

  • கடுமையான வலி
  • நிமிடங்களை கடந்தும் வலி இருத்தல்
  • காய்ச்சல்
  • உடல் குளிர்தல்
  • சிறுநீர் கழிக்கும்போது வலி
  • நடக்க சிரமம் கொள்ளுதல்

 

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#backpain #pelvicpain #firsttrimester #secondtrimester #thirdtrimester
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!