• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது தங்களையும், தங்கள் கருவில் வளரும் பிள்ளையையும் கவனித்துக்கொள்வது எப்படி?
கர்ப்பமாக இருக்கும் போது தங்களையும், தங்கள் கருவில் வளரும் பிள்ளையையும் கவனித்துக்கொள்வது எப்படி?

கர்ப்பமாக இருக்கும் போது தங்களையும், தங்கள் கருவில் வளரும் பிள்ளையையும் கவனித்துக்கொள்வது எப்படி?

17 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இந்த பதிவில், ‘கர்ப்பிணிகளின் உடல் நலம் மேம்பட செய்ய வேண்டியவை எவை? செக்கப்பில் எவை எல்லாம் பொதுவாக பார்க்கப்படும்? கர்ப்பமாக இருக்கும்போது எவ்வளவு எடை நாம் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான மருந்துகளை நாம் எடுத்துக்கொள்வது? எந்த மாதிரியான வைட்டமின்களை நாம் எடுத்துக்கொள்வது? உடலுறவு கொள்ளலாமா?’ போன்றவற்றை பார்க்கவிருக்கிறோம்.

கருவில் இருக்கும்போதே தன்னுடைய பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டுமெனவே ஒவ்வொரு தாயும் நினைப்பார். ஒவ்வொரு விஷயத்தை செய்யும் முன்பு ஓராயிரம் முறை மனதில் யோசித்து முடிவெடுப்பவர் கர்ப்பிணி பெண் மட்டும் தான். கர்ப்பமாக இருக்கும்போது உணவு பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்தும் நாம், எப்போது மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டுமென்பதையும் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். நமது கர்ப்ப காலம் ஆரோக்கியமாக இருக்கும்போது, பிறக்கும் பிள்ளையும் ஆரோக்கியத்துடன் நிச்சயம் பிறக்க செய்கிறார்கள்.

கர்ப்பிணிகளின் உடல் நலம் மேம்பட செய்ய வேண்டியவை எவை?

  • நீங்கள் கர்ப்பம் என அறிந்தவுடன் தாமதிக்காமல் டாக்டரை ஆலோசிக்கவும்.
  • உங்களின் மெடிக்கல் ரெக்கார்டை பார்த்தே டாக்டர் அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்வார்.
  • அதேபோல உங்களின் உடலில் என்ன மாதிரியான அறிகுறிகள் காணப்படுகிறது என்பதையும் அவர் கேட்டறிந்துக்கொள்வார்.
  • நம்முடைய முதல் செக்கப்பில் யூரின் மற்றும் இரத்தம் எடுத்து பரிசோதிக்கப்படும். நம் யூரினில் பாக்டீரியா உள்ளதா? இரத்த சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது? புரதச்சத்து அளவு சரியாக உள்ளதா? போன்றவை பார்க்கப்படும்.
  • இரத்த பரிசோதனை மூலமாக, இரத்த செல்களின் எண்ணிக்கை, இரத்த வகை குறித்த தகவல், இரும்புச்சத்து அளவு, தொற்று ஏதேனும் உள்ளதா போன்றவை பார்க்கப்படும்.

நம்முடைய மெடிக்கல் ரெக்கார்டை கொண்டு இன்னும் ஒரு சில பரிசோதனைகளும் செய்யப்படும். அவை,

  • பெல்விக் எக்ஸாம் மூலமாக கர்ப்பப்பை அளவு மற்றும் வடிவத்தை பார்ப்பார்கள்.
  • கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும், பிரச்சனை எதுவும் உள்ளதா என்பதையும் கவனிப்பார்கள்.
  • பிள்ளைகளின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்பதையும் பார்ப்பார்கள்.

முதல் முறை ஆலோசனைக்கு பிறகு, 4 வாரத்திற்கு ஒருமுறை நாம் ஆலோசனை பெற வேண்டி வரும். அதேபோல ஏழாவது மற்றும் எட்டாவது மாதங்களில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நம்மை வர சொல்லவும் வாய்ப்புள்ளது. கடைசி மாதம், வாரம் ஒரு முறை நாம் செல்ல வேண்டியும் வரும்.

எவை எல்லாம் பொதுவாக பார்க்கப்படும்?

ஒவ்வொரு முறை பரிசோதனைக்கு நாம் செல்லும்போதும், எடை, இரத்த அழுத்தம், யூரின் ஆகியவை பரிசோதிக்கப்படும். நம்முடைய பிள்ளையின் இதயத்துடிப்பு கவனிக்கப்படும். கர்ப்பப்பை உயரமும் இருபது வாரம் கழித்து கவனிக்கப்படும். நமக்கு எந்தவொரு பிரச்சனை என்றாலும் மருத்துவர் ஆலோசனையை கட்டாயம் பெறுவது நல்லது.

கர்ப்பமாக இருக்கும்போது எவ்வளவு எடை நாம் இருக்க வேண்டும்?

இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும் என்பதால், நாம் மருத்துவர் ஆலோசனையை பெற்று அதன்படி எடையை ஏற்றுவது அல்லது குறைப்பது குறித்து முடிவு செய்யலாம். நாம் எடை குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ பிரசவத்தின்போது கொஞ்சம் கூடுதல் கடினத்தை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாமா?

எந்தவொரு மருந்தையும் மருத்துவர் பரிசோதனை இன்றி நாமாக எடுத்துக்கொள்ள கூடாது. இப்போது நாம் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது பக்க விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வைட்டமின்களை நாம் எடுத்துக்கொள்ளலாமா?

இப்போது நமக்கும், நம்முடைய கருவில் வளரும் பிள்ளைக்கும் ஃபோலிக் அமிலம் என்பது அவசியமாகிறது. இது பிள்ளைகளின் மூளையை மேம்பட வைக்கும் ஒரு வைட்டமினாகும். இதனை நாம் கர்ப்பமாவதற்கு முன்பே எடுத்துக்கொள்ளவும் தொடங்கலாம். மருத்துவர் பரிந்துரையுடன் இந்த வைட்டமினை நாம் தினமும் எடுத்துக்கொள்ள செய்யலாம்.

உடலுறவு கொள்ளலாமா?

உடலுறவு கொள்வதால் கருவில் இருக்கும் பிள்ளைக்கு ஆபத்து கிடையாது. ஆனாலும், நம்முடைய உடல் நலம் பொறுத்தே இது அமையுமென்பதால், மருத்துவர் ஆலோசனை கட்டாயம் வேண்டும். உடலுறவு கொள்ளும் நிலைகள் குறித்தும் நாம் இப்போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#tamilbabychakra #bbctamil #allaboutpregnancy

A

gallery
send-btn