கர்ப்பமாக இருக்கும் போது தாய்ப்பால் தருவது குறித்து நாம் அறிய வேண்டியது என்ன?

cover-image
கர்ப்பமாக இருக்கும் போது தாய்ப்பால் தருவது குறித்து நாம் அறிய வேண்டியது என்ன?

இந்த பதிவில், ‘கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் தருவது பாதுகாப்பா? கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் ஆபத்து உள்ளது? கர்ப்பிணிகள் தாய்ப்பால் தருவதால் என்னவெல்லாம் நன்மை உள்ளது? கர்ப்பமாக இருப்பதால் பால் சுரப்பு குறையுமா? தாய்ப்பால் தருவதால் பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமா? தாய்ப்பால் தரும்போது கர்ப்பிணிகள் எதனை இப்போது தவிர்க்க வேண்டும்?’ போன்றவற்றை நாம் பார்க்கவிருக்கிறோம்.

 

கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் தருவது பாதுகாப்பா?

நாம் கர்ப்பமாக இருக்கும்போதும் நம்முடைய முதல் பிள்ளைக்கு தாய்ப்பால் தரலாம். இதனால், எந்தவொரு பாதிப்புமில்லை. ஆனாலும், நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய கலோரிகளில் கூடுதல் கவனம் நமக்கு தேவை. அது தான் நமக்கும், நம்முடைய இரண்டு பிள்ளைக்கும் நல்லது. கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் தர நினைத்தால், முதலில் நம்முடைய ஆரோக்கியம் குறித்து மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும்.

 

“தாய் பால் தருவதென்பது தனக்கும், தன் குழந்தைக்கும், பூமிக்கும் தாய் அளிக்கும் பரிசாகும்.”

 

கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் கொடுப்பதால் என்னவெல்லாம் ஆபத்து உள்ளது?

ஆரோக்கியமாக நாம் இருக்கும்போது, தாய்ப்பால் தருவதில் எந்தவித பிரச்சனையும் இருப்பதில்லை. ஒருவேளை கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பால் தர விரும்பினால், கீழ்காணும் விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவை,

 

 • முலைக்காம்பில் புண்
 • குமட்டல்
 • உடல் சோர்வு
 • பால் சுரப்பு குறைவாக இருத்தல்
 • தாய்ப்பாலின் நிறம், சுவை, திட மாற்றம்
 • காணப்படும் சுருக்கங்கள்

கர்ப்பிணிகள் தாய்ப்பால் தருவதால் என்னவெல்லாம் நன்மை உள்ளது?

கர்ப்பிணிகள் தாய்ப்பால் தருவது எளிதான காரியமல்ல. அதேபோல, இதனால் பல நன்மைகளும் நமக்குள்ளது. அவை என்னவென்பதை நாம் இப்போது காணலாம்.

 • நம் பிள்ளைக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 • கர்ப்பமாக இருக்கும்போதும் முதல் பிள்ளையுடன் அன்பை வெளிப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க முடியும்.
 • கர்ப்பமாக இருக்கும்போது உடல் சோர்வு நமக்கு இருக்கும். இதனை மறந்து நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள தாய்ப்பால் தருவது சிறந்த ஒன்றாகும்.
 • தாய்ப்பால் தருவதால் முதல் பிள்ளைகள், இப்போது பாதுகாப்பாக உணர்வார்கள்.
 • இரத்தநாள வீக்கம் வருவது குறையும்.

 

'பாட்டில் பால் பிள்ளைகள் வயிற்றை நிரப்புகிறது, ஆனால் தாய்ப்பால் அவர்களின் மனதையும் சேர்த்து நிரப்புகிறது.'

 

கர்ப்பமாக இருப்பதால் பால் சுரப்பு குறையுமா?

கர்ப்பமாக இருக்கும்போது பால் வரத்து குறைந்து காணப்படுவது பொதுவான ஒன்று தான். குறிப்பாக, நான்கு அல்லது ஐந்தாவது மாதங்களில் இப்படி இருக்கும். இதற்கு காரணம், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றமும், தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதுமாகும். கர்ப்பமாக இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, நம்முடைய முதல் பிள்ளையை அது பாதிக்குமா என்ற குழப்பம் நிறைய கர்ப்பிணிகளுக்கு உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், கர்ப்பமாக இருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஒருபோதும் நம்முடைய தாய்ப்பால் பருகும் பிள்ளையை பாதிப்பதில்லை.

 

முதல் பிள்ளைக்கு தாய்ப்பால் தருவதால் பிறக்கவிருக்கும் பிள்ளைக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமா?

பால் சரியாக சுரக்க, நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இது நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் நன்மையை தரும்.

 

தாய்ப்பால் தரும்போது கர்ப்பிணிகள் எதனை இப்போது தவிர்க்க வேண்டும்?

 • ஆரோக்கியமற்ற உணவை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
 • மாத்திரைகளை நாமாக எடுத்துக்கொள்ள கூடாது, நிச்சயம் மருத்துவர் பரிந்துரையின்றி நாமாக எதையும் எடுத்துக்கொள்ள கூடாது.
 • தாய்ப்பால் தரும் கர்ப்பிணி அம்மாக்கள், மூலிகை அல்லது வீட்டு வைத்தியத்தை மருத்துவர்கள் பரிந்துரையின்றி முயற்சி செய்யக்கூடாது.
 • மனப்பதட்டமும், மன அழுத்தமும் இப்போது நமக்கு இருக்கக்கூடாது.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#breastfeeding
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!