தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

cover-image
தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு சில உணவை சுவைத்து பார்க்க ஆசை இருக்கும். அப்படி ஒரு உணவு தான் இந்த தலப்பாக்கட்டி பிரியாணி. ஒருமுறையாவது இதனை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டு தான் பார்க்கலாமே.

 

கர்ப்பமாக இருக்கும்போதும், தாய்ப்பால் கொடுக்கும்போதும் பிரியாணி சாப்பிடலாமா?

காரம் போன்றவற்றை குறைத்து வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம். ஆனால், ஹோட்டல்களில் பல வித செயற்கை பொருட்கள் சேர்க்க வாய்ப்புள்ளது என்பதால் கர்ப்பிணிகளும், தாய்ப்பால் தரும் அம்மாக்களும் அதனை தவிர்ப்பது நல்லது. பிரியாணி சாப்பிட ஆசை இருந்தால், முதலில் இது குறித்த அட்வைஸ் நம்முடைய டாக்டரிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டும்.

 

தேவையான பொருட்கள்

1 ½ கப் - சீரக சம்பா அரிசி

2 ½ அல்லது 3 கப் (தேவைக்கேற்ப) - சுடு தண்ணீர்

500 முதல் 600 கிராம் - சிக்கன் துண்டு (எலும்புடன் நடுத்தர பீஸ்)

1 ½ டேபிள்ஸ்பூன் - இஞ்சி (நறுக்கியது)

1 ½ டேபிள்ஸ்பூன் - பூண்டு (நறுக்கியது)

6 முதல் 8 - பச்சை மிளகாய் (நறுக்கியது)

15 முதல் 20 - சின்ன வெங்காயம்

3 டேபிள்ஸ்பூன் - எண்ணெய்

2 டேபிள்ஸ்பூன் -நெய்

⅓ கப் - தயிர்

1 சிட்டிகை - மஞ்சள் தூள்

¾ டீஸ்பூன் - மிளகாய் தூள்

¼ கப் - சுடு தண்ணீர்

⅓ கப் - கொத்தமல்லி (நறுக்கியது)

⅓ கப் - புதினா (நறுக்கியது)

சுவைக்கேற்ப - உப்பு

1 டேபிள்ஸ்பூன் - நெய்

1 டேபிள்ஸ்பூன் - லெமன் ஜூஸ்

 

அரைக்க தேவையான மசாலா பொருட்கள்

2 டீஸ்பூன் - தனியா

½ டீஸ்பூன் - சோம்பு

½ டீஸ்பூன் - சீரகம்

5 - பச்சை ஏலக்காய்

5 - கிராம்பு

1 ½ இன்ச் - இலவங்கப்பட்டை (உடைத்தது)

5 - முந்திரி

⅛ டீஸ்பூன் - ஜாதிக்காய்

1 - அன்னாசிப்பூ (சிறியது)

1 டீஸ்பூன் - கல்பாசி

2 - கசகசா பட்டை (சிறியது)

 

செய்வது எப்படி?

மசாலா பொருட்களை நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்யையும், 1 டேபிள்ஸ்பூன் நெய்யையும் குறைந்த சூட்டில் சுட வைக்கவும். அதே சமயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனோடு சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததுமே, பிரியாணி சமையல் பாத்திரத்தில் வைத்து விடவும்.

 

இப்போது வெங்காயத்தை பிரியாணி சமையல் பாத்திரத்தில் கொட்டி பொன்னிறமாகும் வரை (பச்சை வாடை போகும் வரை) 12 முதல் 15 நிமிடங்களுக்கு வதங்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை இதனோடு சேர்த்து ஒரு நிமிடத்துக்கு வேக விடவும். குறைகுறைப்பாக இருந்தால், 1 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அடுப்பை குறைவான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.

 

இப்போது சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு கிண்டிவிடவும். சில நிமிடங்களில் சிக்கன் வதங்கிவிடும். பிறகு தயிர் சேர்த்துக்கொள்ளவும். அதனோடு, நறுக்கிய புதினா மற்றும் கொத்துமல்லியையும் சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு கிண்டவும். பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிண்டவும். பின்னர், ¼ கப் சுடு தண்ணீரை சேர்க்கவும். இப்போது மூடி போட்டு மூடி 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். சிக்கன் நன்றாக வெந்தவுடன், சுவைக்கு ஏற்ப உப்பை சேர்க்கவும்.

 

இப்போது சிக்கன் துண்டுகளை பிளேட்டில் வைத்துவிட்டு கிரேவி எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கவும். நான் 1 ½ கப் சீரக சம்பா அரிசிக்கு ½ கப் கிரேவி எடுத்துக்கொண்டேன். அப்படி என்றால் 3 கப் தண்ணீரை நாம் சேர்க்க வேண்டும். அதனால் இப்போது 2 ½ கப் சுடு தண்ணீரை பிரியாணி சமையல் பாத்திரத்தில் சேர்த்து கொதிக்க விடவும்.

