27 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
எப்போது என் பிள்ளைகள் தானாக உடை உடுத்திக்கொள்ள பழகுவார்கள்?
இந்த பதிவில், ‘உடை உடுத்திக்கொள்ளும் பழக்கம் எதற்காக உதவும்? தானாக உடை உடுத்திக்கொள்ள நாம் எப்படி அவர்களை ஊக்குவிப்பது? எவற்றை நாம் கவனிக்க வேண்டும்?’ போன்றவற்றை நாம் பார்க்கவிருக்கிறோம்.
இது உண்மையாகவே மெதுவாக கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் தான். எனினும், நம்முடைய பிள்ளைகள் 1 வயதாகும்போது (பன்னிரெண்டு மாதங்கள்) உடை உடுத்திக்கொள்வது குறித்த ஆர்வத்தை கொள்கின்றனர். அவர்களுக்கு இதற்காக நீண்ட காலத்திற்கு நம்முடைய உதவியானது தேவைப்படலாம். இப்போது அவர்கள், கையில்லாத உடை அணிய கைகளை தூக்க செய்வார்கள். அதேபோல, ஷூக்களை மாட்டிவிடும்போது கால்களையும் மெல்ல தூக்குவார்கள்.
உடை உடுத்திக்கொள்ளும் பழக்கம் எதற்காக உதவும்?
அவர்கள் வளர வளர உடை உடுத்திக்கொள்ளும் பழக்கத்தை நன்றாகவே கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் தானாக உடை உடுத்திக்கொள்ளும்போது கைகள் மற்றும் கால்கள் வலுப்பெற தொடங்கும். உடைகளை உடுத்திக்கொள்ள விரல்களை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் அவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
பதினெட்டு மாதங்களில், நம்முடைய பிள்ளைகள் ஷூ, ஷாக்ஸ், தொப்பி போன்றவற்றை கழட்ட கற்றுக்கொள்கின்றனர். அதாவது, அவற்றை பிடித்திழுத்து கழட்டி எறிய பழகுவார்கள். ஆனால், அதனை மீண்டும் உடுத்த அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
இரண்டு வயதிலும், மூன்று வயதிலும் நம்முடைய பிள்ளைகள் ஆடையிலுள்ள ஷிப்பை எப்படி இழுப்பது என்பதையும், தொப்பியை எப்படி பிடித்திழுப்பது என்பதையும் கற்றுக்கொண்டிருப்பார்கள். நான்கு வயது வரைக்கும் தானாக உடை உடுத்திக்கொள்ள அவர்களுக்கு சிரமமாக தான் இருக்கும்.
தானாக உடை உடுத்திக்கொள்ள நாம் எப்படி அவர்களை ஊக்குவிப்பது?
எவற்றை நாம் கவனிக்க வேண்டும்?
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A