பாடம் நடத்த டீச்சர்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் உதவுமா?

cover-image
பாடம் நடத்த டீச்சர்களுக்கு பதிலாக கம்ப்யூட்டர் உதவுமா?

இந்த பதிவில், ‘கம்ப்யூட்டரை கொண்டு பிள்ளைகள் கற்றுவிட முடியுமா? கம்ப்யூட்டர் கொண்டு பயில்வதால் கிடைக்கும் நன்மைகள், தீமைகள் என்ன?’ என்பதனை பார்க்கவிருக்கிறோம்.

இது போன்ற ஒரு சூழலை நாம் இதற்கு முன்னால் எதிர்பார்த்தது கிடையாது தான். ஆனால், இந்த கொரோனா நம்முடைய வாழ்வையே புரட்டி போட்டுள்ளது என்பதே உண்மை. இன்றைய நாளில் தொழில்நுட்பம் கொண்டு பலவற்றை நம்மால் மாற்றிவிட முடியும். கைப்பட எழுதுவது குறைந்துவிட்டது, கம்ப்யூட்டரில் தான் கணக்கு வழக்கை பார்க்கிறோம். கையால் எழுதி கொடுத்த பில்களுக்கு பதிலாக இப்போது கம்ப்யூட்டர் பில். இப்படி எல்லாமே கம்ப்யூட்டர் மயமாக இருந்துவர, கொரோனாவின் காரணமாக ஆன்லைன் வகுப்பென்பது அத்தியாவசியம் ஆனது. இது சரிதானா? இது நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கைக்கு வளர்ச்சியை தருமா? வீழ்ச்சியை தருமா? என்பதை நாம் இப்போது காண்போம் வாருங்கள்.

கம்ப்யூட்டரை கொண்டே பிள்ளைகள் கற்றுவிட முடியுமா?

உண்மை என்னவென்றால், இதனில் நன்மை தீமைகள் இரண்டுமே உள்ளது. இப்போது பாதகம் குறித்து நாம் பார்ப்போம்.

  • பிள்ளைகளுக்கு எப்போதும் கவனத்திறனை அதிகரிக்க உதவுவது கண் தொடர்பு தான். அவர்கள் கண்கள் பார்த்து பேசும்போதும், செயலாற்றும்போதும் வேகமாக கற்றுக்கொள்கின்றனர்.
  • லேப்டாப் அல்லது மொபைல் போனை பிள்ளைகள் வெகு நேரத்துக்கு பார்க்கும்போது கண் கோளாறு வர வாய்ப்புள்ளது. முன்பெல்லாம், ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும், கண் கண்ணாடி போட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால், இன்றைய சூழலில் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு பார்வை கோளாறு வர வாய்ப்பு அதிகமுள்ளது.
  • கம்ப்யூட்டர் மூலமாக பிள்ளைகள் கற்கும்போது, உணர்வுகளை புரிந்துக்கொள்வதில் சிரமம் உண்டாகிறது. உணர்வுகளை புரிந்துக்கொள்ள தொடுதிரைகள் ஒருபோதும் உதவுவதில்லை.
  • ஒரு சில பெற்றோர்கள் கூறுவது என்னவென்றால், மாதா, பிதா, குரு, தெய்வம். அதாவது பெற்றோர்களுக்கு அப்புறம் நாம் நம்பிக்கை வைக்க வேண்டியது பிள்ளைகளின் ஆசிரியர்கள் மேல் தான். கம்ப்யூட்டரை எப்படி நம்மால் குருவாக ஏற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறுகிறார்கள்.
  • ஆசிரியர்கள் எப்போதும் புத்தகத்தில் உள்ளவற்றை காட்டிலும், பல உதாரணங்களை கூறுவார்கள். பொதுவாக அவர்கள் எடுக்க போகும் வகுப்பு குறித்து முன்பே தங்களை தயார்படுத்திக்கொண்டு சென்றாலும், அங்கே சென்றதும் பல புதிய உதாரணங்களையும் கூற தொடங்குவார்கள். ஆனால், கம்ப்யூட்டர் கல்வியில் அது சாத்தியமில்லை என்கின்றனர் சில ஆசிரியர்கள்.
  • கம்ப்யூட்டரில் கற்கும்போது பள்ளிக்கு செல்லும் ஆர்வம் பிள்ளைகளுக்கு குறைந்துக்கொண்டே வருவதாகவும் பல பெற்றோர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கம்ப்யூட்டர் கொண்டு பயில்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • பிராக்டிக்கலாக யோசித்து பார்த்தால் நாம் கணினி யுகத்தில் இருக்கிறோம் என்பதே உண்மை. இப்போது, நாம் டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
  • கம்ப்யூட்டர் மூலமாக கற்கும்போது கற்றலுக்கான நேரம் குறைவென்றும் சொல்லப்படுகிறது. ஆம், முன்பெல்லாம் ஒரு படத்தை கரும்பலகையில் ஆசிரியர்கள் வரைவார்கள். ஆனால், தற்போது, ஏற்கனவே வரைந்து வைத்த அல்லது இருக்கும் வரைப்படங்களை மாணவர்களிடம் பகிர்ந்து ஆசிரியர்கள் நேரத்தை சேமிக்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகிறது.
  • நேரடியாக பாடம் நடத்தும் போது ஆசிரியர்களின் ஆற்றல் அதிகளவில் செலவிடப்படுவதாகவும், அதுவே ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக அவர்கள் குறைவான ஆற்றலை செலவிட்டு நிறைவான மனதுடன் பாடம் நடத்த முடிவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
  • ஆசிரியர்கள் நேரடியாக பாடம் நடத்தும்போது அலுப்பு கொள்ளும் மாணவர்கள், ஆன்லைனில் சுவாரஸ்யமாக நடத்தும்போது கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் கல்வி, ஆஃப்லைன் கல்வி இரண்டிலுமே நன்மை, தீமைகள் என பல இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை அவை எப்படி பிராகாசமாக்கும் என்பதறிந்து நாம் செயல்படுவது நல்லது.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #atoddlerthing
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!