 

பிறகு, சிக்கன் துண்டுகளை மறுபடியும் கிரேவியில் சேர்த்து கிண்டவும். 1 முதல் 2 நிமிடங்களுக்கு வேகவிட்டு உப்பை சரி பார்க்கவும். இப்போது கழுவிய சீரக சம்பா அரிசியை பிரியாணி சமையல் பாத்திரத்தில் சேர்க்கவும். 1 டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிண்டவும். அடுப்பை முதலில் மிதமான சூட்டில் வைத்து பிறகு ஃபுல்லாக வைத்து 4 முதல் 5 நிமிடங்களுக்கு கிண்டவும். பிறகு ஒரு 6 நிமிடங்களுக்கு மிக குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து கிண்டவும். சாதத்தை கிண்டிவிட்டபடியே இருக்கவும். இல்லையேல் அடி பிடித்துவிடும். இப்போது பிரியாணி பிரியாணி சமையல் பாத்திரத்தை அலுமினியம் தாள் போட்டு, மூடியை வைத்து மூடிவிடவும். அதன்மேல் ஒரு வெயிட்டையும் வைத்துவிட வேண்டும்.

 

இப்போது பிரியாணி சமையல் பாத்திரத்தை, முதலில் மிதமான சூட்டில் வைத்து பிறகு குறைவான சூட்டில் வைத்துவிட வேண்டும். 8 முதல் 10 நிமிடங்களுக்கு அடுப்பை குறைவான சூட்டில் வைத்து பிரியாணியை வேக விட வேண்டும். அதன்பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, 10 முதல் 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். பிரியாணி பிரியாணி சமையல் பாத்திரத்தை திறந்து பாருங்கள். எல்லாம் முழுமையாக சேர்ந்து விட்டதா என்பதை பார்த்து, மறுபடியும் மூடி போட்டு மூடி 5 முதல் 6 நிமிடங்களுக்கு விட்டுவிடவும்.

 

அவ்வளவு தான் சூடான சுவையான தலப்பாக்கட்டி பிரியாணி இதோ ரெடி. இதனோடு கூடுதலாக தயிர், ஊறுகாய், அப்பளம் மற்றும் தாளிச்சா போன்றவை தொட்டுக்கொண்டு சாப்பிட நாக்கில் நிச்சயம் டேஸ்ட் ஒட்டிக்கொள்ளும்.

 

சென்னையில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி

இந்த ஹோட்டலில் தரமான உணவுகளை சிறந்த சேவையுடன் வழங்குகிறார்கள். இங்கே என்னவெல்லாம் ஸ்பெஷலாக செய்து தரப்படுகிறது என்பதை இவர்களின் பிரத்யேகமான வெப்சைட்டில் நம்மால் காண முடிகிறது. ஆன்லைனிலும் ஆர்டர் செய்து குடும்பத்தோடு வீட்டிலேயே அமர்ந்து நம்மால் சாப்பிட முடியும். இயக்குனர் ஷங்கர், சிம்பு, கவுதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களை இங்கு அடிக்கடி நம்மால் பார்க்க முடியும். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிக்காக ஒரு பிரத்யேக வாட்சப் குரூப்பும் இருக்கிறது. இதன் மூலமாகவும் நம்மால் இருக்கும் இடத்தில் இருந்தே ஆர்டர் செய்து மனமாற சாப்பிட்டு மகிழலாம்.

கிளைகள்: சென்னை சென்ட்ரல், பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு, நுங்கம்பாக்கம், அண்ணா நகர், பெரம்பூர், T.நகர், சாந்தி காலனி, அசோக் நகர், பெசன்ட் நகர், முகப்பேர், கிண்டி, ராமாபுரம், பெருங்குடி, கொட்டிவாக்கம், வேளச்சேரி, வளசரவாக்கம், அம்பத்தூர், OMR, குரோம்பேட்டை, மேடவாக்கம், பூந்தமல்லி, கேம்ப் ரோடு, தாம்பரம், நாவலூர், வண்டலூர், பாடூர், காஞ்சிபுரம் என முக்கிய பிற மாநிலங்களிலும் இதன் கிளைகள் இருப்பது, திண்டுக்கல் தலப்பாக்கட்டியின் வளர்ச்சியை உணர்த்துகிறது.

 

https://thalappakatti.com/menu

 

நாம் சுவைத்து பார்க்க வேண்டிய பிரியாணி வகைகள் என்னென்ன?

  • கம்புரி பிரியாணி
  • ஆம்பூர் பிரியாணி
  • காஷ்மீரி பிரியாணி
  • பாம்பே பிரியாணி
  • சிந்தி பிரியாணி
  • தளசேரி பிரியாணி
  • லக்னோ பிரியாணி
  • ஹைதராபாதி பிரியாணி
  • கொல்கத்தா பிரியாணி
  • மலபார் பிரியாணி

 

சாதம் சாப்பிடாமல் கூட மனிதன் இருந்துவிடுவான். ஆனால், பிரியாணியின் சுவை இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. சாதம் சாப்பிடுவதற்கு, சாம்பார், ரசம், விதவிதமான குழம்பு, கூட்டு, பொரியல், தொக்கு, அப்பளம், பாயாசம் என பல விதமான வெரைட்டி தேவைப்படுகிறது. ஆனால், பிரியாணி என்ற சொல்லே போதும். நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.

#biryani #instantrecipes
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!